மஹிந்த கல்லூரியை பந்து வீச்சில் மடக்கிய லும்பினி கல்லூரி

207
lumbini college team

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்டபட்ட சிங்கர் கிரிக்கெட் தொடரில், இன்று ஆரம்பமாகிய ஒரு போட்டியில் பந்து வீச்சாளர்களின் சிறந்த செயற்பாட்டினால் லும்பினி கல்லூரி, மஹிந்த கல்லூரியை 173 ஓட்டங்களுக்கு மடக்கியுள்ளது.  

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

அதன்படி துடுப்பாடிய அவ்வணியின் வீரர்களால் லும்பினி கல்லூரியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் போனது. எனினும் தனித்து நின்று போராடிய கவிந்து எதிரிசிங்க மாத்திரம் அரைச் சதம் கடந்து 68 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் அசத்திய ருவின் பீரிஸ் மற்றும் விமுக்தி குலதுங்க ஆகியோர் எதிரணிக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்து, தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

அதன்படி, மஹிந்த கல்லூரி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், தமது முதல் இன்னிங்சுக்காக ஆடிய லும்பினி கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது, ஒரு விக்கெட்டினை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

மஹிந்த கல்லூரி: 173 (87.1) – கவிந்து எதிரிசிங்க 68, கெவின் 27, ருவின் பீரிஸ் 3/15, விமுக்தி குலதுங்க 3/56, கனிஷ்க மதுவத்த 2/27,

லும்பினி கல்லூரி: 17/1 (06)