உபுல் தரங்கவின் அதிரடி சதத்தால் சம்பியன் கிண்ணத்தை வென்றது கொழும்பு

1718

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில் நடைபெற்ற SLCT-20 லீக்கின் இறுதிப் போட்டியில் உபுல் தரங்கவின் அதிரடி சதத்தின் உதவியுடன் கொழும்பு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

தம்புள்ளை மற்றும் கொழும்பு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க

செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் அடங்கிய…

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தம்புள்ளை அணி சார்பில் லீக் போட்டிகளில் விளையாடாமலிருந்த திசர பெரேரா இன்று அணிக்கு திரும்பியிருந்ததுடன், கொழும்பு அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணியின் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக 2 ஓட்டங்களுடன் ஏமாற்றினார். அடுத்துவந்த டில்வருவான் பெரேரா, அஷா பிரியன்ஜன் மற்றும் திசர பெரேரா ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சமரவிக்ரம 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் தம்புள்ளை சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிரடி காட்டிய ரமித் ரம்புக்வெல்ல மற்றும் இளம் வீரர்களான ஹசித போயகொட, வனிது ஹசரங்க அணிக்கு ஆறுதல் அளித்தனர்.

ரமித் ரம்புக்வெல்ல 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் ஹசித போயகொட 40 ஓட்டங்களையும்,  வனிது ஹசரங்க 22 ஓட்டங்களையும் பெற்று, 20 ஓவர்களில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 163 ஆக உயர்த்தினர். கொழும்பு அணி சார்பாக பந்துவீச்சில் அகில தனஞ்சய மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்கள் குவித்தார். அஷான் பிரியன்ஜன் வீசிய 8 ஆவது ஒவரில், தரங்கவின் பிடியெடுப்பை திசர பெரேரா தவறவிட, கொழும்பு அணியை தனியாளாக உபுல் தரங்க வெற்றிபெறச் செய்தார்.

இறுதிப் போட்டியில் சிக்ஸர்களை குவித்த இவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 9 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 55 பந்துகளில் 104 ஓட்டங்களை குவித்தார். இந்த சதமானது இவரது இரண்டாவது T-20 சதமாக அமைந்ததுடன், இந்த தொடரின் இரண்டாவது சதமாகவும் பதிவானது.

கிரிக்கெட் நிறுவன தேர்தலை நடத்துவது குறித்து அமைச்சர் பைசரினால் விசேட அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை அடுத்த வருடம் பெப்ரவரி 9ஆம் திகதிவரை நீடிப்பதற்கு சர்வதேச…

தரங்கவுடன் உதவியாக துடுப்பெடுத்தாடிய ஷெஹான் ஜயசூரிய 22 பந்துகளுக்கு 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கொழும்பு அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. தம்புள்ளை அணி சார்பாக பந்து வீச்சில் அமில அபோன்சோ, டில்ருவான் பெரேரா மற்றும் இசுறு உதான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நான்கு அணிகள் பங்கேற்ற SLCT-20 லீக்கின் முதல் சம்பியன் கிண்ணத்தை கொழும்பு அணி சுவீகரித்துள்ளது.

ஸ்கோர் விபரம்

Title

Full Scorecard

Team Dambulla

163/8

(20 overs)

Result

Team Colombo

167/3

(18.2 overs)

Colombo won by 7 wickets

Team Dambulla’s Innings

BattingRB
Danushka Gunathilaka c C de Silva b S Ashan27
Ramith Rambukwella c N Pradeep b A Dananjaya5740
Dilruwan Perera (runout) P Perera62
Sadeera Samarawickrama c L Madushanka b A Dananjaya106
Ashan Priyanjan c S Jayasuriya b K Mendis913
Thisara Perera (runout) K Mendis47
Hasitha Boyagoda b J Mendis4026
Wanindu Hasaranga c C de Silva b J Mendis2218
Isuru Udana not out00
Shehan Madushanka not out42
Extras
9 (b 4, w 4, nb 1)
Total
163/8 (20 overs)
Fall of Wickets:
1-2 (D Gunathilaka, 2.1 ov), 2-13 (D Perera, 3.0 ov), 3-40 (S Samarawickrama, 5.3 ov), 4-84 (A Priyanjan, 10.4 ov), 5-92 (R Rambukwella, 11.5 ov), 6-100 (T Perera, 13.0 ov), 7-159 (W Hasaranga, 19.3 ov), 8-159 (H Boyagoda, 19.4 ov)
BowlingOMRWE
Shammu Ashan40241 6.00
Shehan Jayasuriya31250 8.33
Akila Dananjaya40372 9.25
Nuwan Pradeep10130 13.00
Kamindu Mendis40331 8.25
Jeewan Mendis40272 6.75

Team Colombo’s Innings

BattingRB
Avishka Fernando c & b A Aponso27
Upul Tharanga not out10455
Lahiru Madushanka c W Hasaranga b D Perera1112
Priyamal Perera c D Perera b I Udana1214
Shehan Jayasuriya not out3522
Extras
3 (w 3)
Total
167/3 (18.2 overs)
Fall of Wickets:
1-3 (A Fernando, 1.3 ov), 2-41 (L Madushanka, 6.1 ov), 3-77 (P Perera, 10.2 ov)
BowlingOMRWE
Danushka Gunathilaka40240 6.00
Amila Aponso30271 9.00
Dilruwan Perera40361 9.00
Ashan Priyanjan20170 8.50
Isuru Udana2.20261 11.82
Ramith Rambukwella1070 7.00
Wanindu Hasaranga10150 15.00
Shehan Madushanka10150 15.00

முடிவு – கொழும்பு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்டநாயகன் – உபுல் தரங்க

தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் – கசுன் ராஜித (13 விக்கெட்டுகள்)

தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – உபுல் தரங்க (414 ஓட்டங்கள்)

தொடர் ஆட்டநாயகன் – தனுஷ்க குணதிலக (247 ஓட்டங்கள், 7 விக்கெட்டுகள்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<