கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவர பாகிஸ்தான் சென்றுள்ள MCC

100

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் கொண்டு வரும் நோக்குடன், மெர்லிபோன் கிரிக்கெட் கழகமானது (MCC) பாகிஸ்தான் சென்று அங்கே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் மூன்று  T20 போட்டிகளில் விளையாடவிருக்கின்றது. 

MCC என அழைக்கப்படும் இந்த மெர்லிபோன் கிரிக்கெட் கழகமானது கிரிக்கெட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் தாய்க்கழமாகும். இந்த கழகத்தின் நிர்வாக தலைவராக இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவே, பாகிஸ்தான் சென்றுள்ள MCC அணியின் தலைவராகவும் செயற்படுகின்றார். 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை உத்தேச குழாம் அறிவிப்பு

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I கிரிக்கெட் போட்டிகளுக்கான 20 பேர் கொண்ட உத்தேச அணிக்குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ….

இந்த சுற்றுப்பயணத்தில் MCC மற்றும் லாஹூர் கலந்தர்ஸ் அணிகள் விளையாடும்  T20 போட்டி இன்று (14) ஆரம்பமாகவிருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் திரும்புவது பற்றி குமார் சங்கக்கார தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார். 

”கிரிக்கெட் எல்லோருக்கும் சொந்தமானது. எனினும், கிரிக்கெட் வீரர்களை நோக்கும் போது அவர்களுக்கு அவர்களின் திறமையை காட்டுவதற்கான ஒரு களமும், அதற்கான ஆதரவும் அவசியமாக உள்ளது. 

எனவே இளம் வீரர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள, ஒரு சிறந்த அடித்தளம் ஒன்றினை நீங்கள் உருவாக்க வேண்டியிருக்கின்றது. 

இந்த நாட்டில் மிகவும் நீண்ட நாட்களுக்கு கிரிக்கெட் இல்லை எனில், கிரிக்கெட்டிற்கான பசி இங்கே இருந்து போய்விடவும் கூடும். ஆனால், இந்த நாட்டில் அதிக கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படும் போது அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், சிறுவர்களுக்கும் தொட்டுணரக்கூடிய ஒரு சிறு இடைவெளியிலே கண்டுகளிக்க முடியுமாக இருக்கும்” என சங்கக்கார தெரிவித்திருந்தார்.  

இன்னும் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்த குமார் சங்கக்கார, பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதனையும் உறுதி செய்திருந்தார்.      

”ஒரு கருத்தினை வார்த்தைகளில் சொல்லிக் காட்டுவதைவிட அதனை நாம் மைதானத்தில் விளையாடி அதனை செயலில் காட்டுவது சிறந்தது.

பல சர்வதேச தரப்புக்கள் இங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது நாம் சொல்ல வரும் செய்தியானது இன்னும் உறுதியாக மாறும் என்பதோடு, யாராலும் அதனை புறக்கணிக்க முடியாதவாறும் அமையும்.

அது இந்த விளையாட்டுக்கு மிகவும் நல்ல விடயமாகும். இந்த நாட்டிற்கும் அது நல்ல விடயம். அது சர்வதேசப் போட்டிகளுக்கும் பொருந்தும். பாகிஸ்தான் ஒரு சிறந்த நாடாக இருக்க அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எந்தளவிற்கு முக்கியத்துவம் என்பதனை நாங்கள் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது” எனக் சங்கக்கார குறிப்பிட்டிருந்தார்.  

MCC பாகிஸ்தானில் விளையாடும் போட்டிகளின் விபரம்

பெப்ரவரி 14 – லாஹூர் கலந்தர்ஸ் எதிர் MCC – எயிட்சன் கல்லூரி மைதானம் – T20 போட்டி

பெப்ரவரி 16 – பாகிஸ்தான் சஹின்ஸ் எதிர் MCC – எயிட்சன் கல்லூரி மைதானம் – ஒருநாள் போட்டி

பெப்ரவரி 17 – நொத்தர்ன்ஸ் எதிர் MCC – எயிட்சன் கல்லூரி மைதானம் – T20 போட்டி

பெப்ரவரி 19 – முல்டான் சுல்டான்ஸ் எதிர் MCC – எயிட்சன் கல்லூரி மைதானம் – T20 போட்டி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<