ப்ரிமா இறுதி போட்டிக்கு இரண்டு மேல் மாகாண அணிகள் தெரிவு

301
U15 Cricket Semi finals report

15 வயதுக்குப்பட்ட ப்ரிமா கிண்ண கிரிக்கெட் அரையிறுதி போட்டிகள் கொழும்பில் இன்று நடைபெற்றன. இதன் முடிவுகளின்படி இறுதிப்போட்டிக்கு மேல் மாகாணத்தை சேர்ந்த இரு அணிகள் தகுதி பெற்றன.
மேல் மாகாண தெற்கு எதிர்  மேல் மாகாண வடக்கு

மேல் மாகாண தெற்கு அணிக்கும் மேல் மாகாண வடக்கு அணிக்குமிடையிலான முதலாவது அரைறுதிப் போட்டில் மேல் மாகாண தெற்கு அணி 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கொழும்பு NCC மைதானத்தில் நடைப்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண தெற்கு அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 49.5 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அதி கூடிய ஓட்டங்களாக கமில் மிஷார 35 ஓட்டங்களையும் ரணேஷ் துமிந்த மற்றும் ஷெரோன் லியனகே முறையே 30, 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கவீச துலாஞ்சன தனது நேர்த்தியான பந்து வீச்சில்  44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேல் மாகாண வடக்கு அணி, 44.4 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 67 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. அவிஷ்க தறிந்து 51 ஓட்டங்களை பெற்ற போதும் ஏனையோர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய அவிஷ்க லக்சன் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம் 

மேல் மாகாண தெற்கு அணி: 216 (49.5) – கமில் மிஷார 35, ரணேஷ் துமிந்த 30, ஷெரோன் லியனகே 29, ரோஹன் சஞ்சய 29,
ஷெனாஸ் சண்டீப 38/2, கவீச லாஞ்சன 44/4, தீக்க்ஷண ரிட்மல் 31/2

மேல் மாகாண வடக்கு அணி: 149 (44.4) – அவிஷ்க தறிந்து 51
அவிஷ்க லக்சன் 11/4, லஹிரு முதுஷங்க 41/2, ரோஹன் சஞ்சய 29/2

போட்டி முடிவு: மேல் மாகாண தெற்கு அணி 67 ஓட்டங்களால் வெற்றி 


மேல் மாகாண மத்திய அணி எதிர் தென் மாகாண அணி

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் இடம்பெற்ற (CCC Ground) இரண்டாவது அரைறுதிப் போட்டியில் மேல் மாகாண மத்திய அணி 43 ஓட்டங்களால் தென் மாகாண அணியை வெற்றிக்கொண்டது.  

 நாணய நாணய சுழற்றயில் வெற்றி பெற்ற மேல் மாகாண மத்திய அணி 48.1 ஓவரில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. லேஷான் அமரசிங்க தனது அருமையான துடுப்பாட்டத்தின் மூலம் 71 ஓட்டங்களையும், பவான் ரத்நாயக்க 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். எனினும் ஏனையோர் பிரகாசிக்க தவறினர். சிறப்பாக பந்து வீசிய சுகீத் நிமந்த 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் மாகாண அணி, விரங்கவின் பந்து வீச்சை (27/4) எதிர்கொள்ள முடியாமல் 43.1 ஓவரில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. ஆகக்கூடிய ஓட்டங்களாக சந்தூண் மெண்டிஸின் 46 ஓட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் மேல் மாகாண மத்திய அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

போட்டி சுருக்கம்:

மேல் மாகாண மத்திய அணி: 216 (48.1) – லேஷான் அமரசிங்க 71, பவான் ரத்நாயக்க 57, திதிரா வீரசிங்க 24,
சுகீத் நிமந்த 37/3, நீடுக மல்சித் 39/2

தென் மாகாண அணி: 173 (43.2) – சந்தூண் மெண்டிஸ் 46, கவிந்து நடீசன் 22, வீராங்க விக்கரமகே 27/4, சச்சிக்க சண்டீரா 22/2, தேசிக நிர்மல் 23/2, அமித் தபரெ 3/2 

முடிவுமேல் மாகாண மத்திய அணி 67 ஓட்டங்களால் வெற்றி