150 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய சாதனையை முறியடித்த யுபுன்

109

தெற்காசியாவின் அதிவேக வீரரும், இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரருமான யுபுன் அபேகோன், இத்தாலியில் நேற்று (24) நடைபெற்ற Perso Trophy 2022 போட்டித் தொடரில் ஆண்களுக்கான 150 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

குறித்த போட்டியை 15.16 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 2017 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு வீரர் Yoshihide Kiryu, 15.35 செக்கன்களில் ஓடிமுடித்து நிலைநாட்டிய ஆசிய சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்து சாதனை படைத்தார்.

இந்தப் போட்டியை 15.17 செக்கன்களில் நிறைவுசெய்த இத்தாலி நாட்டு வீரர் Chituru Ali இரண்டாவது இடத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த Mattia Furlani 15.76 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே, குறித்த போட்டியில் பங்குகொண்ட இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான வினுர லக்மால், 16.83 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்தார்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<