ஐரோப்பியக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து மற்றும் ரஷியா அணிகள் விளையாடிய போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததன் மூலம் போட்டி சமநிலையில் முடிந்தது.

15ஆவது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.

தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் 2/1 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை (‘ஏ’பிரிவு) வீழ்த்தியது.

ரினொவ்ன் கழகத்தின் கனவு வீணானது; சம்பியனானது இராணுவக் கழகம்

“பி” பிரிவில் அதிகாலை நடந்த போட்டி ஒன்றில் இங்கிலாந்து- ரஷியா அணிகள் மோதின.

முதல்பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்து முன்னிலை பெற்றது. எரிக்டையர் இந்த கோலை அடித்தார். பதில் கோல் அடிக்க ரஷியா போராடியது.

ஆட்டம் முடியும் தருவாயை நெருங்கிக் கொண்டிருந்தபோது ரஷியா பதில் கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து சமன் செய்தது. 92ஆவது நிமிடத்தில் வாசிலி பெரஸ் டஸ்சி இந்த கோலை அடித்தார். இதனால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வேல்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. வேல்ஸ் அணியில் கராத் பாலே (10ஆவது நிமிடம்), ராபின்சன் (81ஆவது நிமிடம்) ஆகியோரும் சுலோவாக்கியா அணியில் டுடாவும் (61ஆவது நிமிடம்) கோல் அடித்தனர்.

‘ஏ’ பிரிவில் நடந்த போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தியது.

இன்று நடைபெறும் போட்டிகளில் போலந்து-வடக்கு அயர்லாந்து, ஜெர்மனி-உக்ரைன் (‘சி’ பிரிவு), துருக்கி-குரோஷியா (‘டி’ பிரிவு) அணிகள் மோதுகின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்