இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிசன் 1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் மேலும் 3 போட்டிகள் இன்று ஆரம்பமாகியதுடன் ஒரு போட்டி இன்று நிறைவுக்கு வந்தது.
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை எதிர் D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் சொந்த மைதான வீரர்கள் 228 ஓட்டங்களால் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற D.S. சேனநாயக கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு வழங்கியது.
நாலந்த மற்றும் செபஸ்தியன் கல்லூரிகள் காலிறுதியில்
இலங்கை கிரிக்கெட் சபையினால்…
இதன்படி பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய D.S. சேனநாயக கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
பின்னர், 387 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய D.S. சேனநாயக கல்லூரி அணி 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தொல்வியைத்தளுவியது.
போட்டியின் சுருக்கம்
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) 342/10 (72.2) – விஷ்வ சதுரங்க 100, தேவக பீரிஸ் 47, பிரின்ஸ் பெர்னாண்டோ 45, சசித ஹெட்டிகே 3/90, தசுன் பெரேரா 2/31
D.S. சேனநாயக கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) 89/10 (28.5) – சவிந்து பீரிஸ் 6/18, கௌமால் நாணயக்கார 3/40
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 134/6d (22) – விஷ்வ சதுரங்க 62, முதித்த லக்ஷான் 6/29
D.S. சேனநாயக கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 159/10 (35.3) – பசிந்து ஆதித்ய 40, தேரான் பாஸ்கரன் 30, சாவிந்து பீரிஸ் 7/58, கௌமால் நாணயக்கார 3/58
முடிவு – பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 228 ஓட்டங்களால் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி
தர்மராஜ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மஹாநாம கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்ஸுக்காக 8 விக்கெட் இழப்பிற்கு 400 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
உலகின் முதல் 10 வீரர்களுள் இடம்பெற காத்திருக்கும் குசல் மெண்டிஸ்
தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய சில்வெஸ்டர் கல்லூரி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மஹாநாம கல்லூரி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
மஹாநாம கல்லூரி, (முதலாவது இன்னிங்ஸ்) 400/8d (104–) பவன் ரத்னாயக 127*, ஹேஷான் ஹெட்டியாராச்சி 105,. கனிஷ்க ஜயசேகர 2/74
சில்வெஸ்டர் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) 221/10 (75.4) – அவிந்து ஹேரத் 64, மனோகரன் பவித்ரன் 44, ஹஷான் சந்தீப 4/73, சொனால் தினுஷ 3/30
மஹாநாம கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 56/1 (5) – பத்தும் போட்சு 31*.
முடிவு – போட்டி சமநிலையில் முடிவு
ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸின்படி புனித ஜோசப் கல்லூரி வெற்றி பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றது.
மீண்டும் சூடுபிடித்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் ஜோசப் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 401 ஓட்டங்களைக் குவித்தது.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய ரிச்மண்ட் கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
ரிச்மண்ட் கல்லூரி முதலாவது இன்னிங்ஸ்) – 216/10 (65.3) தவீஷ அபிஷேக் 78, துணித் வேல்லாலகே 4/65, மிறந்த விக்ரமகே 3/28
புனித ஜோசப் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) 401/10 (106.4) – துணித் வேல்லாலகே 137, செவான் ரசூல் 78, ஷேஹான் டேனியல் 47, கமிந்து மென்டிஸ் 5/87
ரிச்மண்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 165/4 (44) தனஞ்சய லக்ஷான் 88
முடிவு – இப்போட்டி சமநிலையில் முடிவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸின் படி புனித ஜோசப் கல்லூரி வெற்றி பெற்றது.
ரோயல் கல்லூரி, கொழும்பு எதிர் திருத்துவக் கல்லூரி, கண்டி
கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் திருத்துவக் கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
ரோயல் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) 149/10 (55) – கவிந்து மதரசிங்ஹ 60, விமுக்தி நேதுமால் 7/52
திருத்துவக் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) 123/7 (38) – ஹசித போயகொட 24, மணுல பெரேரா 4/47.