ஆறாவது டெஸ்ட் போட்டியில் உலக சாதனையை சமன் செய்த ரிஷாப் பண்ட்

10
Image Courtesy - Getty Image

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான விக்கெட் காப்பாளராக செயற்பட்டு வரும் இடது கை துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பண்ட் தனது 6ஆவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் காப்பாளராக உலக சாதனை ஒன்றை (3ஆவது வீரராக) சமன் செய்துள்ளார்.

விறுவிறுப்பான முதல் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள….

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது இன்று (10) நிறைவுக்கு வந்தது. கடந்த 6ஆம் திகதி அடிலெய்ட்டில் ஆரம்பமான இப்போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி புதிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்றைய போட்டிக்கு முன்னராக அவுஸ்திரேலிய மண்ணில் 11 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள இந்திய அணி 9 தொடர்களில் தோல்வியை தழுவியுள்ள அதேவேளை, எஞ்சிய 2 தொடர்களும் சமநிலையிலேயே நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் தொடரின் முதல் போட்டியில் தனது கன்னி டெஸ்ட் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது.

இதேவேளை, இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் பெறும் 6ஆவது டெஸ்ட்வெற்றி இதுவாகும். இறுதியாக, 2008ஆம் ஆண்டு அணில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி ஆஸியில் டெஸ்ட் வெற்றியொன்றைப் பெற்றிருந்தது. எனவே, இந்த வெற்றி இந்திய அணிக்கு 10 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் கிடைத்த வெற்றியாக கருதப்படுகின்றது.

இரண்டு சாதனைகளை நிலைநாட்டிய கோஹ்லிக்கு ஒரு மோசமான பதிவு

இந்திய அணித்தலைவரும், முன்னணித் துடுப்பாட்ட வீரருமான….

இந்திய அணியின் இந்த வெற்றியானது, குறைந்த ஓட்டத்தில் பெற்ற 3ஆவது வெற்றியாகும். இதற்கு முன்னராக இங்கிலாந்து அணியை 28 ஓட்டங்களினாலும், அவுஸ்திரேலிய அணியை 13 ஓட்டங்களினாலும் வீழ்த்தியதே இந்திய அணியின் குறைந்த ஓட்ட டெஸ்ட் வெற்றியாக அமைந்துள்ளது.

இந்த போட்டியில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் பெற்று, டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளராக செயற்பட்ட இளம் வீரர் ரிஷாப் பண்ட் புதிய உலக சாதனை ஒன்றை 3ஆவது விக்கெட் காப்பாளராக சமன் செய்துள்ளார்.

21 வயதுடைய ரிஷாப் பண்ட் ஒரு போட்டியில் அதாவது, இன்று நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் காப்பாளராக 11 பிடியெடுப்புக்களை நிகழ்த்தி குறித்த உலக சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் நுழைந்து 4 மாதங்களில், மிக இள வயதில் சமன் செய்துள்ளார்.

போட்டியில் 323 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் 8ஆவது விக்கெட்டாக மிச்செல் ஸ்டாக்கின் விக்கெட் வீழ்த்தப்படும் போது பண்ட் இந்த சாதனையை சமன் செய்திருந்தார்.

இதுவரையில், ஒரு டெஸ்ட் போட்டியில் 11 பிடியெடுப்புக்களே சாதனையாக அமைந்திருந்தது. இதனை இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் ஜெய்க் ரெஸல் 1995ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராகவும், தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் ஏபி டி வில்லியஸ் 2013ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் அணிக்கெதிராகவும் நிகழ்த்தியிருந்தனர்.

இதேவேளை, இந்திய அணி சார்பாக விக்கெட் காப்பாளராக ஒரே போட்டியில் அதிக பிடியெடுப்புக்களை நிகழ்த்திய வீரர் என்ற பெருமையை ரிஷாப் பண்ட் தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக விரித்திமான் சாஹ் 10 பிடியெடுப்புக்களை நிகழ்த்தியதே சாதனையாக அமைந்திருந்தது.

இதுவரையில் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷாப் பண்ட் 31 பிடியெடுப்புக்களை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் உத்தரகாண்ட பிரதேசத்தில் 1997ஆம் ஆண்டு பிறந்த ரிஷாப் பண்ட், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோருக்கான உலக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். அதன் மூலமாக வருடா வருடம் இந்தியாவில் நடத்தப்படும் .பி.எல் போட்டிகளில் 2016ஆம் உள்வாங்கப்பட்டார்.

ஹிம்மத் சிங்கின் சதத்தோடு இலங்கையை வீழ்த்திய இந்திய வளர்ந்து வரும் அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட்…..

.பி.எல் போட்டிகளில் துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் சிறப்பாக பிரகாசித்த ரிஷாப் பண்டுக்கு முதன் முதலாக 2017ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய தேசிய அணிக்கான அறிமுகம் கிடைத்தது.

அதன் பின்னர், 2018 ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் போட்டிக்கான அறிமுகம் கிடைத்தது. ஒருநாள் போட்டிக்கான அறிமுகம் 2018 ஒக்டோபர் மாதம் கிடைத்திருந்தது.

ஒரு துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் இதுவரையில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷாப் பண்ட் 399 ஓட்டங்களை பதிவு செய்துள்ளார். இதில் ஒரு சதமும், இரண்டு அரைச்சதங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<