16 வயதின் கீழ் தேசிய கால்பந்தாட்ட அணியில் ஆறு வட மாகாண மாணவிகள்

162

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 16 வயதின்கீழ் பெண்களுக்கான கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் முதற்தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ். மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆறு மாணவிகளும், குருநகால் மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஏழு மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர்.  

பூட்டானிடமும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) ஏற்பாட்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்று வரும்,

நாளை (15) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்பு CR&FC மைதானத்தில் நடைபெறவுள்ள ஆசிய சம்மேளன கிண்ண, 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் குழு இற்கான தகுதிகாண் போட்டிகளில் வரவேற்பு நாடான இலங்கையுடன், சீனா, உஸ்பெகிஸ்தான், ஜோர்தான் மற்றும் குவாம் தீவுகள் உள்ளிட்ட 5 நாடுகள் போட்டியிடவுள்ளன.

இறுதியாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சம்மேளன கிண்ண 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 16 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணி தனது முதலாவது போட்டியில் குவாம் தீவுகள் அணியை நாளை (15) சந்திக்கவுள்ளது. பின்னர், 17ஆம் திகதி ஜோர்தானையும், 19ஆம் திகதி சீனாவையும், 21ஆம் திகதி உஸ்பெகிஸ்தானையும் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

இந்த நிலையில், இந்த தொடரில் பங்குகொள்ளவுள்ள 23 பேர்கொண்ட குழாத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நேற்று (13) அறிவித்தது.

இந்த குழாத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீராங்கனைகள் கடந்த மாதம் பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின், 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை சிறப்பம்சமாகும்.

நாணய சுழற்சியில் சாப் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

தற்பொழுது பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்றுவரும் சாப் சுசுகி கிண்ண

அத்துடன், இலங்கையின் 16 வயதுக்குட்பட்ட அணியில் முதல் தடவையாக யாழ். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த .டி.மேரி கொன்சிகா, ரகுதாஸ் கிருஷாந்தினி, பாஸ்கரன் செயந்தினி ஆகிய 3 மாணவிகளும், யாழ் மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த ஜெகநாதன் ஜெதுசிகா, எஸ் தவப்பிரியா, யூ ஜோகிதா ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவிகள் ஏற்கனவே 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட இலங்கை அணிகளில் இடம்பெற்றிருந்ததுடன், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த மாணவிகள் கடந்த மாதம் பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின், 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்ட தொடரின்மூலம் இலங்கை அணிக்காக முதல் தடவை விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, குருநாகல் கவிசிகமுவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த உத்பலா காவிந்தி ஜயகொடி அணித் தலைவியாகவும், பொலன்னறுவை பெந்திவௌ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சந்தருவனி பண்டார துணைத் தலைவியாகவும் செயற்படவுள்ளனர். குறித்த வீராங்கனை இருவரும் கடந்த மாதம் பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின், 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்பியன்ஷிப் தொடரிலும் தலைவியாகவும், உதவித் தலைவியாகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கடந்த தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகளும் ஆசிய தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

ThePapare.com இன் ஊடக அனுசரணையில் இடம்பெறும் “வடக்கின் கில்லடி யார்”

கடந்த 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளில் யாழ் மாவட்ட அணிகளை உள்ளடக்கிய

இந்த தொடருக்கான இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஏற்கனவே இலங்கை 16 வயதின் கீழ் ஆண்கள் தேசிய அணி மற்றும் 15 வயதின் கீழ் பெண்கள் தேசிய அணிகளை பயிற்றுவித்த .கே.எம் அஜ்வாத் செயற்படவுள்ளார். கடந்த 3 மாதங்களாக இலங்கை 15 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை பயிற்றுவித்து வருகின்ற அவர், கடந்த மாதம் பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியை முதற்தடவையாக வழிநடாத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஆசிய சம்மேளன கிண்ண 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் பங்குகொள்ளவுள்ள இலங்கை அணியின் ஆயத்தம் குறித்து பயிற்றுவிப்பாளர் அஜ்வாத் கருத்து வெளியிடுகையில்,

”அண்மையில் நிறைவுக்கு வந்த சாப் கிண்ணத்தில் விளையாடியதை விட சிறப்பாக செயல்பட எதிர்பார்த்துள்ளோம். இலங்கை அணிக்கு போதுமான சர்வதேச அனுபவங்கள் இல்லை என்பதுடன் சாப் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர்தான் அவர்கள் பங்குபற்றிய முதலாவது சர்வதேச போட்டியாகும். அந்த போட்டியில் எமது பலவீனத்தை அடையாளம் காண முடிந்தது. எனவே எதிர்வரும் காலங்களில் அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து விளையாட முயற்சி செய்வோம்” என்றார்.

இலங்கை அணி விபரம்

மலீகா ஹானி (கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை), நெத்மி குணரத்ன, நிம்சரா குமாரி (பிபிலை நாநாபுரவ மகா வித்தியாலயம்), ஏ.டி.மேரி கொன்சிகா, ரகுதாஸ் கிருஷாந்தினி, பாஸ்கரன் செயந்தினி (யாழ். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை), ஜெகநாதன் ஜெதுன்சிகா, எஸ் தவப்பிரியா, யூ ஜோகிதா (யாழ். மகாஜனா கல்லூரி), காவிந்தி ஜயகொடி (குருநாகல் கவிசிகமுவ மகா வித்தியாலயம்), மின்தரா சேனாதீர, மதுபாஷினி தசநாயக்க, தஷானி ஜயகாது, ஐ. வர்ஷாதீர, மதுஷானி குமாரி, சங்கலனி பண்டார (குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரி), அமாவி அனுத்தரா (நிட்டம்புவ ரணபெகுணுகம மகா வித்தியாலயம்), நிஷங்சலா குமாரிஹாமி (கம்பளை புனித ஜோசப் கல்லூரி), சந்தருவனி பண்டார (பொலன்னறுவை பெந்திவெல மகா வித்தியாலயம்), செநுரி பண்டார (கண்டி எஸ்.டபிள்யு.ஆர்.டீ பண்டாரநாயக்க கல்லூரி), தசுனி ஹன்சிகா (கிரிபத்கொட விஹாரமகாதேவி பெண்கள் கல்லூரி), விநுகி சனெல்கா (இராஜகிரிய கேட்வே சர்வதே பாடசாலை), ரசுனி சன்வதனா (கேகாலை கேகலு பெண்கள் பாடசாலை)

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க