IPL இலிருந்து விலகினார் ஜொப்ரா ஆர்ச்சர்

Indian Premier League - 2021

149
BCCI

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் நடப்பு இந்தியன் ப்ரீமியர் (IPL) தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

முழங்கை காயத்தால் அவதிப்பட்ட 26 வயதான ஜொப்ரா ஆர்ச்சர், இந்தியாவுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு நாடு திரும்பியதுடன், கையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்

IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

இதனையடுத்து சமீபத்தில் பயிற்சியைத் தொடங்கிய அவர் இம்முறை IPL தொடரின் கடைசி கட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான IPL தொடரில் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர் IPL போட்டிகளுக்காக இந்தியா வரமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது

இதனிடையே, சசெக்ஸ் கழகத்துடன் இணைந்து ஜொப்ரா ஆர்ச்சர் அடுத்த வாரம் முதல் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும், அவர் பிரச்சினையின்றி தொடர்ந்து பந்துவீசினால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

IPL தொடரிலிருந்து லியாம் லிவிங்ஸ்டன் திடீர் விலகல்

ஆனால், அவர் எந்தப் போட்டியில் விளையாடுவார் என்பதை பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் சபை முடிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரரும் இங்கிலாந்தைச் சேர்ந்த சகலதுறை வீரருமான பென் ஸ்டோக்ஸ் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக பென் ஸ்டோக்ஸ் IPL தொடரிலிருந்து விலகிக் கொண்டார்

அதேபோல, ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த மற்றுமொரு இங்கிலாந்து வீரரான லியாம் லிவிங்ஸ்டனும், தனிப்பட்ட காரணங்களுக்காக IPL போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பியிருந்தார்

தற்போது அந்த அணியின் மிக முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர், IPL தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது

IPL கிரிக்கெட்டில் தடம்பதித்த இந்த சேத்தன் சக்காரியா யார்?

இம்முறை IPL தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏற்கனவே பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டிலும் சொதப்பி வருகிறது

இதன்காரணமாக இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி ஒரு வெற்றி, 3 தோல்விகள் என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…