டோனி முறியடித்த சாதனையை சமப்படுத்திய தினேஷ் கார்த்திக்!

64
Dhoni-Karthik
Image Courtesy - IPLT20.com

ஐ.பி.எல். தொடரில் நேற்று (07) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விக்கட் காப்பாளர்களுக்கான சாதனையொன்று சமப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை அணியின் தலைவரான மகேந்திரசிங் டோனி மற்றும் கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணிகளின் வெற்றிக்கு ஒரு பக்கம் போராடிக்கொண்டிருந்த நிலையில், மறைமுகமாக விக்கெட் காப்பாளருக்கான சாதனையொன்றை தக்கவைக்கவும் போராட்டம் எழுந்திருந்தது.

>> கொல்கத்தா அணியில் உள்ள அமெரிக்க வீரருக்கு உபாதை

ஐ.பி.எல். தொடரில் விக்கெட் காப்பாளராக அதிக பிடியெடுப்புகளை பெற்றுக்கொண்டவர்கள் வரிசையில், தினேஷ் கார்த்திக் இதுவரையில் முதலிடத்தை தக்கவைத்திருந்தார். ஐ.பி.எல். தொடரில் மிக பிரபலமான விக்கெட் காப்பாளராக மகேந்திரசிங் டோனி பார்க்கப்பட்டாலும், சாதனை பட்டியலில் முதலிடம் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்தது.

ஆனால், நேற்றைய போட்டியின் போது, இந்த சாதனையை முறியடிக்கக்கூடிய வாய்ப்பினை மகேந்திரசிங் டோனி பெற்றிருந்தார். இதுவரையில், தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் விக்கெட் காப்பாளராக 103 பிடியெடுப்புகளை பெற்று முதலிடத்தில் இருந்தார். எனினும், டோனி வெறும் 3 பிடியெடுப்புகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.

எனினும், நேற்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்த நிலையில், 4 பிடியெடுப்புகளை எடுக்கக்கூடிய வாய்ப்பு டோனிக்கு கிடைத்திருந்தது.

ஆரம்பத்தில், சர்துல் தாகூரின் பந்துவீச்சில் சுப்மான் கில்லின் பிடியெடுப்பை டோனி எடுத்திருந்ததுடன், அடுத்ததாக செம் கரனின் பந்துவீச்சில் இயன் மோர்கனின் பிடியெடுப்பையும், மீண்டும் சர்துல் தாகூரின் பந்துவீச்சில் அன்ரே ரசலின் பிடியெடுப்பையும் கைப்பற்றி தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமப்படுத்தினார். தொடர்ச்சியாக டுவைன் பிராவோவின் பந்துவீச்சில் சிவம் மாவின் விக்கெட்டினை வீழ்த்தி கார்த்திக்கின் சாதனையை டோனி முறியடித்தார்.

>> Video – தடுமாற்றம் காணும் இலங்கை – பங்களாதேஷ் தொடர் |Sports RoundUp – Epi 134

டோனி இந்த சாதனையை முறியடித்து முதலிடத்தை தக்கவைத்த போதும், சென்னை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் தொடங்கியவுடன், பெப் டு ப்ளெசிஸின் பிடியெடுப்பை எடுத்த தினேஷ் கார்த்திக் இந்த சாதனையை இதே போட்டியில் சமப்படுத்தினார்.

தற்போது மகேந்திர சிங் டோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 104 விக்கெட்டுகளுடன் சாதனையை சமப்படுத்தியுள்ளனர்.  எவ்வாறாயினும், விக்கெட் காப்பாளராக அதிகூடிய ஆட்டமிழப்புகளை மேற்கொண்ட வீரர்கள் பட்டியலில் டோனி 143 ஆட்டமிழப்புகளுடன் முதலிடத்திலும், தினேஷ் கார்த்திக் 134 ஆட்டமிழப்புகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<