அஷேன் பண்டார, ஹரீன் புத்திலவின் சிறப்பான ஆட்டத்தினால் அலோசியஸ் கல்லூரிக்கு வெற்றி

200
u19 Cricket - December 28th

19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான டிவிசன் 1 சிங்கர் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில், இன்று 2 போட்டிகள் நடைபெற்றன.

புனித திரித்துவ கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண போட்டிகளுக்கான டிவிசன் 1, குழு A பிரிவுக்காக, இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டி கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இன்று ஆரம்பித்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித திரித்துவ கல்லூரி முதலில் துடுப்பாட்டதினை தெரிவு செய்தது. அதனை அடுத்து களமிறங்கிய அவ்வணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய ஹசித்த போயகொட மற்றும் ஹசிந்த்த ஜயசூரிய முறையே 35, 31 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர்.

சிறப்பாக பந்து வீசிய உமேஷ்க டில்ஷான் 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய நாலந்த கல்லூரி சிரற்ற காலநிலை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்படும் பொழுது 15 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம் :

புனித திரித்துவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 142 (48.4) – ஹசித்த போயகொட 35, ஹசிந்த்த ஜயசூரிய 31, உமேஷ்க டில்ஷான் 5/24, தசுன் செனவிரத்ன 2/11  

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்க்ஸ்): 15/2 (8.1)


புனித செர்வதியஸ் கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி

19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண போட்டிகளுக்கான டிவிசன் 1 பிரிவில் இரண்டாம் நாளாக நடைபெற்ற இந்த போட்டியில் புனித அலோசியஸ் கல்லூரி மூன்று விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

குறித்த போட்டியின் முதல் நாளான நேற்று(27) நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித அலோசியஸ் கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித செர்வதியஸ் கல்லூரி முதல் இன்னிங்சில் ஹரீன் புத்திலவின் பந்து வீச்சில் சிக்குண்டு 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கூடிய ஓட்டங்களாக சுபுன் கவிந்து 45 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம் சிறப்பாக பந்து வீசிய ஹரீன் புத்தில 26 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாட களமிறங்கிய அலோசியஸ் கல்லூரி அஷேன் பண்டாரவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் 222 ஓட்டங்களை குவித்து 99 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. சிறப்பாக துடுப்பாடிய அஷேன் பண்டார 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். சசிக துல்ஷான் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 99 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் களமிறங்கிய புனித செர்வதியஸ் கல்லூரி இரண்டாவது இன்னிங்சுக்காக 83.2 ஓவர்களில் 256 ஓட்டங்களை பெற்று 157 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது,

சந்தரு நெத்மின கூடிய ஓட்டங்களாக 79 ஓட்டங்களை பதிவு செய்த அதே நேரம் பந்து வீச்சில் ஹரீன் புத்தில மீண்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய அலோசியஸ் கல்லூரி  23 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம் :

புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்): 123 (31.5) – சுபுன் கவிந்து 45, சந்தரு நெத்மின 31, ஹரீன் புத்தில 7/26, கவிஷ்க்க தில்ஷான் 2/35

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 222 (56) – அஷேன் பண்டார 126, ஹரீன் புத்தில 25, சசிக துல்ஷான் 3/42, சந்தரு நெத்மின 2/35

புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை (இரண்டாம் இன்னிங்ஸ்): 256 (83.2) –  சந்தரு நெத்மின79, முதித்த ஹஷான் 46, சுபுன் கவிந்து 39, இசுறு தல்தவத்த 39, கேசர நுவந்த 28, ஹரீன் புத்தில 3/66, ரவிந்து சஞ்சன 2/39, கவிஷ்க தில்ஷான் 2/35

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (இரண்டாம் இன்னிங்ஸ்): 157/7 (23) – நவிந்து நிர்மல் 38*, பசிந்து நாணயக்கார 28, இசுறு தல்தவத்த 3/63