சம்பியன் பட்டம் வென்ற அகில தனன்ஞயவின் சென்.கிட்ஸ மற்றும் நெவில் பேட்ரியட்ஸ்

1178

மேற்கிந்திய தீவுகளில் முதன் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட ஆடவர்களுக்கான சிக்ஷ்டி (6IXTY), T10 தொடரில் அகில தனன்ஞயவின் அணியான சென். கிட்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் வீரர்கள் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியினை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

>> முதல் இன்னிங்ஸில் சிறந்த ஆரம்பம் பெற்றுள்ள இலங்கை U19 கிரிக்கெட் அணி

ஆறு அணிகள் பங்குபற்றிய இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் சென். கிட்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ்   ஜமைக்கா தலாவாஸ் அணியினை வீழ்த்தியும், ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி பார்படோஸ் ரோயல்ஸை வீழ்த்தியும் தெரிவாகின.

தொடர்ந்து இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) பெஸரட் மைதானத்தில் ஆரம்பமாகியது. பின்னர் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து 9.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 84 ஓட்டங்கள் எடுத்தது.

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக டிம் செய்பார்ட் 25 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்தார்.

சென். கிட்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் அணி பந்துவீச்சில் டொமினேக் ட்ரேக் 2 விக்கெட்டுக்களையும் அகில தனன்ஞய, ஜெரேமியா லூயிஸ் மற்றும் டுவான் ஜான்சேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 85 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய சென். கிட்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 9.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.

>> நஸீம் சாஹ்விற்கு உபாதை சிக்கல்கள் ஏற்படவில்லை – பாபர் அசாம்

சென். கிட்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த ஈவின் லூயிஸ் 16 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் அன்ட்ரே ரசல் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் – 84 (9.3) டிம் செய்பார்ட் 37 (25), டொமினிக் ட்ரேக்ஸ் 17/2(2)

சென். கிட்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் – 85/3 (9.4) ஈவின் லூயிஸ் 32(16), அன்ட்ரே ரசல் 11/2(1)

முடிவு – சென். கிட்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் 3 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<