T20 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு செல்ல அணிகள் என்ன செய்ய வேண்டும்??

165
Getty Images

T20 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு (சுபர் 12) இலங்கை ஏற்கனவே தெரிவாகிய நிலையில் T20 உலகக் கிண்ண முதற்சுற்றில் ஆடிய நெதர்லாந்து தாம் அடைந்த தோல்விகளால் தொடரிலிருந்து வெளியேறியிருக்கின்றது.

இந்நிலையில் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதற்சுற்றில் எஞ்சிய 6 அணிகளுக்கு அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அது எப்படி சாத்தியம் என்பது பற்றிக் கீழே பார்ப்போம்.

>>முதல் T20 உலகக் கிண்ணத்தை குறிவைத்துள்ள தென்னாபிரிக்கா

ஸ்கொட்லாந்து (குழு B)

ஸ்கொட்லாந்து ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் காணப்படுகின்ற போதும் அவ்வணி தமக்கு எஞ்சியிருக்கும் ஓமான் அணியுடனான போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அவ்வணியின் சுபர் 12 வாய்ப்பு நிச்சயமாக உறுதி செய்யப்படும்.

ஏனெனில், ஓமான் அணியுடனான போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் ஓமான் அணிக்கு 4 புள்ளிகள் மாத்திரமே கிடைக்கும். இந்நிலையில் குழு B இல் ஒரு வெற்றியுடன் காணப்படும் ஏனைய அணியான பங்களாதேஷ் பபுவா நியூ கினியாவை வீழ்த்தி 4 புள்ளிகளை பெறும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

எனவே ஓமான், பங்களாதேஷ் அணிகள் வெற்றி பெறுகின்ற சந்தர்ப்பத்தில் சிறந்த NRR (Net Run Rate) ஒன்றினைப் பெறும் போதே ஸ்கொட்லாந்து அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

ஓமான் (குழு B)

ஓமான் அணி சிறந்த NRR இணைக் கொண்டிருப்பதால் ஸ்கொட்லாந்து அணியுடனான வெற்றி அவர்களின் அடுத்த சுற்று வாய்ப்பினை உறுதி செய்யும்.

எனினும் ஓமான் தோல்வியுற்று மிக மோசமான தோல்வியொன்றினை பங்களாதேஷ் அணி பபுவா நியூ கினியாவுடன் பெறும் சந்தர்ப்பத்தில், ஓமான் அணிக்கு அடுத்த சுற்று செல்வதற்கான வாய்ப்பும் காணப்படும். ஆனால்,  பங்களாதேஷ் மோசமான தோல்வியொன்றினை பெற்றால் பபுவா நியூ கினியாவும் அடுத்த சுற்றுக்கு செல்ல பங்களாதேஷ், ஓமான் அணிகளுடன் NRR இணை வைத்துப் போட்டியிடும்.

பங்களாதேஷ் (குழு B)

பங்களாதேஷ் அணி ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியினை தழுவியதன் காரணமாக அவர்கள் அடுத்த சுற்று வாய்ப்பினை உறுதி செய்ய தாம் அடுத்ததாக பபுவா நியூ கினிய அணியுடன் ஆடும் போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும்.

எனினும், பங்களாதேஷ் தோல்வியடையும் போது அடுத்த சுற்றுக்கு தெரிவாக நினைத்தால் ஓமான் அணி தோல்வியினை தழுவ வேண்டும். இதன்போதே, பங்களாதேஷ் அணிக்கு NRR அடிப்படையில் அடுத்த சுற்று செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

>>நெதர்லாந்தை வீழ்த்திய நமீபியாவுக்கு வரலாற்று வெற்றி

பபுவா நியூ கினியா (குழு B)

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த வெற்றியொன்றினைப் பெற்று, ஓமான் அணி ஸ்கொட்லாந்தினை வீழ்த்தினால் பபுவா நியூ கினியா அணியும் T20 உலகக் கிண்ணத்திற்கான அடுத்த சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பினை NRR அடிப்படையில் பெறும். எனினும், பபுவா நியூ கினியா  பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் தோல்வியினை தழுவியினால் T20 உலகக் கிண்ணத்தொடரிலிருந்து வெளியேறும்.

அயர்லாந்து (குழு A)

குழு A இல் இரண்டாம் இடத்தில் காணப்படும் அயர்லாந்து அணிக்கு எஞ்சியிருக்கும் நமீபிய அணிக்கு எதிரான மோதலில் கிடைக்கும் வெற்றி அல்லது சமநிலை அதன் அடுத்த சுற்று வாய்ப்பினை உறுதி செய்யும். அதன்படி, அயர்லாந்து அணி நமீபிய அணிக்கு எதிரான போட்டியினை சமநிலை செய்யும் போது NRR அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். ஆனால், அயர்லாந்துக்கு நமீபியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு இல்லாமல் போகும்.

>>அயர்லாந்துடனான வெற்றியுடன் சுபர் 12 சுற்றுக்கு இலங்கை தகுதி

நமீபியா (குழு A)

குழு A இல் நெதர்லாந்து அணி எந்தவித வெற்றிகளை பெறாத நிலையில் நமீபிய அணி தமது அடுத்த போட்டியில் அயர்லாந்தினை வீழ்த்தினால் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். ஆனால், அயர்லாந்து போட்டியில் தோல்வியடைந்தால் நமீபிய அணி T20 உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும்.

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>