ரொமெலு லுகாகுவின் வீட்டில் இப்போது எலிகள் இல்லை

3234

‘எனது தாய் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது இன்றும் எனது மனதில் அப்படியே இருக்கிறது’ என்று பெல்ஜியம் அணியின் முன்கள வீரர் ரொமெலு லுகாகு கூறிய தனது சிறு பராயக் கதை உருக்கமானது.

பெல்ஜியம் அணி உலகக் கிண்ணத்தின் உச்சம் வரை முன்னேறி இருக்கும் நிலையில் அதில் லுகாகுவின் பங்கு முக்கியமானது. உலகக் கிண்ணத்தில் பெல்ஜியம் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் இரட்டை கோல் பெற்ற லுகாகு, அடுத்த போட்டிகளில் தனது வேகமான மற்றும் தந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  

பிரேசிலை வீழ்த்திய பெல்ஜியம் அரையிறுதியில் பிரான்ஸுடன் பலப்பரீட்சை

திறமையான ஆட்டத்தை வெளிக்காட்டிய பெல்ஜியம் அணி ஐந்து முறை சம்பியனான பிரேசில் அணியை 2-1 என்ற கோல்கள்…….

The Players Tribune இணையதளத்திற்கு அவர் தனது சிறுபராயம் பற்றி உணர்வுபூர்வமாக கூறியிருக்கிறார். இந்த கதையை கூறுவது உலக நட்சத்திர கால்பந்து வீரர் என்பதால் மாத்திரமல்ல, பெரும் போராட்டத்துடன் முன்னேறி வந்தவர் என்ற வகையில் அவரது கடந்த காலத்தை அனைவரும் படிக்க வேண்டும்.

அவரது மொழியிலேயே அவரது கதையை பார்ப்போம்.

நாம் உடைந்துபோன அந்த தருணம் எனக்கு இப்போதும் அப்படியே நினைவிருக்கிறது. எனது தாய் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது இன்றும் எனது மனதில் அப்படியே இருக்கிறது.

பாடசாலை இடைவேளையின்போது பகல் உணவுக்காக வீடு வந்திருந்தேன். அப்போது எனக்கு ஆறு வயது. எனது தாய் எப்போதுமே ஒரே உணவு வகையையே வைத்திருப்பாள். அது பாலும் பானும். சிறுவராக இருந்தபோது அதனை நீங்கள் நினைத்தும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் எம்மால் முடிந்தது அவ்வளவுதான்.

அப்படித்தான் அன்றைய தினமும் நான் வீட்டுக்கு வந்தேன், நேராக சமையல் அறைக்கு சென்றேன். வழக்கம்போல பால் பெட்டி ஒன்றுடன் எனது தாய் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்தாள். அவள் அதனை ஆட்டிக்கொண்டிருந்தாள், என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. ஒன்றுமில்லை என்ற தோரணையில் புன்னகைத்தபடி அவள் எனது பகல் உணவை கொண்டுவந்தாள். என்ன நடக்கிறது என்று எனக்கு அப்போதே புரிந்துவிட்டது.

அவள் பாலுடன் தண்ணீரை கலந்தாள். ஒரு வாரத்திற்கு பால் வாங்குவதற்கு போதுமாக எம்மிடம் பணம் இருக்கவில்லை. நாம் உடைந்து கிடந்தோம். அது ஏழ்மை மாத்திரமல்ல, விரக்தியும் கூட.

லிதுவேனியாவுடனான மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று (08) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மோதல் இலங்கை அணி சுமார் 2…..

எனது தந்தை தொழில்சார் கால்பந்து வீரர், ஆனால் அவரது கால்பந்து வாழ்வு முடிந்த பின் பணமும் போய்விட்டது. முதலில் வீட்டில் இருந்த கேபிள் தொலைக்காட்சி போனது. இனியும் கால்பந்து போட்டிகளை பார்க்க முடியவில்லை. கால்பந்து போட்டிகள் இல்லை, அதற்கு தொலைக்காட்சி சமிக்ஞை கிடைக்கவில்லை.

பின்னர் இரவு வீட்டுக்கு வந்தால் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. சில நேரங்களில் இரண்டு மூன்று வாரங்களுக்கு மின்சாரம் இருக்காது.

குளிக்க வேண்டி ஏற்பட்டால் சூடான நீர் இருக்காது. அம்மா நீரை சூடாக்கித் தந்தால் குளியலறைக்கு சென்று சிறு கோப்பையால் தலையின் மேல் ஊற்றுவேன்.    

சில நேரங்களில் எனது தாய் தெருக்கோடியில் இருக்கும் பேக்கரியில் கடனுக்கு பான் வாங்குவார். அந்த பேக்கரி கடைக்காரருக்கு என்னையும் எனது தம்பியையும் தெரியும். எனவே, திங்கட்கிழமை கடனுக்கு வாங்கினால் அதனை வெள்ளிக்கிழமை திருப்பிக் கொடுக்க அவர் இடம் தந்தார்.

லுகாகு சிறு வயதில்
Courtesy – i1.wp.com

நாம் கஷ்டப்பட்டு வந்தோம் என்பது எனக்கு தெரியும், ஆனால் அம்மா பாலில் தண்ணீரை கலந்தபோது எம்மிடம் எதுவும் இல்லை என்றே நான் உணர்ந்தேன். நான் என்ன கூற வருகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்? இது தான் எமது வாழ்க்கை.

நான் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அவளை நோவிக்க நான் விரும்பவில்லை. எனது பகலுணவை சாப்பிட்டேன். ஆனால், அன்றைய தினத்தில் இறைவனின் ஆணையாக எனக்குள் நானே வைராக்கியம் கொண்டேன். அது சரியாக உங்களை யாரோ தூக்கத்தில் இருந்து எழுப்புவது போல இருந்தது. நான் செய்ய வேண்டியதும், செய்யப்போவதும் பற்றி தெரிந்தே இருந்தேன்.  

எனது தாய் அப்படி வாழ்வதை பார்க்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை. இல்லைஇல்லைஎன்னால் அவளை அப்படி இருக்க விட முடியாது.

மன உறுதி பற்றி பேசுவதற்கு கால்பந்து ஆடுபவர்களுக்கு அதிக விருப்பம் உண்டு. அப்படி என்றால் நீங்கள் சந்திக்கும் பலம்மிக்க கால்பந்து வீரர் நானாகக் கூட இருக்க முடியும். ஏனென்றால் அந்த மாற்றத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் அம்மா, தம்பியோடு சேர்ந்து பாயில் இருந்து பிரார்த்திப்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது.  

எனது சத்தியத்தை நான் எனது மனதிலேயே வைத்திருந்தேன். ஆனால், ஒருநாள் நாள் வீட்டுக்கு வரும்போது அம்மா அழுதுகொண்டு இருந்தாள். நான் அப்போது அவளிடம் கூறினேன், ‘அம்மா தெரியுமா, இது மாறப்போகிறது. நான் அன்டர்லெக்ட் (ஆரம்ப கால்பந்து கழகம்) அணிக்கு கால்பந்து ஆடப்போகிறேன். அது விரைவாக நடக்கும். அது நல்லதாக நடக்கும். உங்களுக்கு இன்னும் துன்பப்பட வேண்டியதில்லை.’

ப்ரோ (தொழில்சார்) கால்பந்து ஆட ஆரம்பிக்க முடியுமான வயது என்னஎன்று நான் ஆறு வயதில் அப்பாவிடம் கேட்டேன்.

16 வயதில் என்று அவர் கூறினார். அப்படியென்றால் ’16 வயதில்என்று நான் எனக்கே கூறிக்கொண்டேன்.

அந்த காலத்தில் நான் ஆடிய அனைத்து போட்டிகளும் இறுதிப் போட்டிகள். தெருவில் ஆடினாலும், பாடசாலையில் ஆடினாலும் அப்படியே. அது எனக்கு மிக பாரதூரமான ஒன்றாக இருந்தது. நான் பந்தை உதைக்கும் ஒவ்வொரு நேரத்திலும் பந்து கிழியும் அளவுக்கு வேகமாகவே உதைத்தேன். உச்ச பலத்தை கொண்டு உதைப்பேன். நமக்கு விளையாடும் இடங்கள் இருக்கவில்லை. எனக்கு தேவைப்பட்டதெல்லாம் சாகும்வரை கால்பந்து ஆடுவது.

நான் உயர்ந்துகொண்டு போகும்போது ஏனைய சிறுவர்களின் பெற்றோர், சில ஆசிரியர்கள் என்னை நோவிக்கச் செய்தார்கள். ‘உங்களின் வயது என்ன? பிறந்தது எந்த ஆண்டில்? என்று முதல் தடவை பெரியவர்கள் கேட்டது எனக்கு மறக்காது.  

அப்போதே? நான் அப்படித் தான்.

11 வயதில் லியர்ஸ் கனிஷ்ட கால்பந்து அணிக்கு ஆடினேன். அடுத்த அணிகளின் பெற்றோர் நான் மைதானத்திற்கு வருவதை தடுக்க முயன்றார்கள். ‘இந்த சிறுவனின் வயது என்ன? அவனது அடையாள அட்டை எங்கே? எங்கிருந்து அவன் வந்தான்என்று அவர்கள் கேட்டார்கள்.

உலகக் கிண்ணத் தொடரில் வழங்கப்படும் விருதுகள்

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிஃபா உலகக் கிண்ணத் தொடர் இம்முறை ரஷ்யாவில் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி…..

நான் எங்கிருந்து வர? பெல்ஜியத்தின். அன்ட்வோர்ப்பைச் சேர்ந்தவன்என்று நினைத்துக் கொண்டேன்.  

எனது அப்பா அங்கே இருக்கவில்லை. வெளியூர் போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல அவரிடம் கார் ஒன்று இருக்கவில்லை. எனக்கு நான் மட்டும் என்பதால் தனியே எழுந்திருக்க வேண்டி இருந்தது. எனது பையில் இருந்த அடையாள அட்டையை எடுத்து எல்லா பெற்றோர்களிடமும் காண்பித்தேன். அவர்கள் அதனை உன்னிப்பாக பார்த்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறினார்கள்.  

எனது இரத்தம் சூடானது ஞாகத்திற்கு வருகிறது. ‘நான் உங்களின் குழந்தைகளை கொல்வேன். அவர்களை கொல்லத்தான் இருந்தேன். உங்களால் அழும் குழந்தைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும்!’ என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

பெல்ஜியம் வரலாற்றில் சிறந்த கால்பந்து வீரராக வரவேண்டும் என்பதுவே எனது தேவையாக இருந்தது. அதுவே எனது இலக்கானது. வெறும் சிறந்த வீரர் அல்ல, மிகச் சிறந்த வீரராக வேண்டும். எத்தனையோ விடயங்கள் காரணமாக நான் கோபத்தோடு தான் விளையாட்டை தொடர்ந்தேன். நான் இருந்த வீட்டில் எலிகள் சுற்றித் திரியும், எனக்கு சம்பியன்ஸ் லீக் பார்க்க முடியவில்லை, ஏனைய பிள்ளைகளின் பெற்றோர் என்னை பேசிய விதம்.

எனக்கு 12 வயதாகும்போது 34 போட்டிகளில் 76 கோல்கள் போட்டேன். அப்பாவின் பாதணியை போட்டுக்கொண்டு தான் அந்த கோல்கள் அனைத்தையும் பெற்றேன். எமது கால்கள் ஒரே அளவானபோது நாங்கள் இருவரும் ஒரே பாதணியை பகிர்ந்து கொண்டோம்.

நெருக்கடியின்றி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து

சுவீடன் அணியை நெருக்கடியின்றி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளின் பின் உலகக் கிண்ண…..

ஒருநாள் நான் தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எனது வாழ்வில் முக்கியமானவர்களில் ஒருவர். ‘நான் 76 கோல்கள் போட்டிருக்கிறேன். பெரிய பெரிய அணிகள் எல்லாம் என் மீது கண் வைத்திருக்கின்றனஎன்று கூறினேன்.

எந்நாளும் அவர் எனது கால்பந்து கதைகளை கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால் அந்த நேரத்தில் அவர், ‘நல்லது ரோம், ஆனால் எனக்காக ஒன்றை செய்ய முடியுமா? எனது மகளை பார்த்துக் கொள்ள முடியுமா?’     

அவர் என்ன கூறுகிறார் என்று புரியாவிட்டாலும், ‘அம்மாவைத் தானே? சரி சரி நாம் நன்றாக இருப்போம்என்று நான் கூறினேன்.

இல்லை, எனது மகளை நன்றாக பார்ப்பதாக உன்னாள் சத்தியம் செய்ய முடியுமா?’

தாத்தா? நான் சத்தியம் செய்கிறேன்.’

ஐந்து நாட்களுக்கு பின்னர் அவர் இறந்தார். அவர் என்ன கூறினார் என்று அன்று தான் எனக்கு புரிந்தது.   

இன்னும் நான்கு ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தால் என்ன என்று தோன்றுகிறது. அப்படி என்றால் நான் அன்டர்லெக்டுக்கு ஆடுவதை அவரால் பார்த்திருக்க முடியும். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றியதாக நினைக்கிறேன்.

நான் 16 வயதில் செய்வதாக அம்மாவிடம் கூறியதை நிறைவேற்ற எனக்கு 11 நாட்கள் தாமதம் ஏற்பட்டது. 2009 மே 24 ஆம் திகதி அன்டர்லெக்ட் எதிர் ஸ்டென்டர்ட் லீக் போட்டி.

அது எனது வாழ்வில் சிறப்பான நாள். போட்டியின் பாதியிலேயே நான் களமிறங்க வேண்டி இருந்தது. அதுவரை கதிரையிலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். கதிரையில் உட்கார்ந்திருந்து 16 வயதில் எப்படி தொழில்சார் கால்பந்து வீரராக மாறுவது என்று நான் நினைத்தேன். பயிற்சியாளரோடு பந்தயம் கட்டினேன்.

காணொளிகளைப் பார்வையிட

என்னை போட்டியில் சேர்த்தால் நான் டிசம்பராகும்போது 25 கோல்கள் போடுவேன்என்று பயிற்சியாளரிடம் கூறினேன்.

அதற்கு அவருக்கு சிரிப்பு வந்தது. அவர் உரக்க சிரித்தார். ‘ஆனால் நீ 25 கோல்கள் போடாவிட்டால் கதிரையில் தான் இருக்க வேண்டி இருக்கும்என்றார்.

சரி, நான் வென்றால் எம்மை அழைத்துச் செல்லும் மினி வேனை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு எந்நாளும் பேன் கேக் செய்து தர வேண்டும்என்றேன். அவரும்சரிஎன்று கூறினார். அது ஒரு முட்டாள்தனமான பந்தயம். நான் 25 கோல் அடித்தேன் நத்தாருக்கு பேன் கேக் சாப்பிட்டோம்.

ஒரு பாடத்தை மாத்திரம் கற்றுக்கொள்ளுங்கள். வெற்றித் தாகத்தில் இருக்கும் சிறுவனுடன் விளையாடுவது நல்லதல்ல.

அன்டர்லெக்ட் விளையாட்டுக் கழகத்துடன் லுகாகு
Courtesy – 2-prod.liverpoolecho.co.uk

மே 13 ஆம் திகதி எனது பிறந்த தினத்தில் அன்டர்லெக்ட் விளையாட்டுக் கழகத்துடன் நான் ஒப்பந்தம் செய்து கொண்டேன். நேராக சென்று பிஃபா கேம் ஒன்றும், கேபிள் தொலையாட்சி வசதி ஒன்றையும் வாங்கினேன். அந்த பருவமும் முடியும் நேரம் வந்ததால் நான் வீட்டில் மகிழ்ச்சியாக கழித்தேன். ஆனால் அந்த ஆண்டு லீக் போட்டியில் அன்டர்லெக்ட் மற்றும் ஸ்டான்டர்ட் லீக் ஆகிய இரண்டு அணிகளினது புள்ளிகள் சமனானது. இதனால் இரண்டு இறுதிப் போட்டிகளில் ஆட வேண்டி ஏற்பட்டது.  

முதல் போட்டியை நான் வீட்டில் இருந்து பார்த்தேன். இரண்டாவது போட்டிக்கு முந்திய தினம் எனக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது.

ஹலோ ரோம், என்ன செய்கிறாய்?’

நான் பூங்காவுக்கு போய் கால்பந்து ஆடப்போகிறேன்

இல்லை, இல்லை இப்போதே பையை தயார் செய்து கொள்!’

ஏன் நான் என்ன தவறு செய்தேன்?’

இல்லை, மைதானத்திற்கு வா, சிரேஷ்ட அணிக்கு நீ தேவை.’

என்ன? நானா?’

ஆம், நீ தான் இப்போதே வா.’

நான் அப்பாவின் அறைக்கு ஓடோடிச் சென்றேன். அப்பா எழுந்திருங்கள்! நாங்கள் போக வேண்டும்!’

..! என்ன? எங்கேஅவர் கேட்டார்.

அன்டர்லெக்ட் அப்பா, அன்டர்லெக்ட்!

நான் விளையாட்டு அரங்கிற்கு ஓடிக்கொண்டே சென்றேன். ‘சரி மகன், எந்த இலக்க ஜெர்சி வேண்டும்?’ என்று அரங்கின் உடைகளுக்கு பொறுப்பானவர் என்னிடம் கேட்டார்;.

’10ஆம் இலக்கத்தை தாருங்கள்என்று நான் கூறினேன். அந்த காலத்தில் எனக்கு எந்த பயமும் இருக்கவில்லை.   

அகடமியில் இருந்து வருபவர்கள் 30 ஆம் இலக்கத்திற்கு மேல் இருந்தே இலக்கம் பெற வேண்டும்என்று அவர் கூறினார்.

சரி மூன்றையும் ஆறையும் கூட்டினால் 9. எனக்கு 36 தாருங்கள்‘  

அன்று இரவு ஹோட்டலில் சிரேஷ்ட வீரர்கள் முன் எனக்கு பாட்டுப்பாட வேண்டியும் ஏற்பட்டது. என்ன பாடினேன் என்று ஞாபகம் இல்லை. எனது தலை சுற்றிச் சுற்றி இருந்தது.   

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு ஆர்வளர்கள் இன்று இருக்கின்றனர் என்றார் அது வியப்படைய……

அடுத்த நாள் நாம் போட்டிக்கு செல்ல அணியின் பஸ்ஸில் இருந்து இறங்கினோம். ஏனையவர்கள் சாதாரண உடைகளை அணிந்திருந்தார்கள். நான் மோசமான விளையாட்டு ஆடை ஒன்றை உடுத்தியிருந்தேன். கெமரா எல்லாம் என் பக்கம் திரும்பின. அங்கிருந்து விளையாட்டு அரங்கிற்கு 300 மீற்றர் தூரம் இருக்கும். நான் உள்ளே காலை வைக்கும்போதே எனது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. எல்லோருமே என்னை தொலைக்காட்சியில் பார்த்திருந்தார்கள். 3 நிமிடங்களுக்குள் 25 குறுஞ்செய்திகள் வந்தன.   

ப்ரோ, ஏன் நீ போட்டிக்கு போகிறாய்?’

ரோம், என்ன நடக்கிறது? ஏன் நீ டிவியில் வருகிறாய்?’

எனது உற்ற நண்பனுக்கு மாத்திரமே நான் பதில் கூறினேன். ‘ப்ரோ, விளையாடுவேனோ தெரியவில்லை. என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால், டிவியையே பார்த்துக்கொண்டிரு.’  

’63 ஆவது நிமிடத்தில் முகாமையாளர் என்னை மைதானத்திற்கு அனுப்பினார். 16 வயதும் 11 நாட்களிலும் நான் அன்டர்லெக்ட்டுக்காக மைதானத்திற்கு இறங்கினேன்.

நாம் தோற்றோம். ஆனால் நான் சொர்க்கத்தில் இருப்பது போலே உணர்ந்தேன். எனது தாய்க்கும், தாத்தாவுக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினேன். அப்போதுதான் எமக்கு நல்ல காலம் வரும் என்பதை நான் உணர்ந்தேன்.  

மென்செஸ்டர் யுனைடட் அணிக்காக லுகாகு

அடுத்த பருவம் வரும்போது நான் உயர் கல்லூரியில் இருந்துகொண்டே ஐரோப்பிய லீக்கில் விளையாடிக்கொண்டிருந்தேன். நான் பாடசாலைக்கு போகும்போது பெரிய பை ஒன்றை எடுத்துக் கொண்டு போவேன். மாலையில் விமானத்தில் போட்டிகளுக்கு போவேன். நாம் லீக்கை பெரிதாக வென்றதோடுஆண்டின் கறுப்பின வீரர்என்ற பட்டியலில் இரண்டாவதாக வந்தேன். எனக்கு பைத்தியம் பிடித்தது போல் இருந்தது.   

அந்த விடயங்கள் பற்றி எதிர்பார்ப்புடன் இருந்தபோதும் இத்தனை இலகுவில் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. திடீரென்று ஊடகங்கள் என்னை உயர்த்திப் பிடித்தன. பெல்ஜியம் அணிக்கு ஆடும் அளவுக்கு நான் சிறந்தவன் என்று நினைக்கவில்லை. எனக்கு 17, 18 வயது மாத்திரம் தானே.

திறமையாக ஆடும்போது நான் பத்திரிகை செய்திகளை பார்க்க ஆரம்பித்தேன். ‘பெல்ஜியம் தாக்குதல் ஆட்டக்காரர் ரொமெலு லுகாகுஎன்றே அவர்கள் என்னை அழைத்தார்கள்.   

திறமை வெளிப்படாதபோது, ‘கொங்கோ பூர்வீகம் கொண்ட பெல்ஜியம் முன்கள வீரர் ரொமெலு லுகாகுஎன்று அவர்கள் அழைத்தார்கள்.

நான் ஆடும் முறை உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அது பற்றி பிரச்சினை இல்லை. ஆனால் நான் பிறந்தது இங்கே (பெல்ஜியம்). வளர்ந்தது அன்ட்வோப், லீக், பிரசல்சில். நான் பிரெஞ்ச் மொழியில் ஆரம்பித்து ஒல்லாந்து மொழியில் முடிக்கலாம். ஸ்பானிய, போர்த்துக்கல் மொழிகளையும் இடையில் செருகுவேன். அது இருக்கும் இடத்தை பொறுத்தது.

ஆனால் நான் பெல்ஜியக்காரன்.

எனது சொந்த நாட்டை சேர்ந்தவர்களே நான் தோல்வி அடைவதை பார்க்க விரும்புவது ஏன் என்று எனக்கு புரியவில்லை. உண்மையில் எனக்குத் தெரியவில்லை.

எனக்கு 10 ஆண்டுகளாக சம்பியன்ஸ் லீக் போட்டிகளை பார்க்க முடியாமல் போனது. அதனை பார்ப்பதற்கு எம்மிடம் போதிய பணம் இருக்கவில்லை. நான் பாடசாலைக்கு சென்றபோது எல்லா பிள்ளைகளும் அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. 2002இல் ரியெல் மெட்ரிட்பயர்ன் லெவர் கிண்ணத்திற்கு பின்னர் எல்லோருமேவொலி வொலி!’ என்று கூறும்போது தெரிந்தது போல் நடிக்கத் தான் என்னால் முடிந்தது.   

அதற்கு இரண்டு வாரங்களின் பின் கணனி வகுப்பில் வைத்து சினேடின் சிடேன் கோல் ஒன்றை பெறுவதை நண்பன் ஒருவன் கொண்டுவந்த வீடியோவில் பார்த்தேன். அந்த நேரத்தில் நான் ரொனால்டோவின் திறமைகளை பார்க்க நண்பன் ஒருவனின் வீட்டுக்குச் சென்றேன். ஆஹா! 2002இல் எனது பாதணியில் ஓட்டை ஒன்று இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்கு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நான் உலகக் கிண்ணத்தில் ஆடுகிறேன்.’

லுகாகுவின் கதை இன்னும் முடியவில்லை. அவரது பெயர் இப்போது உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு பரீட்சயமான பெயராக மாறிவிட்டது. முயற்சியும், தைரியமும் இருந்தால் எத்தனையோ சாதிக்கலாம். கால்பந்து போட்டி ஒன்றை கூட பார்ப்பதற்கு வசதி இல்லாத லுகாகு இன்று உலக கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவர். அவர் தனது உரையில் கடைசியாக இவ்வாறு கூறுகிறார்,

எனது தாத்தாவுக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பை பெற முடியுமாக இருந்தால் என்ன என்று எனக்கு நினைக்க தோன்றுகிறது. ‘பாருங்கள், உங்களது மகள் நன்றாக இருக்கிறாள். எங்கள் வீட்டில் இப்போது எலிகள் இல்லை. நாங்கள் நிலத்தில் உறங்குவதில்லை. பிரச்சினை இல்லை. தாத்தா நாங்கள் நன்றாக இருக்கிறோம்என்று அவருக்கு தெரியப்படுத்த வேண்டும்…’          

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<