வெற்றிநடை போடும் ரெட் ஸ்டார்ஸ்: டிபெண்டர்ஸை சமன் செய்த சோண்டர்ஸ்

Vantage FFSL President’s Cup 2020

507

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் ரெட் ஸ்டார்ஸ், செரண்டிப் மற்றும் சீ ஹோக் அணிகள் வெற்றி பெற்றதுடன் டிபெண்டர்ஸ் மற்றும் சோண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையடைந்தது. 

இந்த போட்டிகளின் விபரம் கீழ்வருமாறு… 

பொலிஸ் இலகு வெற்றி; இறுதி நிமிடத்தில் சீ ஹோக்கை சமநிலை செய்த செரண்டிப்

டிபெண்டர்ஸ் கா.க எதிர் சோண்டர்ஸ் வி.க 

இந்த தொடரில் C குழுவில் இடம்பெறும் டிபெண்டர்ஸ் அணி இறுதியாக சுபர் சன் அணியை வெற்றி கொண்ட நிலையில் குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இரவு இடம்பெற்ற இந்த மோதலில் களமிறங்கியது. 

முதல் போட்டியில் ரெட் ஸ்டார் அணியிடம் தோல்வி கண்ட நிலையில் களம் கண்டிருந்த சோண்டர்ஸ் அணியினர் முதல் பாதியிலேயே இரண்டு கோல்களை விட்டுக் கொடுத்தனர். 

ஆட்டம் ஆரம்பமாகி 6ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது இளம் வீரர் தலாப் ஷிஹாப் பந்தை நேரே கோல் நோக்கி செலுத்தினார். மீண்டும் 29ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் கோல் காப்பாளர் அசன்க விராஜ் தடுத்த பந்து சஜித் குமார இலகுவாக கோலுக்குள் செலுத்தினார். 

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 15 நிமிடங்களில் கோலுக்குள் அண்மையில் இருந்து நளீம் ஹெடர் முறையில் சோண்டர்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். அந்த கோல் பெறப்பட்டு 5 நிமிடங்களில் கிடைத்த ப்ரீ கிக் மூலம் நிரேஷ் அடுத்த கோலையும் பெற்று ஆட்டத்தை சமன் செய்தார். 

இறுதி நிமிடங்களில் சோண்டர்ஸ் வீரர்கள் முன்பை விட வேகமான ஆட்டத்தை காண்பித்த போதும் தலா 2 கோல்களுடன் ஆட்டம் நிறைவு பெற்றது. 

முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா.க 2(2) – 2(0) சோண்டர்ஸ் வி.க

கோல் பெற்றவர்கள் 
டிபெண்டர்ஸ் கா.க – தலால் ஷிஹாப் 6’, சஜித் குமார 30’,
சோண்டர்ஸ் வி.க – மொஹமட் நளீம் 59’, சுந்ததரராஸ் நிரேஷ் (P)64’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 
டிபெண்டர்ஸ் கா.க – ஜிவன்த பெர்னாண்டோ 84’, அசிகுர் ரஹ்மான் 88’
சோண்டர்ஸ் வி.க – ஷலன சமீர 28’, திமுது ஹெட்டியாரச்சி 33’ 

ரெட் ஸ்டார் கா.க எதிர் சுபர் சன்

குழு C இற்கான அடுத்த ஆட்டமாக சுகததாஸ அரங்கில் இரவு இடம்பெற்ற இந்த மோதலின் 42ஆவது நிமிடத்தில் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து ரஹ்மான் கோலுக்குள் பந்தை செலுத்தி ரெட் ஸ்டார் அணியை முதல் பாதியில் முன்னிலைப் படுத்தினார். 

FIFA உலகக் கிண்ண, ஆசியக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு

இரண்டாம் பாதியிலும் அதே வேகத்துடன் ஆடிய ரெட் ஸ்டார் அணிக்கு சுபுன் தனன்ஜய 60 ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின்மூலம் அவ்வணி தமது வெற்றியை உறுதி செய்து, இந்த தொடரில் தொடர்ந்து தமது இரண்டாம் வெற்றியைப் பதிவு செய்து C குழுவில் 6 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த தோல்வி சுபர் சன் அணி பெற்ற இரண்டாவது தொடர் தோல்வியாகும். 

முழு நேரம்: ரெட் ஸ்டார் கா.க 2(1) – 0(0) சுபர் சன் வி.க

கோல் பெற்றவர்கள் 
ரெட் ஸ்டார் கா.க – ரஹ்மான் 42, சுபுன் தனன்ஜய 60

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
ரெட் ஸ்டார் கா.க – பத்ரன் 05’, மொஹமட் நுஸ்கி 88’ 

செரண்டிப் கா.க எதிர் ரட்னம் வி.க (குழு D)

தொடரில்  தமது முதல் ஆட்டத்தை சீ ஹோக் அணியுடன் சமநிலை செய்த செரண்டிப் அணியே கொழும்பு சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் போட்டி முழுவதும் அதிக ஆதிக்கம் செலுத்தியது. 

ஆட்டதின் 5ஆவது நிமிடத்தில் செரண்டிப் அணித் தலைவர் ஆசிர் முதல் கோல் பெற, அடுத்த நிமிடம் யாழ் வீரர் சான்தன் ரட்னம் அணிக்காக நீண்ட தூரத்தில் இருந்து உதைந்து பதில் கோல் போட்டார்.  

மீண்டும் செரண்டிப் அணிக்கு பெனால்டி முறையில் எவன்ஸ் பெற்ற கோலோடு முதல் பாதியில் செரண்டிப் முன்னிலை பெற்றது.  

இரண்டாம் பாதியில் செரண்டிப் அணி மேலதிக நேரத்தில் பெற்ற 2 கோல்கள் உட்பட மொத்தம் 4 கோல்களைப் பெற, ரட்னம் வீரர்களால் ஒரு கோலை மட்டுமே பெற முடிந்தது. 

Video – இரண்டு GOLDEN BOOT வீரர்களுக்கிடையில் காலிறுதி மோதல்! | FOOTBALL ULLAGAM

மேலதிக 4 கோல்களினால் வெற்றி பெற்ற செரண்டிப் இந்த தொடரில் தமக்கான முதல் வெற்றியைப் பதிவு செய்ய, ரட்னம் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 

இந்தப் போட்டியில் 3 கோல்களைப் பெற்ற செரண்டிப் வீரர் எவன்ஸ், தொடரில் மொத்தம் 5 கோல்களைப் பெற்று, அதிக கோல் பெற்றவர்களில் முன்னிலையில் உள்ளார். 

முழு நேரம்: செரண்டிப் கா.க 6(2) -2(1)ரட்னம் வி.க 

கோல் பெற்றவர்கள் 
செரண்டிப் கா.க – மொஹமட் ஆசிர் 05’, எவன்ஸ் அசன்டெ (P)10’, (P)67’ & 90+1’, ஹேமன்த ஜயவீர 48’, ரியாஸ் அஹமட் 90+6’
ரட்னம் வி.க – ரஜிகுமார் சான்தன் 06’, S. சித்ரகுமார் 75’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்  
செரண்டிப் கா.க – ரியாஸ் மொஹமட் 39’, C.மதுஷான் 43’, விஜெகுமார் விக்னேஷ் 54’, ரியாஸ் அஹமட் 59’ 
ரட்னம் வி.க – சசின்த மதுரங்க 22’ 

சீ ஹோக் வி.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க  (குழு D)

இலங்கையின் பலம் மிக்க இரண்டு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டத்தில் இரண்டு அணியினரும் மிக மோசமான ஆட்டத்தைக் காண்பித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தனர். 

புளு ஸ்டார், அப் கண்ட்ரியை அதிரடியாக வென்ற ஜாவா லேன், மொரகஸ்முல்ல

ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் சீ ஹோக் வீரர் நாகுர் மீரா ஹெடர் மூலம் பெற்ற கோலை நடுவர் நிராகரித்தார். இதனால் முதல் பாதி கோலின்றி நிறைவுற்றது. 

இரண்டாம் பாதியின் 58ஆவது நிமிடத்தில் அவிஷ்க டேஷான் மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்தைப் பெற்ற மொஹமட் அஸ்மிர் ஆட்டத்தின் வெற்றி கோலைப் பெற்றார். இது அஸ்மிர் தொடரில் பெறும் மூன்றாவது கோலாகும். 

போட்டியின் இறுதி நிமிடத்தில் சீ ஹோக் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை மீரா பெற்றார். அவர் உதைந்த பந்தை பொலிஸ் கோல் காப்பாளர் தினேஷ் சிறந்த முறையில் தடுத்தார். 

எனவே, சீ ஹோக் அணி போட்டியில் முதல் கோலைப் பெற்றது. பொலிஸ் வீரர்கள் ஏற்கனவே ரட்னம் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றியினால் 3 புள்ளிகளுடன் உள்ளனர். 

முழு நேரம்: சீ ஹோக் வி.க 1(0) – 0(0) இலங்கை பொலிஸ் வி.க 

சீ ஹோக் வி.க – மொஹமட் அஸ்மிர் 58’ 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<