முதல் தடவையாக நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி வெற்றி

565

மட்டக்களப்பு புனித மிக்கேல் (St. Michael’s College) கல்லூரி மற்றும் திருகோணமலை புனித சூசையப்பர் (St. Joseph’s College) கல்லூரிகள் இடையே முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்ற 50 ஓவர்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டியில் (Victory of Joes vs Mikes), மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் இரண்டு பிரபல்யம் வாய்ந்த பாடசாலைகள் மோதிய இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை (6) மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

இலங்கை வளர்ந்துவரும் அணியை வீழ்த்திய தென்னாபிரிக்கா

இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு கெதிராக நடைபெற்ற முத்தரப்பு…..

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி அணி, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டது.

இதன்படி முதலில் துடுப்பாடிய புனித சூசையப்பர் கல்லூரி அணி, புனித மிக்கேல் கல்லூரி வீரர்களின் திறமையான பந்துவீச்சு காரணமாக ஆரம்பம் முதலே தடுமாற்றம் காண்பித்தது.

தொடர்ந்து தமது தடுமாற்றத்தில் இருந்து மீள முடியாத திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி அணி, 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

புனித சூசையப்பர் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் வந்திருந்த F.M. பாயித் 22 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார். இதேநேரம், பாயித் தவிர புனித சூசையப்பர் கல்லூரி அணியில் வேறு ஒருவரேனும் கூட 20 ஓட்டங்களை கடந்திருக்கவில்லை.

இதேவேளை புனித மிக்கேல் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் T. துஜித்ரன் 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இதேநேரம், M. பிரின்தாவன் 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் சவால் குறைந்த 103 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற புனித மிக்கேல் கல்லூரி அணி பதிலுக்கு துடுப்பாடியது.

வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாட ஆரம்பித்த புனித மிக்கேல் கல்லூரி அணி ஆரம்பத்தில் தடுமாற்றம் காட்டிய போதிலும் ஏற்கனவே பந்துவீச்சில் அசத்தியிருந்த பிரின்தாவன் பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி புனித மிக்கேல் கல்லூரி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அதன்படி, புனித மிக்கேல் கல்லூரி அணி போட்டியின் வெற்றி இலக்கினை 31 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களுடன் அடைந்தது.

புனித மிக்கேல் கல்லூரி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரின்தாவன் 5 பெளண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்களை பெற்றிருந்தார். இவரோடு, A. பேரலன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து புனித மிக்கேல் கல்லூரி அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் சொஹைப் மலிக்

பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் தனது கடைசிப்…..

மறுமுனையில் புனித சூசையப்பர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக A.M. ஆஷீக் மற்றும் A.P. ஜோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் சாய்த்து தமது அணிக்காக போராடிய போதிலும் அவர்களின் பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித சூசையப்பர் கல்லூரி – 102 (40.4) – F.M. பாயித் 22, S. துஜித்ரன் 24/4, M. பிரின்தாவன் 15/3

புனித மிக்கேல் கல்லூரி – 103/6 (31) – M. பிரின்தாவன் 27, A.M. ஆஷீக் 20/2, A.P. ஜோன் 26/2

முடிவு – புனித மிக்கேல் கல்லூரி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<