இங்கிலாந்தை 113 ஓட்டங்களுக்கு சுருட்டி தொடரை சமன் செய்த மேற்கிந்திய தீவுகள்

292
Photo Credits - AFP

இங்கிலாந்து அணியை 113 ஓட்டங்களுக்கு சுருட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி அந்த அணிக்கு எதிரான 5ஆவதும் கடைசியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் வென்று 2-2 என தொடரை சமநிலையில் முடித்துக் கொண்டது.

ஓட்ட மழை பொழிந்த போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓட்ட மழை பொழிந்த இங்கிலந்து அணி 29

பந்து அதிகம் மேலழும் செயின்ட் லூசியா ஆடுகளத்தில் கடந்த சனிக்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் சோட்பிட்ச் பந்துகளுக்கு தமது விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். மேற்கிந்திய தீவுகளின் ஒசேன் தோமஸ் 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பாதம்பார்த்தார்.

இங்கிலாந்து அணி தனது கடைசி 5 விக்கெட்டுகளையும் இரண்டு ஓட்டங்களுக்குள் பறிகொடுக்க ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது மிகக் குறைந்த ஓட்டங்களை பதிவு செய்தது.  

இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் சார்பில் மீண்டும் ஒரு முறை தனது அதிரடி ஆட்டத்தை காட்டிய கிறிஸ் கெயில் 27 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 77 ஓட்டங்களை விளாசினார்.  

இந்தத் தொடரில் 106 ஓட்ட சராசரியுடன் மொத்தம் 424 ஓட்டங்களை பெற்ற 39 வயதுடைய கெயில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் அவர் மொத்தமாக 39 சிக்ஸர்களை விளாசினார்.  

ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால்

இந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் தடைப்பட்டதன் காரணமாக, உலகின் முதல்நிலை ஒருநாள் அணியான இங்கிலாந்திடம் தொடர்ச்சியாக ஏழாவது ஒருநாள் தொடரில் தோல்வி அடையும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி தவிர்த்துக் கொண்டது.  

எனினும் 227 பந்துகளை மிச்சம் வைத்து மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றதன் மூலம் பந்துகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது மோசமான தோல்வியை சந்தித்தது.   

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 113 (28.1) – அலெக்ஸ் ஹேல்ஸ் 23, ஜோஷ் பட்லர் 23, ஒஷேன் தோமஸ் 5/21, கார்லஸ் பிரத்வெயிட் 2/17, ஜேசன் ஹோல்டர் 2/28

மேற்கிந்திய தீவுகள் – 115/3 (12.1) – கிறிஸ் கெயில் 77, மார்க் வுட் 2/55

முடிவு மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க