தோல்வி குறித்து விளக்கம் கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

814

இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் மோசமான தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் சபையானது (SLC) விளக்கம் கோரியிருக்கின்றது.

>> தேசிய சுபர் லீக் 4 நாட்கள் போட்டிகளுக்கான குழாம்கள் அறிவிப்பு

நேற்று (15) திருவானந்தபுரம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இலங்கை – இந்திய அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 317 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்ததோடு, இந்த தோல்வியானது ஒருநாள் சர்வதேச போட்டிகள் வரலாற்றில் அணியொன்று கூடுதல் ஓட்ட வித்தியாசத்தில் அடைந்த மோசமான தோல்வியாகவும் பதிவானது.

அத்துடன் இந்த தோல்வியுடன் இலங்கை அணியானது இந்தியாவிற்கு  எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையிலையே இலங்கை கிரிக்கெட் சபையும் விளக்கத்தினை கோரியிருக்கின்றது.

அதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரிடம் இந்த தோல்வி தொடர்பிலான விளக்கம் வழங்கும் வகையிலான அறிக்கை ஒன்றினை கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை குறித்த அறிக்கையானது இன்னும் 5 நாட்களுக்குள்  சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் இந்த அறிக்கையில் இலங்கை அணித்தலைவர், தலைமைப் பயிற்சியாளர், தெரிவுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி முகாமையாளர் ஆகியோர் தோல்வியினை எவ்வாறு பார்க்கின்றனர் என்கிற விளக்கங்களும் வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>> மோசமான சாதனையுடன் ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்யப்பட்ட இலங்கை

இந்த அறிக்கை மூலம் இலங்கை கிரிக்கெட் சபையானது மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினுடைய மோசமான தோல்வியை மதிப்பாய்வு செய்து அதன் மூலம் எதிர்பாலத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<