தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் முதல்தடவையாக இலங்கையில்

80

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2ஆவது தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரானது விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண பங்களிப்புடன் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்

ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் ஏழு இலங்கை வீரர்கள்

நேபாளத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த ……….

இம்முறை தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவுகள் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 28 வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்தத் தொடருடன் 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நகர்வல ஓட்டப் போட்டியும் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

அங்குரார்ப்பண தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு பூட்டானில் நடைபெற்றதுடன், இதில் இலங்கை அணி நான்கு பதக்கங்களை வெற்றி கொண்டது.

இதில் இலங்கை அணியின் லயனல் சமரஜீவ மற்றும் நிலானி ரத்னாயக்க ஆகிய இருவரும் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டதுடன், குழு நிலைப் போட்டியில் இலங்கை பெண்கள் அணி தங்கப் பதக்கத்தையும், இலங்கை ஆண்கள் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தது.

2019இல் இலங்கை விளையாட்டுத்துறையில் நடந்தவை

நிறைவு பெற்றுள்ள 2019 ஆண்டு இலங்கை விளையாட்டுத் துறையில் ஏற்றமிகு ஆண்டாக ………

இதேநேரம், ஆசிய நகர்வல ஓட்டப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம், 16ஆம் திகதிகளில் இந்தியாவின் ராஞ்சியில் நடைபெறவுள்ளது

இந்தத் தொடரில் இலங்கை சார்பாக .எஸ் துனுகார, பி.எஸ் சந்திக்க மற்றும் பி. கயானி உள்ளிட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தேசிய மட்ட நகர்வல ஓட்டப் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவின் கோல்ப் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், இம்முறை தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டித் தொடரையும் நுவரெலியாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, அடுத்த மாதம் இலங்கை வீரர்கள் மேலும் 3 சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ளனர்

இதற்கான வீரர்கள் குழாத்தை விமலசேன பெரேரா தலைமையிலான தேசிய மெய்வல்லுனர் குழாம் அறிவித்ததையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயர்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் …………

இதில் ஆசியாவின் முதன்மையான மரதன் ஓட்டங்களில் ஒன்றான ஹொங்கொங் மரதன் ஓட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமில சனத் குமார மற்றும் மதுமாலி பெரேரா ஆகிய வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்

அதனைத்தொடர்ந்து ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் பெப்ரவரி 12ஆம், 13ஆம் திகதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது

கடந்த மாதம் நேபாளத்தில் நிறைவுக்கு வந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கங்களை வென்ற ஏழு முக்கிய வீரர்களுக்கு ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<