பேதுரு கல்லூரியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி

318
Zahira College vs St.Peter's College - Schools Football

இந்த வருடத்திற்கான பிரிவு l பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தமது முதல் போட்டியில் புனித பேதுரு கல்லூரியை இலகுவாக வீழ்த்திய கொழும்பு ஸாஹிராக் கல்லூரி, வெற்றியுடன் இவ்வருட தொடரை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி, மழை காரணமாக தாமதமாகியே ஆரம்பிக்கப்பட்டது. இதனால் போட்டியின் இரு பாதி ஆட்டமும் தலா 40 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டிருந்தது.  

இரு கல்லூரிகளினதும் முக்கிய வீரர்கள் தேசிய அணிக்கான பிரவேசத்துடன் ஈரான் சென்றமையினால், முன்னணி வீரர்கள் இன்றியே இரு அணியினரும் இந்தப் போட்டியில் விளையாடினர்.  

பாடசாலை கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் முதலாம் வாரம் ஆரம்பம்

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும்….

தமது சொந்த மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் ஆரம்பம் முதலே ஸாஹிரா வீரர்களின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. எனினும், மழையுடன் கூடிய மைதானத்தின் தன்மை, இரு அணியினது வீரர்களுக்கும் வழமையான வேகமான விளையாட்டிற்கு பெரும் தடையாக இருந்தது.  

11ஆவது நிமிடம் எதிரணியின் கோணர் திசையில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை ஸாஹிராக் கல்லூரி வீரர் மொஹமட் முஷ்பிர் ஹெடர் மூலம் கோலாக்கி, அணியை முன்னிலைப்படுத்தினார்.   

பின்னர் மத்திய களத்தில் எதிரணி வீரரிடமிருந்து பந்தைப் பறித்தெடுத்த ஸாஹிரா வீரர் அக்தார் பேதுரு கல்லூரி அணியின் கோல் நோக்கி பந்தை வேகமாக உதைந்தார். எனினும், பந்தை கோல் காப்பாளர் தடுத்தார்.

25 ஆவது நிமிடங்கள் கடந்த நிலையில் பேதுரு கல்லூரியின் பின்கள வீரர்கள் பலரைக் கடந்து தன்னிடம் வந்த பந்தை அக்தார் இலகுவாக கோலாக்கினார்.

மறுமுனையில் பேதுரு கல்லூரி வீரர்கள் உருவாக்கிய அனைத்து முயற்சிகளையும், ஸாஹிரா தரப்பின் மத்திய மற்றும் பின்கள வீரர்கள் முறியடித்தனர்.

எனவே, அக்தார் மற்றும் முஷ்பிர் ஆகியோரின் கோல்களின் மூலம் ஸாஹிராக் கல்லூரி அணி முதல் பாதியில் 2 கோல்களால் முன்னிலை பெற்றது.  

முதல் பாதி: ஸாஹிராக் கல்லூரி 2 – 1 புனித பேதுரு கல்லூரி

இரண்டாவது பாதி ஆரம்பமாகியதில் இருந்தும் ஸாஹிரா வீரர்களின் வேகம் சற்று அதிகமாகவே இருந்தது.

53ஆவது நிமிடத்தில் முஷ்பிர் மூலம் ஸாஹிராக் கல்லூரி அணி தமக்கான மூன்றாவது கோலையும் பெற்றது. தமக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை முஷ்பிர் இலகுவாக கோலாக்கினார்.

பின்னர், புனித பேதுரு கல்லூரிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது அவ்வணி வீரர் ஷெஹான் மூலம் சிறந்த முறையில் உள்ளனுப்பப்பட்ட பந்து கோலுக்குள் செல்லும் வண்ணம் உயர்ந்து செல்கையில், ஸாஹிரா கோல் காப்பாளர் ஸாகிர் பாய்ந்து பந்தை வெளியே தட்டினார்.   

சுகததாச மைதானத்தில் கோல் மழை பொழிந்த புனித ஜோசப் கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 18 வயதுக்கு…

ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் பேதுரு கல்லூரியின் பின்களத்திற்கு ஸாஹிரா வீரர்கள் பந்தை அனுப்ப அதனை தடுக்க பேதுரு அணியின் கோல் காப்பாளர் மிக வேகமாக முன்னே வந்தார்.  எனினும், அதற்குள் ரஸா பந்தை கோலுக்குள் உதைந்து கோல் எண்ணிக்கையை நான்காக உயர்த்தினார்.  

போட்டி நிறைவடைவதற்கு 3 நிமிடங்கள் எஞ்சியிருக்கையில் புனித பேதுரு கல்லூரியின் முன்னணி வீரர் ஷெஹான் பந்தை வேகமாக எடுத்து வந்து திடீர் என்று தனக்குப் பின்னால் இருந்த தனன்ஞயவிற்கு வழங்கினார். அவர் அதனை மத்திய களத்தில் இருந்து வேகமாக கோலுக்குள் அடித்து, தமது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.  

எஞ்சிய சில நிமிடங்களில் இரு தரப்பினரும் தமது அடுத்த கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவற்றின்மூலம் அவர்கள் சிறந்த பயனைப் பெறவில்லை.

முழு நேரம்: ஸாஹிராக் கல்லூரி 4 – 1 புனித பேதுரு கல்லூரி

கோல் பெற்றவர்கள்
ஸாஹிராக் கல்லூரி – மொஹமட் முர்ஷிக் 11’& 53’, மொஹமட் அக்தார் 26’, ரஸா 59’
புனித பேதுரு கல்லூரி- தனன்ஞய 77’

மஞ்சள் அட்டை
ஸாஹிராக் கல்லூரி – மொஹமட் முர்ஷிக் 14’, அஹமட் அதீக் 69’
புனித பேதுரு கல்லூரி- ஷெஹான் 33’, தனன்ஞய 80’