முதலாவது மகளிர் IPL தொடர் அடுத்த ஆண்டில்

Women's IPL 2023

138

மகளிர் அணிகள் பங்குபெறும் முதலாவது இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடர் அடுத்த ஆண்டின் மார்ச் மாதம் தொடக்கம் 03ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> ILT20 தொடரில் விளையாடவுள்ள மதீஷ பதிரண

அதன்படி அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் அணிகளுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து ஒரு வாரத்தின் பின்னர் நடைபெறும் வகையில் மகளிர் IPL தொடரானது ஒழுங்கு செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2027ஆம் ஆண்டு வரை ஐந்து பருவங்களுக்கான மகளிர் IPL தொடர்களுக்குரிய ஊடக உரிமைக்கான கேள்வி (Media Rights Bid), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மூலம் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மகளிர் IPL தொடரில் மொத்தம் 5 அணிகள் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு தொடரில் இறுதிப் போட்டி அடங்கலாக மொத்தம் 18 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

அத்துடன் தொடரில் பங்கெடுக்கும் ஒவ்வொரு அணியும் மொத்தமாக 18 வீராங்கனைகளை கொண்டிருக்க முடியும் என்பதோடு, அதில் 6 வீராங்கனைகள் வெளிநாட்டினைச் சேர்ந்தவர்களாக காணப்பட முடியும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

இன்னும் தொடரில் பங்கெடுக்கும் ஒவ்வொரு அணியும் போட்டிகளில் பங்கெடுக்கும் போது தமது முதல் பதினொருவரில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளோடு ஆட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த 5 வெளிநாட்டு வீராங்கனைகளில் ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவம் பெற்ற நாடுகளின் வீராங்கனைகள் 4 பேரும், அங்கத்துவ நாடு ஒன்றின் வீராங்கனை ஒன்றும் இருக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> BPL அணியின் பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் சமிந்த வாஸ்

அத்துடன் தொடரின் போட்டிகளை நடாத்துவதற்காக சென்னை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, மும்பை மற்றும் அஹ்மதபாத் ஆகிய இடங்களில் இருக்கும் மைதானங்கள் தெரிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<