MLC T20 தொடர் இரண்டாவது பருவத்திற்கான திகதிகள் அறிவிப்பு

230

ஐக்கிய அமெரிக்காவின் பிரதான T20 லீக் தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) T20 தொடரின் இரண்டாவது பருவத்திற்கான போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

இளம் இந்திய பந்துவீச்சாளர் பாணியில் சந்தேகம்

அந்தவகையில் MLC T20 தொடரின் இரண்டாவது பருவத்திற்கான போட்டிகள் 2024ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 04ஆம் திகதி தொடக்கம் நடைபெறவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது 

2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், இந்த உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து நான்கு நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திர தினத்திலேயே MLC T20 தொடர் ஆரம்பமாகவிருக்கின்றது 

இதேநேரம் புதிய பருவத்திற்கான MLC T20 தொடர் முதல் பருவத்திலும் பார்க்க வேறு வகையான போட்டிக்கட்டமைப்புடன் இடம்பெறும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. அத்துடன் தொடரின் போட்டிகள் ஒகஸ்ட் மாதத்தின் ஆரம்பம் வரை நடைபெறும் எனவும்  சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது 

அதேநேரம் புதிய போட்டித் தொடரில் அமெரிக்காவின் புதிய மைதானங்களில் போட்டிகளை நடாத்துவதற்கான பேச்சு வார்த்தைகளும் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது 

ஐக்கிய அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டினை பிரபல்யப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட MLC T20 தொடர் BBL, SA20 போன்று கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படும் தொடர்களில் ஒன்றாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<