RCB அணிக்காக 6,000 ஓட்டங்கள்: கோஹ்லி புதிய சாதனை

121

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற விராத் கோஹ்லி, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 6,000 ஓட்டங்களை எடுத்து புதிய மைல்கல்லை எட்டினார்.

விராட் கோஹ்லியின் பொறுப்பான துடுப்பாட்டம், கிறிஸ் மோரிஸ், வொஷிங்டன் சுந்தரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் டுபாயில் நேற்று (10) நடைபெற்ற .பி.எல் போட்டியின் 25ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.

>>டோனி முறியடித்த சாதனையை சமப்படுத்திய தினேஷ் கார்த்திக்!<<

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை எடுத்தது

இதில் 5ஆவது விக்கெட்டுக்கு ஷிவம் துபே, கோஹ்லி இருவரும் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு நம்பிக்கையளிககும் விதத்தில் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினர். 

அதிரடியாக விளையாடிய கோஹ்லி 39 பந்துகளில் அரைச்சதம் கடந்ததுடன், 52 பந்துகளில் 90 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

அத்துடன், அவர் இந்தப் போட்டியில் ஜடேஜா வீசிய 14ஆவது ஓவரில் 31 ஆவது ஓட்டத்தை எடுத்து புதிய சாதனை படைத்தார். அது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அவர் எடுத்த  ஆராயிரமாவது ஓட்டங்களாகும்.  

.பி.எல் போட்டிகள் மற்றும் சம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கோஹ்லி விளையாடியுள்ளர்.  

>>Video – அஸ்வின் விடுத்த எச்சரிக்கை என்ன? | Cricket Galatta Epi 40<<

இதில் .பி.எல் தொடரில் 5,576 ஓட்டங்களையும், சம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் 424 ஓட்டங்களையும் எடுத்து மொத்தமாக 6,000 ஓட்டங்கள் என்ற மைல்கல் சாதனையை செய்தார்.

மேலும், ஆர்.சி.பி அணிக்காக இந்த மைல்கல் சாதனையை படைக்கும் முதல் வீரர் கோஹ்லி தான். சம்பியன்ஸ் லீக் டி20 தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடக்கவில்லை என்றாலும், அதில் கோஹ்லி 15 போட்டிகளில் விளையாடி உள்ளார்

அதில் 2 அரைச்சதம் உட்பட 424 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார். அதில் அவரது சராசரி 38.54 ஆகும். ஒட்டுமொத்தமாக 285 டி20 போட்டிகள் விளையாடி உள்ள கோஹ்லி அதில் 9000 ஓட்டங்களுக்கும் மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமாத்திரமின்றி, .பி.எல் மற்றும் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் இந்திய அளவில் அதிக ஓட்டங்கள் குவித்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் விராத் கோஹ்லி முதல் இடத்தில் உள்ளார் என்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<