உலகக் கிண்ணம் ஒரு பாடமாக அமைந்தது – குல்படின்

249
©Getty image

இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நிறைய தவறுகள் செய்தாலும், தான் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் பல விடயங்களை கற்றுக் கொண்டதாக ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படின் நைப் தெரிவித்தார். 

உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த ஆப்கானிஸ்தான் அணி, தனது கடைசி லீக் போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் போராடித் தோல்வியை சந்தித்தது

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணி ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் பரிதாபமாக இம்முறை உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது

ஆப்கானுக்கு எதிரான வெற்றியுடன் உலகக்கிண்ணத்தை நிறைவு செய்த மேற்கிந்திய தீவுகள்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 42ஆவது ………….

இந்த நிலையில், போட்டியின் பிறகு ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படின் நயிப் அளித்த பேட்டியில்

”இந்த தருணத்தில் நாங்கள் உடற்தகுதி இல்லாமல் விளையாடுகிறோம் என்று நான் நினைக்கிறேன். உடற்தகுதி எங்களுக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. எமது வீரர்கள் உடற்தகுதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, அதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, இவ்வாறான தருணங்களில் அழுத்தங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

எங்கள் துடுப்பாட்ட திறமைகளை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். உலகக் கிண்ணம் என்பது நம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்” என்றார்.  

அதேநேரம், ஆப்கானிஸ்தானுக்கு எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் குறித்து குல்படின் இதன்போது பேசினார்

”இந்தப் போட்டியைப் பொறுத்தமட்டில் மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயித்த ஓட்ட இலக்கை எம்மால் துரத்தி அடித்திருக்கலாம். ஆனால், அவர்களால் தங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. இது நிச்சயமாக இலகுவான ஓட்ட இலக்காகும். ஒரு கட்டத்தில், நாங்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இருந்தோம். கில் மற்றும் ரஹ்மத் ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடினர். 

எமது பின்னடைவுக்கு முரண்பாடுகளே காரணம் – ஜேசன் ஹோல்டர்

இம்முறை உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய ……..

ஆனால் இறுதியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 300-க்கும் அதிகமான ஓட்டங்களை துரத்தியடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அத்துடன், இக்ரம் அலிகில் 19 வயதுடைய வீரர். அவர் இறுதியாக 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் விளையாடியிருந்தார். எனினும், அவர் இன்று தனது திறமையை வெளிக்காட்டினார். அவர் மட்டுமல்ல, எங்களிடம் இன்னும் நிறைய இளம் திறமையான வீரர்கள் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கும் வாய்ப்பளித்தால் அது எமது கிரிக்கெட் எதிர்காலத்துக்கு நன்றாக இருக்கும்” என தெரிவித்தார். 

இதேநேரம், இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்

இம்முறை உலகக் கிண்ணத்தில் நாங்கள் விளையாடி விதம் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். நாங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் பல தவறுகளை செய்தோம். கடந்த 2 அல்லது 3 வருடங்களாக நாங்கள் விளையாடிய விதம், எமது வீரர்களின் திறமை என்பன இந்தத் தொடரில் வெளிவரவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியாது

ஆனால் நாங்கள் நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டோம். குறிப்பாக ஒரு தலைவராக நான் நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டதுடன். ஆரம்ப லீக் போட்டிகளில் நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இறுதியாக நடைபெற்ற 4 போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடியிருந்தோம். உண்மையில் அணியில் உள்ள இளம் வீரர்களின் திறமைகள் குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

எனினும், பலமிக்க அணிகளுடன் விளையாடும் போது சின்னச் சின்ன தவறுகள் செய்தால் அதில் வெற்றி பெறுவதென்பது மிகவும் கடினமாகும். கிரிக்கெட் என்பது எமது சிந்தனையுடன் தொடர்புபட்ட விளையாட்டாகும். மைதானத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவது இலகுவான விடயமல்ல” என குறிப்பிட்டார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<