இந்தியாவிடம் தோற்ற இலங்கை அரையிறுதி வாய்ப்பை இழந்தது

93

நேபாளத்தில் இடம்பெறும் 18 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய கால்பந்து சம்மேளனக் கிண்ண தொடரில் (SAFF சம்பியன்ஷிப்) இலங்கை அணி இன்று (25) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 3-0 என தோல்வியை சந்தித்து முதல் சுற்றுடன் வெளியேறியது. 

பங்களாதேஷிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கால்பந்து அணி

நேபாளத்தில் இடம்பெறும் 18 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ண தொடரில் (SAFF சம்பியன்ஷிப்) இலங்கை…

பங்களாதேஷுக்கு எதிரான முதல் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்த நிலையிலேயே இலங்கை அணி இன்றைய போட்டிகளில் களம் கண்டது. முதல் போட்டியில் ஆடிய அணியில் இருந்து இரு மாற்றங்களை இலங்கை அணி இன்று மேற்கொண்டிருந்தது. அணித்தலைமைக்கான கைப் பட்டியும் ஷெனால் சந்தேசிடம் இருந்து மொஹமட் முஷ்பிருக்கு மாற்றப்பட்டது. ஹசன் ராசா மற்றும் தலால் ஷிஹாபுக்கு பதில் மொஹமட் சாஜித் மற்றும் அவிஷ் தேசான் களமிறக்கப்பட்டனர்

ஈரலிப்பாக சூழலில் போட்டியில் இந்திய இளையோர் அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. முன்களத்தில் அந்த அணி வீரர்கள் வேகமாக செயற்பட்டு விங்கஸ் பகுதியில் இருக்கும் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். எனினும், போதிய துல்லியமான முடிவொன்றை பெறாத நிலையில் அந்த அணி பல கோல் வாய்ப்புகளையும் தவறவிட்டது.   

இலங்கை வீரர்களுக்கு மைதானத்தில் தனது சொந்த பகுதியிலேயே பந்தை மீட்பதில் போராட வேண்டி இருந்தது. முன்களத்தில் ஷெனால் சந்தேஷ் மாத்திரம் தனியே போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. 36 ஆவது நிமிடத்தில் உபாதை காரணமாக மொஹமட் சாஜித்துக்கு பதில் தலால் ஷிஹாப் மாற்றப்பட்டார்

முதல் பாதியின் மத்திய பகுதியில் இந்திய அணி கோல் பெறும் வாய்ப்பை நெருங்கியபோது உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதோடு, இலக்குத் தவறியது.  

முதல் போட்டிக்கு முற்றிலும் மாறாக இலங்கை வலுவான தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்துவதை காண முடிந்தது. பந்து இலங்கை வீரர்களிடம் வரும்போது அவர்கள் எதிரணி கோல்கம்பத்தை ஆக்கிரமிப்பதற்கு பதில் பந்தை உதைத்து தக்கவைத்து கொள்வதையே செய்தனர்.   

இலங்கை வீரர்கள் பின்களத்தில் நிலைத்திருக்கும்போது இந்திய வீரர்கள் இலங்கை பக்கமாக அதிகம் முன்னேறி மேலும் ஆழுத்தம் கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணியால் முதல் பாதியில் எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக்கொடுக்காமல் இருக்க முடிந்தது.  

முதல் பாதி: இலங்கை 0 – 0 இந்தியா

இலங்கை கோல்காப்பாளர் மொஹமட் முர்சித் முதல் பாதி ஆரம்பித்த விரைவிலேயே இந்தியாவின் கோல் வாய்ப்பு ஒன்றை அபாரமாக தடுத்தார். மீடெய் குமன்தம் இலங்கை பெனால்டி போட்டிக்குள் முன்னேறி வேகமாக உதைத்த பந்தையே முர்சித் சிறந்த முறையில் தடுத்தார்.  

இதனைத் தொடர்ந்து கோல் கம்பத்திற்கு அருகில் இருந்து இந்திய வீரர் உதைத்த பந்தையும் முர்சித் தடுத்தார். பின்கள வீரர்களை இலகுவாக முறியடித்து இந்திய விங்கர் ஆட்டக்காரர் குமன்தம் அந்தப் பந்தை கோலை நோக்கி உதைத்தார்

AFC தகுதிகாண் போட்டிகளில் ஏமாற்றம் தந்த இலங்கை இளையோர் அணி

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) 16 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளில் சோபிக்கத் தவறிய 16 வயதுக்கு …

போட்டியின் 60 நிமிடங்கள் கடந்த நிலையில் இந்தியாவின் குர்கிரத் சிங் இந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர் உயர்த்தி உதைத்த பந்து இலங்கை கோல் காப்பாளருக்கு தடுக்க முடியாமல் வலைக்குள் சென்றது

இலங்கை அணி சார்பில் பதில் கோல் திருப்புவதற்கு தலால் சிஹாபுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்று கிட்டியது. கோணர் கிக் வாய்ப்பைக் கொண்டு அவர் தலையால் முட்டிய பந்து கோலுக்கு அருகால் பட்டும்படாமலும் சென்றது. இது போட்டியின் 67 ஆவது நிமிடத்தில் இலங்கைக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பமாக இருந்தது

தனது இரண்டாவது கோலை பெறுவதற்கு இந்திய வீரர்கள் இடைவிடாது போராடினர். இதனால், இலங்கை அணிக்கு எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமிக்க சற்று இடைவெளி கிடைத்தது. இந்நிலையில் இலங்கை அணி பயிற்சியாளர் அமானுல்லா பதில் வீரர் தலாலுக்கு பதில் முஹமது ரிகாஸை களமிறக்கினார். தசைப்பிடிப்பால் வேதனையுற்ற நிலையிலேயே தலால் மாற்றப்பட்டார்.    

அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டியது அவசியம் என்ற நிலையில் இலங்கை கடைசி நேரத்திலேயே கோல் முயற்சியை தீவிரப்படுத்தி வீரர்களை முன்களத்தில் நிறுத்தியது

Embed – https://www.thepapare.com/international-football-roundup-25th-september-2019-laliga-barcelona-juventus-tamil/ 

இந்திய அணி பங்களாதேஷை விடவும் பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இலங்கை அணிக்கு இந்த உத்தி கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.   

எனினும், குர்கிரத் சிங் இரண்டாவது கோலை பெற்றபோது இலங்கை அணியில் எதிர்பார்ப்புகள் சிதறியது. அவர் 89ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்கு வெளியே இருந்து முர்சிதை முறியடித்து பந்தை வலைக்குள் செலுத்தினார்

ஒருசில நிமிடங்களில் ஷெஹான் ப்ரபுத்த இலங்கை சார்பில் கோல் ஒன்றை பெறும் வாய்ப்பை தவறவிட்டார். இந்நிலையில், மாற்று வீரராக வந்த அமான் செட்ரி மேலதிக நேரத்தில் கோல் ஒன்றை பெற்று இந்திய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெறச் செய்தார்.   

முழு நேரம்: இலங்கை 0 – 3 இந்தியா

கோல் பெற்றவர்கள் 

இந்தியா குர்கிரத் சிங் 61’, 89’, அமான் செட்ரி 92’

மஞ்சள் அட்டை

இலங்கை –  எம். சாஜித் 32’, எம். பிரஷான்த் 76’ 

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<