ஹோல்டரின் மிரட்டும் பந்துவீச்சால் பங்களாதேஷுக்கு தொடர் தோல்வி

153
courtsey - AFP

அணித் தலைவர் ஜேசன் ஹோல்டரின் மற்றொரு மிரட்டும் பந்துவீச்சின் உதவியோடு பங்களாதேஷுடனான இரண்டவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 166 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை 2-0 என முழுமையாக வென்றது.

பங்களாதேஷை இன்னிங்ஸால் வென்ற மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகளின் மிரட்டும் வேகப்பந்து வீச்சு மூலம் பங்களாதேஷுடனான முதலாவது டெஸ்ட்…

ஜமைக்காவின், சபீனா பார்க் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி, பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஒருமுறை சோபிக்கத் தவறியதால் மூன்று நாட்களுக்குள்ளேயே முடிவுற்றது. இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர் 103 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்ததோடு, இதனால் தொடர் நாயகன் மற்றும் போட்டி நாயகன் பரிசுகளையும் அவர் அள்ளினார்.

335 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை (14) தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 2 ஓட்டங்களுக்கே முதல் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் மாத்திரம் அரைச்சதம் (54) எட்டினார்.

எஞ்சிய வீரர்கள் நின்றுபிடிக்காமல் வெளியேறியதால் பங்களாதேஷ் அணி 168 ஓட்டங்களுக்கே சுருண்டது. பந்துவீச்சில் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தபோது அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிரெய்த் பிரய்த்வெயிட் தனது எட்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். மத்திய வரிசையில் ஷிம்ரோன் ஹெட்மியர் 86 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் சோபித்த யாழ் வீரர் வியாஸ்காந்த்

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர்…

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 354 ஓட்டங்களை பெற்றது. இதன்போது பங்களாதேஷ் அணி சார்பில் சுழல் வீரர் மஹிதி ஹஸன் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 149 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஆரம்ப வீரர் தமீம் இக்பால் அதிகபட்சம் 47 ஓட்டங்களை பெற்றார். ஹோல்டரால் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.

இதன்படி 205 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தபோது பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் அபாரமாக செயற்பட்டு மேற்கிந்திய தீவுகளின் முதல் நான்கு விக்கெட்டுகளையும் வெறும் 60 ஓட்டங்களுக்குள் சுருட்டினார்.

மேற்கிந்திய தீவுகளின் எந்த ஒரு வீரரும் 32 ஓட்டங்களைக் கூட தாண்டாத நிலையில் அந்த அணி 129 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மூன்றாவது முறை விமர்சையாக நடைபெறவுள்ள கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரீமியர் லீக்

யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள்…

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தனது இரண்டாவது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷகீப் அல் ஹஸன் 17 ஓவர்களில் 33 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். 2008 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் ஒன்றில் 7 விக்கெட்டுகளை பதம்பார்த்ததே அவரது சிறந்த பந்துவீச்சாகும்.   

மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சோபிக்கத் தவறியபோதும் அந்த அணி முதன் இன்னிங்ஸில் பெற்ற அதிக ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு சவாலான இலக்கொன்றை நிர்ணயிக்க போதுமாக இருந்தது. 

பங்களாதேஷ் அணி முதல் டெஸ்ட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகளின் மிரட்டும் வேகப்பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் இன்னிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நான்கு இன்னிங்ஸ்களிலும் ஒன்றில் கூட 200 ஓட்டங்களை எட்டத் தவறியதோடு ஒரு இன்னிங்ஸில் 43 ஓட்டங்களுக்கே சுருண்டது.

அடுத்து பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க