Home Tamil சாதனை இணைப்பாட்டத்துடன் இலங்கை மகளிர் வெற்றி

சாதனை இணைப்பாட்டத்துடன் இலங்கை மகளிர் வெற்றி

990

T20 உலகக் கிண்ணத் தொடரில் தம்முடைய இரண்டாவது குழுநிலைப் போட்டியில் பங்களாதேஷினை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மகளிர் T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை வெற்றி

குழு A அணிகளான இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண மோதல் நேற்று (12) கேப் டவுன் சர்வதேச அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் வீராங்கனைகள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்து கொண்டனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்தது.

பங்களாதேஷ் மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சோபனா மோஸ்டரி 32 பந்துகளில் 29 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்தார்.

மறுமுனையில் இலங்கை மகளிர் அணி பந்துவீச்சில் ஒசதி ரணசிங்க 3 விக்கெட்டுக்களையும், அணித்தலைவி சாமரி அத்தபத்து 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

எனது பரிந்துரையில் தான் சர்பராஸ் அணியில் இடம்பிடித்தார் – ரிஸ்வான்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 127 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி மெருபா அக்தரின் வேகப்பந்துவீச்சு காரணமாக 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தொடக்கத்தில் தடுமாறியது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த நிலக்ஷி டி சில்வா, ஹர்சித மாதவி ஜோடி பொறுப்பான முறையில் துடுப்பாடத் தொடங்கியதோடு நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 104 ஓட்டங்களையும் பகிர்ந்தது.

ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா?

தொடர்ந்த ஆட்டத்தில் இந்த இணைப்பாட்ட உதவியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 18.4 ஓவர்களில் மேலதிக விக்கெட் இழப்பின்றி 129 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்சித மாதவி தன்னுடைய 3ஆவது T20I அரைச்சதத்துடன் 50 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் நிலக்ஷி டி சில்வா 38 பந்துகளில் 2 பௌண்டரிகள் உடன் 41 ஓட்டங்கள் பெற்றார்.

அத்துடன் இப்போட்டியில் ஹர்சித மாதவி – நிலக்ஷி டி சில்வா ஜோடி மூலம் இணைப்பாட்டமாக பெறப்பட்ட 104 ஓட்டங்கள் T20I போட்டிகளில் இலங்கை மகளிர் அணி பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவானதோடு, 2023ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாகவும் மாறியது.

பங்களாதேஷ் மகளிர் அணிப்பந்துவீச்சில் மெருபா அக்தர் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஆரம்பத்தில் நெருக்கடி உருவாக்கிய போதும் அவரின் பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகியாக ஹர்சித மாதவி தெரிவாகினார். இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை மகளிர் அணி T20 உலகக் கிண்ண அரையிறுதிக்கு தெரிவாக தமக்கு இன்னும் எஞ்சியிருக்கும் இரு போட்டிகளில் ஒரு வெற்றியினை எதிர்பார்த்திருக்கின்றது.

அதேவேளை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை மகளிர் அணி அடுத்து விளையாடும் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (16) அவுஸ்திரேலிய அணியுடன் ஆரம்பமாகின்றது.

ஸ்கோர் விபரம்

Result


Bangladesh Women
126/8 (20)

Sri Lanka Women
129/3 (18.2)

Batsmen R B 4s 6s SR
Shamima Sultana c Anushka Sanjeewani b Oshadi Ranasinghe 20 13 4 0 153.85
Murshida Khatun run out (Inoka Ranaweera) 0 1 0 0 0.00
Shohely Akhter b Chamari Athapaththu 29 32 5 0 90.62
Nigar Sultana c Harshitha Madavi b Oshadi Ranasinghe 28 34 1 0 82.35
Lata Mondal st Anushka Sanjeewani b Oshadi Ranasinghe 11 13 0 0 84.62
Shorna Akter c Kavisha Dilhari b Inoka Ranaweera 5 6 0 0 83.33
Mst Ritu Moni run out (Sugandika Kumari) 2 3 0 0 66.67
Salma Khatun not out 9 6 0 0 150.00
Nahida Akter c Oshadi Ranasinghe b Chamari Athapaththu 8 10 0 0 80.00
Jahanara Alam not out 1 2 0 0 50.00


Extras 13 (b 4 , lb 0 , nb 0, w 9, pen 0)
Total 126/8 (20 Overs, RR: 6.3)
Bowling O M R W Econ
Achini Kulasuriya 2 0 16 0 8.00
Oshadi Ranasinghe 4 0 23 3 5.75
Sugandika Kumari 3 0 22 0 7.33
Ama Kanchana 2 0 12 0 6.00
Inoka Ranaweera 4 0 18 1 4.50
Kavisha Dilhari 1 0 12 0 12.00
Chamari Athapaththu 4 0 19 2 4.75


Batsmen R B 4s 6s SR
Harshitha Samarawickrama not out 69 50 8 1 138.00
Chamari Athapaththu c Lata Mondal b Marufa Akter 15 17 3 0 88.24
Vishmi Gunaratne c & b Marufa Akter 1 5 0 0 20.00
Anushka Sanjeewani b Marufa Akter 0 1 0 0 0.00
Nilakshika Silva not out 41 38 2 0 107.89


Extras 3 (b 0 , lb 0 , nb 1, w 2, pen 0)
Total 129/3 (18.2 Overs, RR: 7.04)
Bowling O M R W Econ
Jahanara Alam 3 0 19 0 6.33
Salma Khatun 4 0 32 0 8.00
Marufa Akter 4 1 23 3 5.75
Nahida Akter 3 0 14 0 4.67
Ritu Moni 3 0 31 0 10.33
Shorna Akter 1.2 0 10 0 8.33



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<