பலமிக்க துடுப்பாட்ட வரிசையுடன் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ்

207
BCCI

புதிய பெயர் மற்றும் புதிய இலச்சினை என இந்தப் பருவகாலத்திற்கான இந்திய ப்ரீமியர் லீக் (IPL) தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணி களம் காணுகின்றது. 

செய்த தவறுகளை திருத்த எதிர்பார்க்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

முதல் போட்டி – எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் (ஏப்ரல் 12, மும்பை)

முன்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என அழைக்கப்பட்ட, பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு தடவை மாத்திரமே IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பதோடு, IPL சம்பியன் கிண்ணத்தை இதுவரையில் வெற்றிகொள்ளாத இரண்டு அணிகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. 

வழமை போன்று விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் கே.எல். ராகுல் மூலம் வழிநடாத்தப்படும் பஞ்சாப் கிங்ஸ் அணி இம்முறை வீரர்கள் ஏலத்தின் மூலம் உலகின் முதல்நிலை T20 துடுப்பாட்டவீரரான இங்கிலாந்தின் டாவிட் மலான், வேகப்பந்துவீச்சாளர்களான ஜை ரிச்சர்ட்ஸன் மற்றும் றைலி மெரெடித் போன்ற வீரர்களை உள்வாங்கியிருக்கின்றது. 

இந்த புதிய உள்ளடக்கங்கள் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டுக்கான IPL தொடரில் ப்ளே ஒப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான சாதக நிலைமைகளை உருவாக்கியுள்ளது.   

மார்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் யார்?

பலம் 

உண்மையைச் சொல்லப் போனால் இந்த ஆண்டுக்கான IPL தொடரில் அதிக பலமிக்க துடுப்பாட்டவரிசையினைக் கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணியே கருதப்படுகின்றது. அந்தவகையில், கடந்த ஆண்டு IPL தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கே.எல். ராகுல், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரான், டாவிட் மலான் மற்றும் மயான்க் அகர்வால் போன்ற வீரர்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலேயே காணப்படுகின்றனர். 

அணித்தெரிவு

மயான்க் அகர்வால், கே.எல். ராகுல் போன்ற துடுப்பாட்டவீரர்கள் இந்த ஆண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினுடைய துடுப்பாட்டத்துறையினை போட்டிகளின் போது பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதோடு, கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரான் போன்ற வீரர்களின் பங்களிப்பும் அணியினது மத்திய வரிசைக்கு ஒத்தாசையாக இருக்கும் என நம்பப்படுகின்றது. 

இந்த வீரர்கள் ஒருபுறமிருக்க மொஹமட் சமி, முருகன் அஸ்வின், ஜை ரிச்சர்ட்ஸன் போன்ற வீரர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பந்துவீச்சுத்துறையில் பெறுமதி சேர்ப்பதற்கு காத்திருக்கின்றனர். 

முழுமையான அணிக்குழாம்

கே.எல். ராகுல் (அணித்தலைவர்), மயான்க் அகர்வால், கிறிஸ் கெயில், மன்தீப் சிங், நிகோலஸ் பூரான், சர்பராஸ் கான், மொஹமட் சமி, முருகன் அஸ்வின், அர்சதீப் சிங், ஹர்பிரிட் டார், தர்ஷன் நல்கண்டே, தீபக் கூடா, இஷான் பொரேல், ரவி பிஸ்னொய், ப்ரப்மன் சிங், கிறிஸ் ஜோர்டன், டாவிட் மலான், ஜை ரிச்சர்ட்ஸன், சாருக் கான், ரைலிய் மெரெடித், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜலாஜ் சக்ஸேனா, உட்ரக்ஸ் சிங், பெபியன் ஆலன், சாருப் குமார்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…