Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாட” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம் எதிர் நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக் கழகம்
போட்டியின் முதல் பாதியாட்டம் கோல்கள் ஏதுமின்றி நிறைவிற்கு வந்தது. இரண்டாவது பாதியில் தமது ஆட்டத்தினை வேகப்படுத்திய உதயதாரகை அணிக்கு, போட்டியின் 45 ஆவது நிமிடத்தில் ஜெயந்தரூபன் கோலொன்றை பெற்றுக்கொடுத்தார்.
முதல் நாளில் வெற்றியைப் பதிவு செய்த நாவாந்துறை சென். மேரிஸ், யாழ் பல்கலைக்கழக அணிகள்
ThePapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும்…
ஜெயந்தரூபன் பெற்றுக்கொடுத்த ஓரே கோலுடன் ஆட்ட நேரம் நிறைவிற்கு வர போட்டியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி உதயதாரகை அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
முழு நேரம்: கிளிநொச்சி உதயதாரகை வி.க 1 – 0 நாவாந்துறை கலைவாணி வி.க
ஆட்டநாயகன் – ஜெயந்தரூபன்
கோல் பெற்றவர்கள்
கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம் – ஜெயந்தரூபன் 45′
குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் எதிர் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம்
இரு இளம் அணிகளுக்கிடையிலான மோதலாக அமைந்திருந்த இந்தபோட்டியில், கோல் ஏதுமின்றி முதலாவது பாதியாட்டம் நிறைவிற்கு வந்தது.
இரண்டாவது பாதியாட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் ஒன்றினைப் பெறுவதற்காக மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக போட்டி நிறைவடைவதற்கு வேறுமனே 12 நிமிடங்கள் மீதமிருக்கையில், போட்டியின் முதலாவது கோலை கலைமதி அணியின் விஜேந்திரன் போட்டார்.
தொடர்ந்தும் வினித் இரைட்டைக் கோலை பெற்றுக்கொடுக்க, ஆட்டநேர நிறைவில் மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கலைமதி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
முழு நேரம்: குப்பிளான் குறிஞ்சிக்குமரன் வி. க 0 – 3 நவிண்டில் கலைமதி வி. க
ஆட்டநாயகன் – வினித்
கோல் பெற்றவர்கள்
நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் – விஜேந்திரன் 48’, வினித் 52′ & 59′
புங்குடுதீவு நசரத் விளையாட்டுக் கழகம் எதிர் அச்செளு வளர்மதி விளையாட்டுக் கழகம்
ஆட்ட நேர நிறைவில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாது போட்டியை நிறைவு செய்ய, தோடர்ந்து பெனால்டி உதை இடம்பெற்றது. பெனால்டி உதையில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்ற அச்செளு வளர்மதி அணி, நாவாந்துறை சென். மேரிஸ் அணியுடன் மோதவுள்ளது .
முழு நேரம்: புங்குடுதீவு நசரத் வி.க 00:00 அச்செளு வளர்மதி வி.க
ஆட்டநாயகன் – வசந்தன் (கோல் காப்பாளர் – அச்செளு வளர்மதி வி.க)
மணியந்தோட்டம் ஐக்கிய விளையாட்டுக் கழகம் எதிர் முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம்
இரு அணிகளும் முதலாவது கோல் பெறுவதற்காக எத்தணித்துக் கொண்டிருக்கையில் விறுவிறுப்பாக இடம்பெற்ற முதலாவது பாதி ஆட்டத்தின் இறுதி நேரத்தில் சுப்பர் றாங் அணிக்காக உதயவர்மன் கோல் ஒன்றைப் பெற்றுக்கொடுத்தார்.
மலேசியாவை இலகுவாக வீழ்த்திய இலங்கைக்கு இரண்டாவது வெற்றி
கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் முதலாவது ஆசிய ஆண்கள் கரப்பந்தாட்ட…
கோல்கள் ஏதுமின்றி இரண்டாவது பாதியாட்டம் நிறைவிற்கு வர, போட்டியில் வெற்றிபெற்ற மூல்லைத்தீவு லீக்கின் ஓரே பிரதிநிதியான சுப்பர் றாங் அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முழு நேரம்: மணியந்தோட்டம் ஐக்கிய வி.க 0 – 1 முல்லைத்தீவு சுப்பர் றாங் வி.க
ஆட்டநாயகன் – உதயவர்மன்
கோல் பெற்றவர்கள்
முல்லைத்தீவு சுப்பர் றாங் விளையாட்டுக் கழகம் – உதயவர்மன் 28′
மெலிஞ்சிமுனை இருதயாராஜா விளையாட்டுக் கழகம் எதிர் அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகம்
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணியினருக்கும் கிடைத்த இலகுவான கோல் பெறும் வாய்ப்புக்களை முன்கள வீரர்கள் நழுவ விட கோல்கள் ஏதுமின்றி போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தது.
பெனால்டி உதையில் 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற மெலிஞ்சிமுனை இருதயராஜா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
முழு நேரம்: மெலிஞ்சிமுனை இருதயாராஜா வி.க 0 – 0 அரியாலை ஐக்கிய வி.க
ஆட்டநாயகன் – அருள்ராஜ்
ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம் எதிர் பொற்பதி விளையாட்டுக் கழகம்
மன்னார் லீக்கின் முன்னணி அணியான ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணி போட்டியின் ஆரம்பம் முதலே தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டினர். 15ஆவது நிமிடத்தில் டினோசன் கோல் கணக்கை ஆரம்பித்தார். டெசில் மேலும் ஒரு கோலைப் பெற்றுக்கொடுக்க முதல் பாதியாட்டம் ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணி முன்னிலையில் நிறைவிற்கு வந்தது.
லிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது வாரத்திற்கான போட்டிகள் சனிக்கிழமை (15)…
இரண்டாவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணிக்கு டெசில் மேலும் இரண்டு கோல்களைப் பெற்று போட்டியில் ஹெட்றிக் கோலை பதிவு செய்தார். ஜோன்சனினதும் இரட்டைக் கோல்களின் துணையுடன் இரண்டாவது பாதியில் 4 கோல்களை பதிவு செய்த ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணி 6 கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
முழு நேரம்: ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய வி.க 6 – 0 பொற்பதி வி.க
ஆட்டநாயகன் – டினோசன்
கோல் பெற்றவர்கள்
ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம் – டினோசன் 15′, டெசில் டேவ் 25’, 45’ & 55’, ஜோன்சன் 42’ & 50’
வடக்கின் கில்லாடி தொடரின் முதலாவது சுற்றின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது போட்டிகள் இடம்பெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழக அணியும், அடுத்து 4.45 மணிக்கு இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் ஊரெளு றோயல் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து குப்பிளான் ஞானகலா விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.
வடக்கின் கில்லாடி தொடரில் போட்டி முடிவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<




















