மொஹமட் அமீன் 10 விக்கெட்டுகள்; புனித பேதுரு கல்லூரிக்கு மற்றுமொரு வெற்றி

129

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் இன்று 6 போட்டிகள் நிறைவுக்கு வந்தன. இதில் கொழும்பு புனித பேதுரு, றோயல் மற்றும் கண்டி தர்மராஜ கல்லூரிகள் என்பன வெற்றியை சுவீகரித்துக் கொண்டன.

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

புனித பேதுரு கல்லூரியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் மொஹமட் அமீன் மற்றும் வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர் சந்தூஷ் குணதிலகவின் அபார பந்துவீச்சின் உதவியுடன் புனித அந்தோனியார் கல்லூரிக்கு எதிரான போட்டியில் புனித பேதுரு கல்லூரி 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக ஷனொன் பெர்ணான்டோ 58 ஓட்டங்களைப் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்தாலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் அந்தோனியார் கல்லூரியின் நிம்னக ஜயதிலக 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய அந்தோனியார் கல்லூரி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 137 ஓட்டங்களுக்கு சுருண்டது.

நிம்ன பெர்னாண்டோவின் சிறப்பாட்டத்தால் மெசனொட் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித பேதுரு கல்லூரி அணியினர், பபசர ஹேரத் (62) மற்றும் ரன்மித் ஜயசேன (59) ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி, 217 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித அந்தோனியார் கல்லூரியினர், 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 54 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.

பந்துவீச்சில் புனித பேதுரு கல்லூரியின் மொஹமட் அமீன் 10 விக்கெட்டுக்களையும், சந்தூஷ் குணதிலக 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அவ்வணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 169 (48.2) – ஷனொன் பெர்ணான்டோ 58, சந்தூஷ் குணதிலக 43, நிபுன பொன்சேகா 34, நிம்னக ஜயதிலக 6/57, கல்ஹார சேனாதீர 2/39

புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 137 (37.2) – மொஹமட் அப்ஸர் 27, மொஹமட் அமீன் 5/47, சந்தூஷ் குணதிலக 4/36

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 184 (43.3) – பபசர ஹேரத் 62, ரன்மித் ஜயசேன 59, கல்ஹார சேனாரத்ன 4/51, நிம்னக ஜயதிலக 4/91, நவோத்ய விஜேகுமார 2/33

புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 162 (55.1) – சுனெர ஜயசிங்க 52, தமாஷன அபேகோன் 31, மொஹமட் அமீன் 5/76, சந்தூஷ் குணதிலக 3/29

முடிவு – புனித பேதுரு கல்லூரி 54 ஓட்டங்களால் வெற்றி


புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

உபேந்திர வண்ரகுலசூரியவின் அபார பந்துவீச்சினால் சில்வெஸ்டர் அணிக்கெதிரான போட்டியில் தர்மராஜ கல்லூரி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

தர்மராஜ கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த புனித சில்வெஸ்டர் கல்லூரி 141 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் தர்மராஜ அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. சில்வெஸ்டர் அணியின் நிம்சர அத்தனகல்ல 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சில்வெஸ்டர் கல்லூரி அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

கடைசி வார பிரீமியர் லீக் போட்டிகளில் துறைமுக அதிகாரசபை, NCC வெற்றி

இதனையடுத்து 139 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தர்மராஜ கல்லூரி அணி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பந்துவீச்சில் தர்மராஜ கல்லூரியின் உபேந்திர வண்ரகுலசூரிய இரண்டு இன்னிங்சுகளிலும் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 141 (41.1) – அவிந்து ஹேரத் 50, விராஜித் எஹெலபொல 5/42, உபேந்திர வர்ணகுலசூரிய 4/22

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 130 (47.4) – கசுன் குணவர்தன 40, இசுரு தயானந்த 33, நிம்சர அத்தனகல்ல 7/40

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 128 (38.5) – அவிந்து ஹேரத் 36, உபேந்திர வண்ரகுலசூரிய 6/47, ருக்மால் திஸாநாயக்க 3/38

தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 142/4 (24.5) – கசுன் குணவர்தன 70*, பவந்த உடன்கமுவ 28, நதீர பாலசூரிய 2/26

முடிவு – தர்மராஜ கல்லூரி 6 விக்கெட்டுக்களால் வெற்றி


றோயல் கல்லூரி, கொழும்பு எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

சேர் பிரான்ங்க் குணசேகர கிண்ணத்திற்காக வருடாந்தம் நடைபெற்றுவரும் இப்போட்டித் தொடரில் கயான் ஷானக மற்றும் தெமால் பண்டாரவின் அபார பந்துவீச்சின் உதவியுடன் வெஸ்லி கல்லூரிக்கு எதிராக 131 ஓட்டங்களால் றோயல் கல்லூரி அபார வெற்றி பெற்றது.

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த றோயல் கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 150 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் வெஸ்லி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி கமில் மிஷார (80) மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் அரைச்சதங்களின் உதவியுடன் 6 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

சகீபைப் போல மெதிவ்ஸ் இல்லாததும் எமக்கு இழப்புதான் – தனுஷ்க குணதிலக

இதனையடுத்து 277 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. றோயல் கல்லூரியிக் கயான் ஷானக 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 150 (38.5) – கமில் மிஷார 35, பாக்ய திஸாநாயக்க 29, கவிந்து மதரசிங்க 26, தெவிந்து சேனாரத்ன 23, மொவின் சுபசிங்க 5/48, ஷெனால் தங்கல்ல 3/57, மொஹமட் உபைதுல்லாஹ் 2/28

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 104 (40) – ஷெனால் தங்கல்ல 30*, தெமால் பண்டார 4/18, லஹிரு மதுஷங்க 3/24

றோயல் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 231/6d (52.4) – பசிந்து சூரியபண்டார 69, கமில் மிஷாரா 80, தெவிந்து சேனாரத்ன 41, மொவின் சுபசிங்க 3/65, மொஹமட் உபைதுல்லாஹ் 3/65

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 146 (44) – ஜனித் நுவந்த 26, ஷெனால் தங்கல்ல 25, கயான் ஷானக 5/44, தெமால் பண்டார 3/35

முடிவு – றோயல் கல்லூரி 131 ஓட்டங்களால் வெற்றி

ஏனைய போட்டிகளின் முடிவுகள்…


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 243 (66) – புபுது பண்டார 76, அஷான் லொகுஹெட்டிகே 72*, அபிஷேக் ஆனந்த குமார 33, மொஹமட் அசாம் 3/57, பவித் ரத்னயாக்க 3/59, ஷெனொன் பெர்ணான்டோ 2/44

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்) – 176/8d (63) – மந்தில விஜேரத்ன 56, கிஷான் முனசிங்க 30, விமுக்தி நெதுமால் 3/50, ட்ரெவொன் பேர்சிவெல் 2/16

திரித்துவக் கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 179/7d (44.5) – புபுது பண்டார 68, ஹசிந்த ஜயசூரிய 53, கிஷான் முனசிங்க 2/24

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 49/2 (8) – கிஷான் முனசிங்க 22*, விமுக்தி நெதுமால் 2/25

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 194 (56.1) – துனித் வெல்லகே 51*, லக்‌ஷான் கமகே 30, ஜெஹான் டேனியல் 27, ரெவன் கெல்லி 21, பிரித்வி ஜெகராஜசிங்கம் 5/27, மஹீஷ் தீக்ஷன 2/58

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 183 (59.3) – கவீஷ ஜயதிலக 51*, டிலான் சதுரங்க 36, ரயான் பெல்சிங்கர் 31, மிரங்க விக்ரமகே 4/42, துனித் வெல்லகே 3/52, அஷேன் டேனியல் 2/42

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 201/6d (60) – நிபுன் சுமனசிங்க 100*, ஜெஹான் டேனியல் 41, லக்‌ஷான் கமகே 23*, மஹீஷ் தீக்ஷன 4/92, பிரித்வி ஜெகராஜசிங்கம் 2/36

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 45/1 (17)

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


இசிபதன கல்லூரி, கொழும்பு எதிர் தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு

இசிபதன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 180 (60.2) – லெஷான் அமரசிங்க 106, சிசிர வீரசிங்க 3/38, யொஹான் லியனகே 3/54, பவந்த ஜயசிங்க 2/43

தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 241 (71) – தினித் பிரபுத்த 85, யொஹான் லியனகே 52, சிசிர வீரசிங்க 35, அனுபம ஹேரத் 5/57, ஷமில்க விக்ரமதிலக 2/37

இசிபதன கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 135 (46) – அஷேன் குணவர்தன 51, சாலக பண்டார 3/22, யொஹான் லியனகே 3/40, பிமர ரனதுங்க 2/25

தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 6/1 (2)

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.