இலங்கை வரும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி

2

இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, T20 மற்றும் ஒருநாள்  போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட 2027ஆம் ஆண்டின் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.  

முத்தரப்பு தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த பாகிஸ்தான்

இலங்கை வரும் இங்கிலாந்து மகளிர் அணி தமது இலங்கை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக, கண்டியில் வைத்து இலங்கை வீராங்கனைகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்கும்.  

இதனைத் தொடர்ந்து ஐ.சி.சி. மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தம்புள்ளையில் மீண்டும் ஆடவிருக்கின்றன.   

தொடர் அட்டவணை: 

T20 தொடர் (கண்டி பல்லேகல சர்வதேச மைதானம்) 

  • முதல் போட்டி – 2027 பெப்ரவரி 01 –  
  • இரண்டாவது போட்டி 2027 பெப்ரவரி 03 – பல்லேகல மைதானம், கண்டி  
  • மூன்றாவது போட்டி 2027 பெப்ரவரி 05 – பல்லேகல மைதானம், கண்டி  

ஒருநாள் தொடர் (தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானம்) 

  • முதல் போட்டி: 2027 மார்ச் 04  
  • இரண்டாவது போட்டி: 2027 மார்ச் 06  
  • மூன்றாவது போட்டி: 2027 மார்ச் 08  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<