உலகக் கிண்ணத் தொடரில் வழங்கப்படும் விருதுகள்

427

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிஃபா உலகக் கிண்ணத் தொடர் இம்முறை ரஷ்யாவில் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.  அந்த வகையில் ஒவ்வொரு உலகக் கிண்ண தொடரிலும் சகல வீரர்களும் தமது அபார திறமைகள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர். அவ்வாறு தமது திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் (FIFA) எவ்வாறான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர் என்பது பற்றிய கண்ணோட்டமே இது.

தங்க பந்து விருது (Golden Ball Award)

உலகக் கிண்ண தொடரில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் தங்கப் பந்து விருது தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருதானது பிஃபா தொழிநுட்ப குழுவினரால் வீரர்கள் தரப்படுத்தப்பட்டு பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் வாக்குகளின் அடிப்படையிலே சிறந்த வீரர் தெரிவு செய்யப்படுவார். அந்த வகையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கும் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பந்துகளும் வழங்கப்படுகிறது.

உலகக் கிண்ண காலிறுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு??

உலகக் கிண்ண காலிறுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு??

2018 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது….

முதலாவது உலகக் கிண்ணம் முதல் சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த போதும் விருதுகள் வழங்கப்படவில்லை. தற்போதைய தங்கப்பந்து விருது 1982 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இறுதியாக இவ்விருதை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்றவர்கள்

1982 – போலோ ரோஸி  (இத்தாலி)

1986 – டியகோ மரடோனா (ஆர்ஜென்டீனா)

1990 – சல்வாடோர் சில்லாக்கி (இத்தாலி)

1994 – ரொமாரியோ (பிரேசில்)

1998 – ரொனால்டோ (பிரேசில்)

2002 – ஒலிவர் கான் (ஜேர்மனி)

2006 – ஸினடின் சிடான் (பிரான்ஸ்)

2010 – டியகோ போர்லன் (உருகுவே)

2014 – லியனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா)

தங்கப் பாதணி விருது (Golden Boot Award)

இவ்விருதானது உலகக் கிண்ண தொடர் ஒன்றில் அதிக கோல்கள் பெற்ற வீரருக்கு வழங்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு கோல்டன் ஷூ (Golden Shoe) என அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருது 2010 ஆம் ஆண்டு முதல் கோல்டன் பூட் (Golden Boot) என மாற்றம் பெற்றது. மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களும் தெரிவு செய்யப்பட்டு வெள்ளிப் பாதணி மற்றும் வெண்கலப் பாதணி விருதுகளும் வழங்கப்படுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் ஒரே அளவான  கோல்கள் பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் பெனால்டி கோல்கள் நீக்கப்பட்டு கணக்கெடுக்கப்படும். அவ்வாறு பெனால்டி கோல்களும் இல்லாத சந்தர்ப்பத்தில் கோல்களுக்காக வழங்கப்பட்ட உதவிகளின் (Assist) எண்ணிக்கை கணிக்கப்படும். அவற்றிலும் சமனாக இருக்கும் சந்தர்ப்பத்தில் குறைந்த நேரம் விளையாடிய வீரருக்கு விருது வழங்கப்படும். இம்முறைமை 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இவ்விருதை கொலம்பிய அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகேஸ் பெற்றிருந்தார்.

இறுதி நேரத்தில் எழுச்சி பெற்ற பெல்ஜியம் பிரேசிலுடனான காலிறுதிக்கு முன்னேற்றம்

பிஃபா உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் அபாரமான முறையில் மீள் எழுச்சி பெற்ற பெல்ஜியம்…

 விருது பெற்றவர்கள்

1982 – போலோ ரோஸி (இத்தாலி – 6 கோல்கள்)

1986 – கேரி லின்கர் (இங்கிலாந்து – 6 கோல்கள்)

1990 – சல்வாடோர் சில்லாக்கி (இத்தாலி – 6 கோல்கள்)

1994 – ஒலேக் சலென்கோ (ரஷ்யா – 6 கோல்கள்)

ஹரிஸ்டோ ஸ்டோய்கோ (பல்கேரியா – 6 கோல்கள்)

1998 – டெவோர் சூகேர் (குரோஷியா – 6 கோல்கள்)

2002 – ரொனால்டோ (பிரேசில் – 8 கோல்கள்)

2006 – மிரோஸ்லோ குளோஸ் (ஜேர்மனி – 5 கோல்கள்)

2010 – தோமஸ் முல்லர் (ஜேர்மனி – 5 கோல்கள்)

2014 – ஜேம்ஸ் ரொட்ரிகேஸ் (கொலம்பியா – 6 கோல்கள்)

தங்க கையுறை விருது (Golden Glow Award)

இது உலகக் கிண்ண தொடரில் சிறந்த கோல் காப்பாளருக்கு வழங்கப்படும் விருதாகும். முதலாவது உலகக் கிண்ணம் முதல் கோல் காப்பாளர்கள் உலகக் கிண்ண தொடரின் சிறந்த அணியில் (All Star Team) இணைத்துக் கொள்ளபட்டார்களே தவிர விஷேட விருதுகள் வழங்கப்படவில்லை. சோவியத் யூனியனின் மறைந்த கோல் காப்பாளர் லீவ் யசின் அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக 1994 ஆம் ஆண்டு சிறந்த கோல் காப்பாளர்களுக்காக யசின் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் 2010 ஆம் ஆண்டு முதல் இவ்விருது தங்க கையுறை விருதாக மாற்றப்பட்டது. மேலும் சிறந்த கோல் காப்பாளர்கள் சிறந்த வீரர்களாகவும் தெரிவு செய்யப்பட தகுதியுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவ்வாறே 2002 ஆம் ஆண்டு ஜேர்மனி அணியின் கோல் காப்பாளர் சிறந்த கோல் காப்பாளருக்கான யசின் விருதையும் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதையும் வென்றிருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு சம்பியன் ஆக முடிசூடிய ஜேர்மனி அணியின் கோல் காப்பாளர் மெனுவள் நியோர் இவ்விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யசின் விருது வென்றவர்கள்

1994 – மைக்கல் பெருட்ஹொம்மே (பெல்ஜியம்)

1998 – பெபியன் பார்தெஸ் (பிரான்ஸ்)

2002 – ஒலிவர் கான் (ஜேர்மனி)

2006 – கியன்லூகி புபன் (இத்தாலி)

தங்க கையுறை விருது வென்றவர்கள்

2010 – ஐகர் கஸில்லாஸ் (ஸ்பெயின்)

2014 – மெனுவள் தியோர் (ஜேர்மனி)

சிறந்த இளம் வீரர் விருது (Best Young Player Award)

உலகக் கிண்ண தொடரில் விளையாடுகின்ற இளம் வீரர்களில் சிறந்த வீரர்களை தெரிவு செய்யும் முறை 1958 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 2006 ஆம் ஆண்டு ஜேர்மனியில் இடம் பெற்ற உலகக் கிண்ண தொடரில் முதல் முறையாக சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. முதலாவது விருதை ஜேர்மனி அணியின் லூகாஸ் பொடோல்ஸ்கி பெற்றிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. மேலும் 2010 ஆம் ஆண்டு 20 வயது நிரம்பிய ஜேர்மனியின் தோமஸ் முல்லர் பெற்றிருந்ததோடு 2014 ஆம் ஆண்டு பிரான்ஸ் அணியின் போல் பொக்பா தனது 21 ஆவது வயதில் வென்றிருந்தார். 1997 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அல்லது அதன் பின்னர் பிறந்த வீரர்கள் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் வீரர் விருதுக்காக தகுதி பெறுகின்றனர்.

நியாயமான ஆட்டத்துக்கான விருது (Fair Play Award)

உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணிகளில் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்ற நியாயமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதாவது மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் காண்பிக்கப்படாத அல்லது குறைவாக காண்பிக்கப்பட்ட அணிக்கு வழங்கப்படும் விருதே இதுவாகும். 1970 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருதை பிரேசில் அணி அதிக பட்சமாக நான்கு முறை வென்றுள்ளது. எனினும் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் இடம் பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் கொலம்பியா அணி முதன்முறையாக இவ்விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெனால்டியில் வென்று காலிறுதிக்கு சென்ற இங்கிலாந்து சுவீடனுடன் பலப்பரீட்சை

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 16 அணிகள் மோதும் சுற்றின் பரபரப்பான கடைசி நொக் அவுட்…

 இதுவரை விருது வென்றுள்ள அணிகள்

1970 – பெரூ

1974 – மேற்கு ஜேர்மனி

1978 – ஆர்ஜென்டீனா

1982 – பிரேசில்

1986 – பிரேசில்

1990 – இங்கிலாந்து

1994 – பிரேசில்

1998 – இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்

2002 – பெல்ஜியம்

2006 – பிரேசில் மற்றும் ஸ்பெயின்

2010 – ஸ்பெயின்

2014 – கொலம்பியா

இது தவிர 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இருந்து ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படுகிறது. நெதர்லாந்து அணியின் ஆர்ஜென் ரொப்பன் (Arjen Robben), போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஆர்ஜென்டீனா அணியின் லியனல் மெஸ்ஸி ஆகியோர் அதிகபட்சமாக தலா 6 தடவைகள் உலகக் கிண்ண தொடரில் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர்.

எனவே இம்முறை உலகக் கிண்ண தொடரில் யார் யார் எந்த விருதை வெல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க