மீண்டும் சூடுபிடித்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர்

251
Big-match-back

இலங்கை மக்களின் மகிழ்ச்சிக்கு காலங்காலமாக பிரதான காரணங்களில் ஒன்றாக கிரிக்கெட் விளையாட்டு இருந்து வருவதனை யாராலும் மறுக்க முடியாது. இதனாலேயே  www.thepapare.com ஆகிய நாங்கள் மார்ச் மாதத்தினை கிரிக்கெட்டின் பித்துக்காலம் (MarchMadness) என அழைக்கின்றோம்.

மார்ச் மாதத்தில் இலங்கையின் பிரபல்யமான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த வருடாந்த கிரிக்கெட் (சமர்கள்) போட்டிகள் ஒவ்வொரு பாடசாலைகளினதும் பராம்பரியத்தினை நினைவுக்கு கொண்டுவருவதோடு, பழைய மாணவர்கள் இடையிலான உறவுகளினையும் கட்டியெழுப்ப துணைபுரிகின்றன. அதோடு போட்டிகளின் வண்ணமயமான முக்கிய தருணங்கள் ரசிகர்களுக்கு சந்தோஷம் தருகின்றன.

வீரர்களின் திறமைக்குதான் வெற்றி கிடைத்தது என்கிறார் ஹத்துருசிங்க

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷில்..

நடைபெறுகின்ற வருடாந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்ககேற்கும் வீரர்கள் ஒவ்வொருவரும், தங்களை போர்வீரர்களாக கருதிய வண்ணம் தமது பாடசாலைகளின் வெற்றிக்காக போராடுவதை அவதானிக்க முடியும். அதோடு போட்டிகளை காண வந்திருக்கும் பாடசாலைகளின் பழைய, புதிய மாணவர்கள், நலன் விரும்பிகள், இரசிகர்கள் யாவரும் ஆடல், பாடல்களுடன் மிகவும் களிப்புடன் காணப்படுவர்.

இப்போட்டிகள் அனைத்தும் நடைபெற முன்னர் ஒவ்வொரு பாடசாலை மாணவர்களும் தமது கொடிகளுடன் வீதிகளில் நடை பவணி, சைக்கிள் பவணி சென்று போட்டிகளுக்காக அசத்தலான முறையில் தயாராகுவர்.  கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் திருவிழா போன்று நடைபெறுகின்ற இந்தப் போட்டிகளில் பெரும்பாலானவற்றை உலகெங்கும் இருக்கும் ரசிகர்களுக்காக ThePapare.com ஆனது நேரடி அஞ்சல் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான வருடாந்த கிரிக்கெட் சமர் போட்டிகள் யாவும் பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் நடைபெறவிருக்கும் கொழும்பின் பாடசாலைகளான இசிபதன கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரிகள் இடையிலான “ 55 ஆவது சகோதரர்களின் சமர்” (Battle of the Brothers) என்ற பெயருடனான போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

றோயல் கல்லூரி மற்றும் புனித தோமியர் கல்லூரிகள் பங்கேற்கும்நீலங்களின் சமர்” (Battle of the Blues) என அழைக்கப்படும் வருடாந்த கிரிக்கெட் போட்டி 139ஆவது ஆண்டாக இம்முறை இடம்பெறுகின்றது.  இது உலகில் இடம்பெறும் இரண்டாவது பழமையான கிரிக்கெட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரபல்யமான இந்த கிரிக்கெட் தொடர் மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடைபெறும்.

இவை தவிரபுனிதர்களின் சமர்” (Battle of the Saints) என அழைக்கப்படும் போட்டி கொழும்பின் பாடசாலைகள் பங்குபெறும் மற்றுமொரு வருடாந்த கிரிக்கெட் தொடராகும். 84 ஆவது தடவையாக இம்முறை இடம்பெறவிருக்கும் இச்சமரில் கத்தோலிக்க பாடசாலைகளான புனித ஜோசப் கல்லூரியும், புனித பேதுரு கல்லூரியும் பங்கேற்கின்றன. இதோடு பெளத்தமத பாடசாலைகளான ஆனந்த மற்றும்  நாலந்த கல்லூரிகள் மோதும்பழுப்பு வர்ணங்களின் சமர்” (Battle of the Maroon)  89 ஆவது தடவையாக இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.

சகல துறைகளிலும் அசத்திய அன்ரன் அபிஷேக்; சம்பியன் பட்டம் வென்ற சென். ஜோன்ஸ்

பிரித்தானியா தமிழ் கிரிக்கெட் லீக் அனுசரணையில் யாழ்..

மேல்மாகாணம் தவிர்த்து வேறு மாகாணங்களிலும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் பிரபல்யமான முறையில் இடம்பெறுகின்றன. இதில், 118 ஆவது தடவையாக நடைபெறும்தெற்கின் நீலங்களின் சமர் (Southern Battle of the Blues)” கிரிக்கெட் தொடரில் மாத்தறை புனித செர்வதியஸ் கல்லூரியும், புனித தோமியர் கல்லூரியும் மோதுகின்றன. அதோடுகாதலர்களின் மோதல்” (Lovers Quarrel) என்ற பெயரில் 113 ஆவது தடவையாக இடம்பெறும் போட்டித் தொடரில் காலி மஹிந்த கல்லூரியும், றிச்மண்ட் கல்லூரியும் பங்கெடுக்கின்றன.

வடக்கின் பாடசாலைகளான யாழ்ப்பாண மத்திய கல்லூரியும், சென். ஜோன்ஸ் கல்லூரியும் மோதுகின்றவடக்கின் பெரும் சமர்கிரிக்கெட் தொடர் (Battle of the North) 112ஆவது தடவையாக இடம்பெறவிருக்கின்றது. தமிழ்பேசும் பாடசாலை அணிகள் இடையில் நடைபெறும் மிகப் பழமையான கிரிக்கெட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இவ்வருடம் வடக்கில் இடம்பெறும் பெரும் சமர்களில் முதலாவது மோதலாக தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுக்கு இடையிலான ”18ஆவது வீரர்களின் சமர்இம்மாதம் 23ஆம் 24ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

கண்டியின் பிரபல்யமான பாடசாலைகளான திரித்துவ கல்லூரியும், புனித அந்தோனியர் கல்லூரியும் மோதிக்கொள்ளும், கிரிக்கெட் தொடர் இம்முறை 101ஆவது தடவையாக மார்ச் இரண்டாம் வாரத்தில் இடம்பெறுகின்றது. மலையகத்தின் மற்றுமொரு பழைமையான கிரிக்கெட் தொடரானபழுப்பு நிறங்களின் சமரில்” (Battle of the Maroons)  கிங்ஸ்வூட், தர்மராஜ கல்லூரிகள் 112 ஆவது தடவையாக மோதுகின்றன.

கிரிக்கெட் பிரியர்களின் நகரம் என அழைக்கப்படும் மொரட்டுவையில் புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி ஆகியவைதங்கங்களின் சமர்” (Battle of Golds)  என்ற பெயரிலமைந்த கிரிக்கெட் தொடரில் 68ஆவது தடவையாக இந்த ஆண்டு மோதுகின்றன. இதேவேளை, “குன்றுகளின் சமர்” (Battle of the Rocks) என்ற பெயரில் இடம்பெறும் கிரிக்கெட் தொடரில் குருநாகல் பாடசாலைகளான மலியதேவ கல்லூரியும், புனித ஏன்ஸ் கல்லூரியும் பங்கெடுக்கின்றன.

களுத்துறையினை எடுத்து நோக்கும், களுத்துறை மகா வித்தியாலயம் மற்றும் திஸ்ஸ மகா வித்தியாலயம் ஆகியவை பங்கெடுக்கும் வருடாந்த கிரிக்கெட் போட்டி 60ஆவது தடவையாகவும் இந்த ஆண்டில் நடைபெறுகின்றது. இது தவிர தர்மசோக கல்லூரி மற்றும் ஸ்ரீ தேவானந்த கல்லூரிகள் பங்குபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது.

பழைமையான கிரிக்கெட் தொடர்கள் தவிர அண்மைக்காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வரும் பாடசாலைகள் இடையிலான புதிய கிரிக்கெட் சமர்களும் இம்முறை கோலகலமாக இடம்பெறவுள்ளன.

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி மற்றும் மஹாநாம கல்லூரி ஆகியவை 12 ஆவது தடவையாக மோதும் கிரிக்கெட் தொடரும், தர்மபால கல்லூரி மற்றும் றாகுல வித்தியாலயம் 7ஆவது தடவையாக மோதும் கிரிக்கெட் தொடரும், கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகள் மோதும்இந்துக்களின் சமர்ஆகிய கிரிக்கெட் போட்டிகள் யாவும் இப்படியாக வெற்றிகரமாக இடம்பெற்று வரும் தொடர்களாகும்.

இவை தவிர கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பெரும் தொடராகக் கருதப்படும்தங்கங்களின் சமர்” 25ஆவது முறையாக இவ்வருடம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையளதமான ThePapare.com ஆனது இம்முறை நடைபெறப் போகும், போட்டிகளின் நேரடி அஞ்சல், புகைப்படங்கள், அறிக்கைகள், விஷேட கட்டுரைகள் அனைத்தினையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தரவிருக்கின்றது.

Big Match Fixtures – 2018

Match Date Big Match Venue
23/24 February Piliyandala Central vs Taxila Horana – 17th Raigam-Salpita Korale Moratuwa Stadium
23/24 February Mahajana vs Skandavarodaya – 18th Battle of Heroes Mahajana Grounds
23/24 February Thurstan vs Isipathana – 55th Battle of Brothers SSC Grounds
2/3 March St Joseph’s vs St Peter’s – 84th Battle of Saints P.Sara Oval
3/4 March Ananda vs Nalanda – 89th Battle of Maroons SSC Grounds
8/9/10 March Royal vs S. Thomas’ -139th Battle of the Blues SSC Grounds
8/9/10 March Jaffna Central vs St John’s – 112th Battle of North Jaffna Central Grounds
9/10 March Trinity vs St.Anthony’s – 101th Battle of Blues (Kandy) Asgiriya Stadium
9/10 March Maliyadeva vs St. Anne’s – 35th Battle of the Rocks Welegedara Stadium
9/10 March Kalutara Vidyalaya vs Tissa Central – 60th Battle of Mangoosteen Surrey Grounds
9/10 March St.Sebastian’s vs Prince of Wales – 68th Battle of Golds Moratuwa Stadium
9/10 March St. Sylvester’s vs Vidyartha – 58th Battle of Babes Pallekelle Stadium
9/10 March Colombo Hindu vs Jaffna Hindu – 9th Battle of the Hindus Jaffna Hindu Grounds
16/17 March DS Senanayake vs Mahanama – 12th Battle of Gold P. Sara Oval
16/17 March Sri Sumangala vs Moratu Vidyalaya – 66th Battle of the Golds Moratuwa Stadium
16/17 March Richmond vs Mahinda – 113th Lovers Quarrel Galle Stadium
16/17 March Dharmaraja vs Kingswood – 112th Battle of Maroons (Kandy) Pallekelle Stadium
23/24 March Lumbini vs Bandaranayake – 5th Battle of the Ever Green P. Sara Oval
23/24/25 March St.Servatius’ vs St.Thomas’ – 118th Battle of Blues (South) Uyanwatta
30/31 March Dharmapala vs Rahula Matara – 7th Battle of the Golden Lions Uyanwatta
1/2 April Sri Devananda vs Dharmasoka – 51st Battle of Blues Moratuwa
7/8 April St. John’s vs Ananda Shastralaya – 22nd Battle of Sri Jayawardenapura R. Premadasa

Limited Over Fixtures – 2018

Match Date Big Match Venue
24th February Loyola vs Christ King – 1st One Day Encounter P. Sara Oval
04th March Thurstan vs Isipathana – 38th One Day Encounter P. Sara Oval
11th March St.Sebastian’s vs Prince of Wales – 33rd One Day Encounter Moratuwa Stadium
11th March Maliyadeva vs St.Anne’s – 35th Battle of the Rocks Welegedara stadium
17th March Royal vs S. Thomas’ – 43rd One Day Encounter SSC Grounds
17th March Trinity vs St.Anthony’s – Sir Bernard Aluwihare Trophy Katugasthota
17th March St. Sylvester’s vs Vidyartha Asgiriya Stadium
18th March Ananda vs Nalanda – 44th One Day Encounter SSC Grounds
24th March St.Joseph’s vs St Peter’s – 44th One Day Encounter SSC Grounds
24th March Richmond vs Mahinda – One Day Encounter Galle Stadium
24th March DS Senanayake vs Mahanama -12th One Day Encounter R.Premadasa stadium
25th March Kalutara Vidyalaya vs Tissa Central – 10th One Day Encounter Panadura Grounds
25th March Dharmaraja vs Kingswood – 28th Hill Country One Day Encounter Pallekelle Stadium
1st April Dharmapala vs Rahula Matara – 7th Battle of the Golden Lions Uyanwatta
4th April Lumbini vs Bandaranayake – 5th Battle of the Ever Green R.Premadasa stadium