லுங்கி இங்கிடி விலகல்; அதிரடி வீரரை அறிவித்த டெல்லி

Indian Premier League 2024

71
Delhi Capitals sign Fraser-McGurk as Ngidi's replacement

இம்முறை ஐபிஎல் தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த தென்னாபிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு மாற்றீடு வீரராக அவுஸ்திரேலியாவின் ஜேக் ஃபிரேசர் மெக்கூர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 17ஆவது அத்தியாயம் ;ம்மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இம்முறை போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகிறது. 

இந்த நிலையில், டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த தென்னாபிரிக்காவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் 

இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற SA20 தொடரின் போது அவர் காயத்துள்ளாகியிருந்தாhர். எனவே டெல்லி அணியின் முக்கிய வீரராக இருந்துவரும் லுங்கி இங்கிடி நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது 

இதுவரை 14 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள லுங்கி இங்கிடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் அவரது இந்த முடிவு டெல்லி அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது 

இதனிடையே, லுங்கி இங்கிடிக்கு மாற்று வீரராக அவுஸ்திரேலியா அணியின் 21 வயதான இளம் வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கூர்க்கை டெல்லி கெப்பிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஷ் T20 லீக் தொடரில் ஜேக் ஃபிரேசர் மெக்கூர்க் பிரகாசித்திருந்தார். இதன் காரணமாக அண்மையில் நிறைவடைந்த ILT20 தொடரில் டுபாய் கெப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார் 

அத்துடன், இவர் அவுஸ்திரேலியா அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் 1 பௌண்டரிகளை விளாசினார். மேலும் இவர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற மார்ஷ் கிண்ண ஒருநாள் தொடரில் தஸ்மானியா அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார் 

இதுவரை 37 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 133.54 ஸ்ட்ரைக் ரேட் உடன் 645 ஓட்டங்கைளைக் குவித்துள்ளார். 

முன்னதாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஹெரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தரமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<