ஐந்து வருடங்களின் பின் ஒப்பந்தம் பெற்ற நியூசிலாந்து வீரர்

101

நியூசிலாந்து கிரிக்கெட் சபை (NZC) தம்முடைய 2023-24 ஆண்டுகளுக்கான வருடாந்த ஒப்பந்தத்தினைப் பெற்ற வீரர்கள் குறித்த அறிவிப்பினை வியாழக்கிழமை (08) வெளியிட்டிருக்கின்றது.

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர்; இலங்கை குழாம் அறிவிப்பு

அந்தவகையில் நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் வருடாந்த ஒப்பந்தத்தினை சுமார் 5 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பெற்ற வீரராக 31 வயது நிரம்பிய வேகப் பந்துவீச்சாளரான அடம் மில்னே மாறியிருக்கின்றார்.

இதுவரை 16 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக ஆடியிருக்கும் மில்னே, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து அணியிலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மில்னே நியூசிலாந்து அணிக்காக அண்மையில் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, பாகிஸ்தான் சுற்றுப் பயணத்திலும் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இதுவே மில்னே வருடாந்த வீரர் ஒப்பந்தத்தினை பெறுவதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

இதேவேளை வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தினை பெறும் வாய்ப்பு சுழல் பந்துவீச்சாளரான அஜாஸ் பட்டேலுக்கு இல்லாமல் போயிருக்கின்றது. இடதுகை சுழல்வீரரான அஜாஸ் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது பந்துவீச்சாளராக இருந்த போதிலும் கடந்த ஆண்டில் நியூசிலாந்து அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே ஆடியிருந்தார். அத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆடும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

அதேநேரம், வெளிநாட்டு லீக் தொடர்களில் அதிகம் கவனம் செலுத்துவதற்காக தம்மை வீரர் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டுகோள் விடுத்த ட்ரென்ட் போல்ட், மார்டின் கப்டில் மற்றும் கொலின் டி கிராண்ட்ஹோமே ஆகியோர் நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் புதிய வீரர் ஒப்பந்தத்திற்குள் உள்வாங்கப்படாத வீரர்களாக காணப்படுகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்து ; WTC இறுதிப்போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இதேநேரம் வீரர் ஒப்பந்தம் வழங்கப்ட்ட வீரர்களில் இருந்தே இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் நியூசிலாந்து குழாம் தெரிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒப்பந்தம் பெற்ற வீரர்கள்

பின் அலன், டொம் பிலன்டல், மைக்கல் பிரஸ்வெல், மார்க் சாப்மன், டெவோன் கொன்வெய், லோக்கி பெர்குஸன், மேட் ஹென்ரி, கைல் ஜேமிசன், டோம் லேதம், அடம் மில்னே, டேரைல் மிச்சல், ஹென்ரி நிக்கோல்ஸ், கிளன் பிலிப்ஸ், மிச்சல் சான்ட்னர், இஸ் சோதி, டிம் சௌத்தி, ப்ளைர் டிக்னர், நெயில் வெக்னர், கேன் வில்லியம்சன், வில் யங்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<