மே.இ.தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் ஜேசன் ஹோல்டர்

Sri Lanka tour of West Indies 2021

148
Jason Holder

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி குழாத்தில் சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர் மற்றும் டெரன் பிராவோ ஆகிய இருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக அண்மையில் நிறைவுக்கு வந்த டெஸ்ட் தொடரை கிரைக் பிராத்வெயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-0 என வென்றது

குறித்த தொடரில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தலைவரான ஜேசன் ஹோல்டர் மற்றும் அனுபவ வீரரான டெரன் பிராவோ ஆகிய இருவரும் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில இருந்து விலகிக் கொண்டனர்.

>> மே.தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவரானார் கிராக் பிராத்வெயிட்

முன்னதாக ஜேசர் ஹோல்டர் தலைமை தாங்கிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி தோற்றிருந்தது. எனினும், பங்களாதேஷ் அணியை நன்கு வழிநடத்தி டெஸ்ட் தொடரை வென்று காண்பித்தார் கிராக் பிராத்வெயிட்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் கிராக் பிராத்வெயிட் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஜேசன் ஹோல்டர், டெரன் பிராவோ இடம்பெற்றுள்ளார்கள்.

>> மே.தீவுகளிடம் ஒருநாள் தொடரையும் இழந்த இலங்கை அணி

இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது

மே.இ. தீவுகள் அணி விபரம்:

கிரைக் பிராத்வெயிட் (தலைவர்), ஜெர்மைன் பிளாக்வுட், நகுமா பொன்னர், டெரன் பிராவோ, ஜோன் கெம்பல், ரஹீம் கார்ன்வெல், ஜோசுவா டி சில்வா (விக்கெட் காப்பளர்), ஷெனன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கைல் மேயர்ஸ், கெமர் ரோச், ஜொமெல் வாரிகன்.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<