ஒரே போட்டியில் இரட்டை சாதனை படைத்த கோஹ்லி

133
BCCI

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 200 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த விராத் கோஹ்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தலைவராக அதிக ஓட்டங்கள் குவித்த டோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

கிறிஸ் கெயில், கே.எல் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

RCB அணிக்காக 6,000 ஓட்டங்கள்: கோஹ்லி புதிய சாதனை

இந்தப் போட்டியானது விராட் கோஹ்லி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய 200ஆவது போட்டியாகும். இதுவரை அந்த அணிக்காக 185 ஐ.பி.எல் போட்டிகளிலும் 15 சம்பியன் லீக் போட்டிகளிலும் விராட் கோஹ்லி விளையாடியுள்ளார்.  

இதன்மூலம் T20 அரங்கில் ஒரே அணியில் அதிக போட்டிகள் விளையாடிய வீரர் மற்றும் முதல்தடவையாக ஒரு அணிக்காக 200 போட்டிகளைக் கடந்த வீரர் என்ற பெருமைகளை அவர் பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில் நேற்றைய போட்டியின் நாணய சுழற்சிக்குப் பிறகு இடம்பெற்ற பேட்டியில் விராட் கோஹ்லி கருத்து தெரிவிக்கையில், 

”2008ல்இல் தான் அந்த அணியில் இணைந்தபோது 200 போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. அந்த அணி எனக்கு எல்லா விடயத்திலும் இத்தனை ஆண்டுகளில் இருந்து வருகின்றது. அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது” என்றார்.

அத்துடன், இந்த சாதனை நம்ப முடியாததாக உள்ளதாகவும் பெருமை அளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதன்மூலம் ஒரே அணிக்காக 200 T20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமை விராட் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.

Video – IPL தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் நட்சத்திரங்கள்

இந்தப் பட்டியலில் சமர்செட் கழக வீரர் ஜேம்ஸ் ஹில்ட்ரெத் (193), சென்னை அணி வீரர் எம்.எஸ். டோனி (191), நொட்டிங்ஹெம்ஷெயார் கழக வீரர் சமித் பட்டேல் (190) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

இதனிடையே, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தலைவராக அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற சாதனையை டோனி தக்க வைத்திருந்தார். அவர் தலைவராக சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் புனே சுப்பர் ஜெயன்ட் அணிகளுக்காக விளையாடி 4,225 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை கோஹ்லி நேற்றைய போட்டியில் 10 ஓட்டங்கள் எடுத்த போது முறியடித்தார்.

கடந்த 2008இல் விராட் கோஹ்லியை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டு முதல் அந்த அணிக்காக அவர் விளையாடி வருவதுடன், அவருக்காக ஒவ்வொரு வருடமும் 17 கோடி ரூபா சம்பளத்தை அந்த அணி நிர்வாகம் வழங்கி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

டோனி முறியடித்த சாதனையை சமப்படுத்திய தினேஷ் கார்த்திக்!

எதுஎவ்வாறாயினும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக திகழ்ந்துவரும் விராட் கோஹ்லி, அந்த அணிக்காக விளையாடி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினாலும், இதுவரை அந்த அணி ஐபிஎல் இல் ஒருமுறைகூட சம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்ற குறை இருந்து வருகின்றஎது. 

எனவே, இந்த வருடம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐ.பி.எல் தொடரில் இதுவரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஆகையால், இந்த முறை சம்பியன் பட்டம் வெல்லும் கனவு அந்த அணிக்கு பூர்த்தியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<