முதல் நாளில் வெற்றியைப் பதிவு செய்த நாவாந்துறை சென். மேரிஸ், யாழ் பல்கலைக்கழக அணிகள்

609

ThePapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை 2.30 மணியளவில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் ஆரம்பமானது.

நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் குருநகர் சென். றொக்ஸ் விளையாட்டுக் கழகம்

விலகல் (Knock Out) முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற “வடக்கின் கில்லாடி” தொடரின் முதலாவது ஆட்டத்தில் முதலாவது யாழின் கில்லாடி தொடரின் இறுதிப்போட்டியாளர்களான நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து யாழின் வளர்ந்துவரும் அணியான குருநகர் சென்.றொக்ஸ் அணி மோதியது.

கிருஷாந்தினியின் இரட்டை கோல் வீண்: குவாமிடம் வீழ்ந்தது இலங்கை

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மேரிஸ் அணியின் மதிவதனன் பெற்றுக்கொடுத்த கோலுடன் சென். மேரிஸ் முன்னிலையில் முதலாவது பாதி நிறைவிற்கு வந்தது.

இரண்டாவது பாதியிலும் தமது ஆதிக்கத்தினைத் தொடர்ந்த சென். மேரிஸ் அணிக்கு தேசிய அணிவீரர் மரியதாஸ் நிதர்சன் 47 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றுக்கொடுத்து அணியை இரண்டு கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் சுபோதரன் ஒரு கோலைப் பெற்றுக்கொடுக்க 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற சென். மேரிஸ் அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

முழு நேரம்: நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் 3 – 0 குருநகர் சென். றோக்ஸ் விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் – மரியதாஸ் நிதர்சன்

கோல் பெற்றவர்கள்

நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் – மதிவதனன் 11′, மரியதாஸ் நிதர்சன் 47’, சுபோதரன் 57′


வதிரி டைமன்ட்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் யாழ் பல்கலைக்கழக அணி

யாழின் முன்னணி கழக அணியான வதிரி டைமன்ட்ஸ் அணியினை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக அணி மோதியது.

போட்டியின் போது கோல் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை இரு அணியினரும் தவறவிட, கோல் ஏதுமின்றி போட்டி நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: வதிரி டைமன்ட்ஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 யாழ் பல்கலைக்கழக அணி

தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழக அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆட்டநாயகன் – ரோசாரியோ (கோல் காப்பாளர் – யாழ் பல்கலைக்கழகம்)

16 வயதின் கீழ் தேசிய கால்பந்தாட்ட அணியில் ஆறு வட மாகாண மாணவிகள்

தொடரின் முதலாவது சுற்றில் நாளைய தினமும் 06 முக்கிய ஆட்டங்கள் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றன.

  • கிளிநொச்சி உதயதாரகை  எதிர் நாவாந்துறை கலைவாணி – காலை 10.00 மணி
  • குப்பிளான் குறிஞ்சிக்குமரன் வி.க எதிர் நவிண்டில் கலைமதி வி.க – காலை 11.15 மணி
  • புங்குடுதீவு நசரத் எதிர் அச்செளு வளர்மதி வி.க – பகல் 12.30 மணி
  • மணியந்தோட்டம் ஐக்கிய வி.க எதிர் முல்லைத்தீவு சுப்பர் றாங் வி.க – பகல் 2.00 மணி
  • மெலிஞ்சிமுனை இருதயாராஜா வி.க எதிர் அரியாலை ஐக்கிய வி.க – மாலை 3.15 மணி
  • ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய வி.க எதிர் பொற்பதி வி.க – மாலை 4.30 மணி

வடக்கின் கில்லாடி தொடரின் போட்டி முடிவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் புகைப்படங்களுக்கு Thepapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<