ஜீவன் மெண்டிஸின் அபார சதத்தால் சம்பத் வங்கிக்கு வெற்றி

99

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27ஆவது சிங்கர் – MCA ப்ரீமியர் லீக் (நொக் அவுட்) ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகள் இன்று (19) நடைபெற்றதுடன், சம்பத் வங்கி மற்றும் ஹேலீஸ் அணிகள் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டன.

இதில் சம்பத் வங்கி அணிக்காக விளையாடி வரும் இலங்கை அணியின்  சிரேஷ்ட வீரரும், சகலதுறை வீரருமான ஜீவன் மெண்டிஸ் சதம் விளாசியதோடு, சமீன் கந்தனாரச்சி (சம்பத் வங்கி), மஹேல உடவத்த (மாஸ் ஹோல்டிங்ஸ்), ரொன் சந்த்ரகுப்த, சச்சித்ர சேரசிங்க, கித்துருவன் வித்தானகே (ஹேலீஸ்), ஹஷான் துமிந்து (டிமோ) மற்றும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி வீரரான தவீஷ அபிஷேக் ஆகியோர் அரைச் சதங்களை குவித்த அசத்தினர். 

MCA பிரீமியர் லீக்கில் இலங்கை இளையோர் அணிக்கு முதல் வெற்றி

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27ஆவது சிங்கர்……

சம்பத் வங்கி எதிர் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி

சம்பத் வங்கியின் அணித் தலைவரும், சகலதுறை ஆட்டக்காரருமான ஜீவன் மெண்டிஸின் அபார சதத்தின் உதவியுடன் சம்பத் வங்கி அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 110 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு MCA மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சம்பத் வங்கி அணி, ஜீவன் மெண்டிஸின் சதம் (122) மற்றும் சமீன் கந்தனாரச்சியின் அரைச் சதத்தின் (75) உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் அம்ஷி டி சில்வா 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சமிந்து விஜேசிங்க மற்றும் சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர். 

இந்நிலையில், போட்டியின் 2ஆவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு 22.3 ஓவர்களுக்கு 236 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. 

எனினும் அந்த அணி குறித்த ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் தவீஷ அபிஷேக் 57 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். 

பந்துவீச்சில் சம்பத் வங்கி அணிக்காக துஷ்மன்த சமீர, தரிந்து கௌஷால் மற்றும் மாலிந்த புஷ்பகுமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 334/8 (50) – ஜீவன் மெண்டிஸ் 122, சமீன் கந்தனாரச்சி 75, ஹசன்த பெர்னாண்டோ 38, ரொமேஷ் புத்திக 33, அம்ஷிடி சில்வா 3/66, சமிந்து விஜேசிங்க 2/49, சமிந்து விக்ரமசிங்க 2/52

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி – 126/6 (22.3) – தவீஷ அபிஷேக் 57, சொனால் தினூஷ 40, துஷ்மன்த சமீர 2/11, தரிந்து கௌஷால் 2/13, மாலிந்த புஷ்பகுமார 2/42

முடிவு – சம்பத் வங்கி அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 110 ஓட்டங்களால் வெற்றி


மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செல்லா எதிர் எல்.பி. பினான்ஸ்

கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செல்லா அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களை பெற்றது. 

தனஞ்சய, ஷெஹான், கமிந்துவின் அபார ஆட்டத்துடன் ஆரம்பமாகிய MCA ப்ரீமியர் லீக்

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் 27 ஆவது தடவையாக ஏற்பாடு…..

இதன்போது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்த 65 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். எல்.பி பினான்ஸ் அணி சார்பாக சதுரங்க குமார 3 விக்கெட்டுகளையும், ஷிரான் பெர்னாண்டோ, சரித் அசலங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய எல்.பி பினான்ஸ் அணி, 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட போட்டி கைவிடப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செல்லா – 229 (48) – மஹேல உடவத்த 65, பிரியமால் பெரேரா 48, லஹிரு மதுஷங்க 30, சதுரங்க குமார 3/33, ஷிரான் பெர்னாண்டோ 2/28, சரித் அசலங்க 2/31, தனஞ்சய டி சில்வா 2/50

எல்.பி பினான்ஸ் அணி – 69/4 (15.3) – லஹிரு உதார 22, லஹிரு மதுஷங்க 3/15

முடிவு – போட்டி கைவிடப்பட்டது

Photos: LB Finance vs MAS Unichela – 27th Singer-MCA Premier League 2020


ஹேலீஸ் எதிர் டிமோ

மழை குறுக்கிட்ட இப்போட்டியில் டிமோ அணிக்கு எதிராக 19 ஓட்டங்களால் ஹேலீஸ் அணி வெற்றியீட்டியது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஹேலீஸ் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது. ரொன் சந்த்ரகுப்த (84), சச்சித்ர சேரசிங்க ஆட்டமிழக்காமல் 70, கித்துருவன் விதானகே (50) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.

Photos: Hayleys Vs DIMO | 27th Singer-MCA Premier League 2020

இந்நிலையில் போட்டியில் மழை குறுக்கிட ஹேலீஸ் அணிக்கு கடைசியில் 25 ஓவர்களுக்கு 132 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. 

எனினும், அந்த அணி குறித்த ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே எடுத்தது. துடுப்பாட்டத்தில் ஹஷான் துமிந்து ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை எடுத்தார். 

போட்டியின் சுருக்கம்

ஹேலீஸ் – 289/5 (50) – ரொன் சந்த்ரகுப்த 84, சச்சித்ர சேரசிங்க 70*, கித்துருவன் வித்தானகே 50, மதுரங்க சொய்ஸா 34, லஹிரு திரிமான்ன 20

டிமோ – 113/3 (25) – ஹஷான் துமிந்து 57*, தினேஷ் சந்திமால் 39

முடிவு – ஹேலீஸ் அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<