சுழற்பந்துவீச்சு ஆலோசகராக மாறும் பங்களாதேஷ் முன்னாள் வீரர்

169

பங்களாதேஷ் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளரான அப்துர் ரஸாக், பங்களாதேஷ் கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் (High Perfomance Center) சுழல்பந்துவீச்சு ஆலோசகராக நியமனம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பங்களாதேஷ் வீரர்களுக்கான உயர் செயற்திறன் நிலையத்திற்கான பயிற்சிகள் மே மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையிலையே, ரஸாக் குறுகிய ஒப்பந்த அடிப்படையில் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக நியமனம் பெற்றிருக்கின்றார்.

>>இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

எனவே இந்த உயர்செயற்திறன் நிலையத்தில் அப்துர் ரஸாக் பங்களாதேஷ் அணி பந்துவீச்சாளர்களின் திறன் விருத்திக்கு உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற அப்துர் ரஸாக், அதன் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழு உறுப்பினராக தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிலையிலையே, தற்போது பந்துவீச்சு ஆலோசகராகவும் பணியேற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் பங்களாதேஷ் கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் சம்பக்க ராமநாயக்க செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<