இலங்கை மக்களுக்கான சேவையில் இணைந்த குசல் மெண்டிஸ்

110
Kusal Mendis

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் குழாம் ஒன்று, கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவாலான நிலையில் பலருக்கு உலர் உணவுகள் அடங்கிய நிவாரண பொதிகளை வழங்கியுள்ளனர்.

பாகிஸ்தான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அப்ரிடி

கொரோனா வைரஸ் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும்

கொவிட்-19  வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அரசின் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில், கொழும்பு உட்பட்ட நோய் அதிகமாக பரவிவரும் பகுதிகளில் ஊரடங்கு சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால், பல பிரதேசங்களிலும் உள்ள மக்கள் தங்களுடைய உணவு தேவையினை பூர்த்திசெய்வதற்கு தடுமாறி வருகின்றனர்.  

எனவே, உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள தடுமாறும் பலருக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தமது உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான குசல் மெண்டிஸ் மற்றும் அவருடன் சில வீரர்கள் இணைந்து கொழும்பு மருதானை மற்றும் கொம்பனித் தெரு பகுதிகளில் உள்ள பலருக்கு உலர் உணவுகள் அடங்கிய நிவாரண பொதிகளை வழங்கியுள்ளனர்.

அதுமாத்திரமின்றி கொழும்பு மருதானை பகுதியில் இருந்த 23 சிறுவர்களை கொண்டிருந்த சிறுவர் இல்லம் ஒன்றுக்கும் இதன்போது குறித்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வழங்கப்பட்ட நிவாரண பொதிகளில், வீடுகளுக்கு தேவையான உணவு பொருட்கள், பிஸ்கட்டுகள், மருந்து பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் போன்றன வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிவாரண பொருட்களை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குமார் சங்கக்கார, அஞ்செலோ மெதிவ்ஸ், தம்மிக பிரசாத் மற்றும் ரொன் சந்ரகுப்த ஆகியோர் உதவியுள்ளனர்.

தொடரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனித நேயம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முழுவதும் ஊரடங்குச்

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக இலங்கை கிரிக்கெட் சபை 25 மில்லியன் ரூபாவினை வழங்கியிருந்த நிலையில், திமுத் கருணாரத்ன உள்ளிட்ட இலங்கை அணியின் வீரர்கள்,  கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளுக்கு கொரோனா தொற்றுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான நிதியினை வழங்கியிருந்தனர்.

அதுமாத்திரமின்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் COVID 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் ஒரு தொகைப் பணத்தை நன்கொடையாக வழங்கியதுடன், மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார அடங்கிய குழுவொன்று 6000 உலர் உணவு பொதிகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க