நியூசிலாந்து T20I குழாத்தில் மீண்டும் கேன் வில்லியம்சன்

206

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான நியூசிலாந்து T20I குழாம் கேன் வில்லியம்சனின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

MLC T20 தொடர் இரண்டாவது பருவத்திற்கான திகதிகள் அறிவிப்பு

தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றது. இந்த ஒருநாள் தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து குழாமே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதில் பங்களாதேஷிற்கு எதிரான நியூசிலாந்து T20I குழாத்திற்கு தலைவராக பெயரிடப்பட்டுள்ள கேன் வில்லியம்சன் அதன் மூலம் சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் T20I போட்டிகளில் ஆடவிருக்கின்றார்.

இந்திய அணியுடன் கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் கடைசியாக T20I போட்டி ஒன்றில் ஆடிய கேன் வில்லியம்சன் IPL போட்டிகளின் போது உபாதைக்கு உள்ளாகிய காரணத்தினால் நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கவில்லை. பின்னர் இந்த ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கிய அவர் அதன் தொடர்ச்சியாக தற்போது T20I போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்ட டெவோன் கொன்வேயிற்கு T20I தொடரில் பணிச்சுமை கருதி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம் மைக்கல் பிரஸ்வெல், லோக்கி பெர்குஸன், மேட் ஹென்ரி மற்றும் ஹென்ரி சிப்லே ஆகிய வீரர்கள் காயம் காரணமாக T20I தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழக்கின்றனர். இவர்கள் தவிர ட்ரென்ட் போல்ட் சொந்த காரணங்கள் கருதி T20I போட்டிகளில் ஆடவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சகலதுறைவீரரான ஜேம்ஸ் நீஷம், வேகப்பந்துவீச்சாளரான பென் சீர்ஸ் போன்ற வீரர்கள் நியூசிலாந்து T20I குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக ஹார்திக் பாண்டியா

நியூசிலாந்து அணி பங்களாதேஷை T20I தொடரின் முதல் போட்டியில் எதிர்வரும் 27ஆம் திகதி நேப்பியர் நகரில் வைத்து எதிர் கொள்ளவுள்ளதோடு, தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் டிசம்பர் 29, 31 ஆம் திகதிகளில் தவுராங்காவில் இடம்பெறவிருக்கின்றது.

நியூசிலாந்து T20I குழாம்

கேன் வில்லியம்சன் (தலைவர்), பின் அலன், மார்க் சாப்மன், கைல் ஜேமிசன், அடம் மில்னே, டேரைல் மிச்சல், ஜேம்ஸ் நீஷம், கிளன் பிலிப்ஸ், மிச்சல் சான்ட்னர், பென் சீர்ஸ், டிம் செய்பார்ட், இஸ் சோதி, டிம் சௌத்தி

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<