மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் T20I போட்டிக்கான இலங்கை பதினொருவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள அணியை பொருத்தவரை இந்திய அணிக்கு எதிரான கடைசி T20I போட்டியில் விளையாடிய அணியிலிருந்து ஒரு மாற்றம் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை மகளிர் அணியை இலகுவாக வீழ்த்திய இந்தியா!
அதன்படி குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள ரமேஷ் மெண்டிஸிற்கு பதிலாக பானுக ராஜபக்ஷ துடுப்பாட்ட வீரராக அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். பானுக ராஜபக்ஷ கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான தொடரில் கடைசியாக விளையாடியிருந்தார்.
அதேநேரம் தசுன் ஷானகவுக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்ட சமிந்து விக்ரமசிங்க தொடர்ச்சியாக அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார். அதேநேரம், வேகப்பந்துவீச்சாளர்களாக மதீஷ பதிரண மற்றும் அசித பெர்னாண்டோ செயற்படவுள்ளதுடன், மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சமிந்து விக்ரமசிங்க இடம்பெற்றுள்ளார்.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பதினொருவர்
குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சமிந்து விக்ரமசிங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பதிரண, அசித பெர்னாண்டோ
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<