ஐந்தாவது உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 21 இலங்கையர்

164
5th asian indoor games

ஐந்தாவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழா இம்மாதம் 17ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை முதற்தடவையாக மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானில் நடைபெறவுள்ளது.

45 ஆசிய நாடுகள் உள்ளடங்கலாக 65 ஆசிய, பசுபிக் நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,000 வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளும் இம்முறைப் போட்டித் தொடர், துர்க்மெனிஸ்தானின் தலைநகர் அஸ்கபாத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி 21 வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தேசிய சாதனையுடன் பொதுநலவாய பளுதூக்கலில் இலங்கைக்கு இரு பதக்கங்கள்

பொதுநலவாய நாடுகளின் பளுதூக்கல் போட்டித் தொடரின் 2ஆவது நாளான….

சுமார் 21 விளையாட்டுகளை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் பளுதூக்கல், டைகொண்டோ, குத்துச்சண்டை, செஸ் மற்றும் மெய்வல்லுனர் ஆகிய 5 வகையான விளையாட்டுகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இந்நிலையில் 5ஆவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம், எதிர்வரும் 15ஆம் திகதி துர்க்மெனிஸ்தான்  நோக்கி பயணமாகவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டு விழா முதற்தடவையாக 2005ஆம் ஆண்டு தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்றது. 2007ஆம் ஆண்டு மக்காவு இராச்சியத்திலும், பின்னர் 2009ஆம் ஆண்டு வியட்னாமிலும் இடம்பெற்றது. எனினும், 2013ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற இப்போட்டித் தொடர் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழா என பெயர் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனர் மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழாவில் இலங்கை அணி எந்தவொரு தங்கப் பதக்கத்தை வென்றிருக்கவில்லை. எனினும், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 3 வெள்ளிப் பதக்கங்களையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

இலங்கை அணி விபரம்

பளுதூக்கல்

கே.டி எகொடவத்த(56 கிலோ கிராம்), எஸ்.எஸ்.பி விஜேசூரிய (62 கிலோ கிராம்), பீ.யூ சாரக(105 கிலோ கிராம்), என். தயான்(பயிற்றுவிப்பாளர்)

குத்துச்சண்டை

சீ.டி பெர்னாந்து(57 கிலோ.கிராம்), சி.எச் பெரேரா(65 கிலோ கிராம்), டீ.கே.எம் மதுரங்க(74 கிலோ கிராம்), என். கருணாசேன(48 கிலோ கிராம்), எம்.டி.எஸ் மதுஷானி(52 கிலோ.கிராம்), டீ.டீ.கே வீரபாகு(58 கிலோ கிராம்), என்.கே.ஜே பிரியன்த(பயிற்றுவிப்பாளர்)  

இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்ட சம்பியன்களாக ரத்நாயக்க ம.ம.வி மற்றும் பெனடிக்ட்ஸ் கல்லூரி

“அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்ட தொடர் 2017” கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல்…

தைக்கொண்டோ

டீ.பி.கே அநுர பண்டார(54 கிலோ கிராம்), எல்.சி சம்பத் லியனகே(57 கிலா கிராம்), எம்,கே ரொமேஷ்(பயிற்சியாளர்)

மெய்வல்லுனர்

ஹிமாஷ ஏஷான்(60 மீற்றர்), இதுனில் ஹேரன்(800 மீற்றர்), மஞ்சுள குமார(உயரம் பாய்தல்), அமில ஜயசேகர(நீளம் பாய்தல்), கயன்திகா அபேரத்ன(800 மீற்றர்), விதூஷா லக்ஷானி(முப்பாய்ச்சல்), சஜித் ஜயலால்(பயிற்றுவிப்பாளர்)

செஸ்

ரஜின்ந்திர சேனக களுகம்பிடிய, ரொமேஷ் சந்த்ர வீரவர்தன, மொஹமட் சௌம்யா சைனப், தனுஷி ஹங்சிகா மற்றும் புத்திய நிருக்ஷ