நிம்ன பெர்னாண்டோவின் சிறப்பாட்டத்தால் மெசனொட் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

124
Nimna Fernando

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் இன்று 6 போட்டிகள் ஆரம்பமாகியதுடன், மேலும் 2 போட்டிகள் நிறைவுக்கு வந்தன. இதில் கந்தான டி மெசனொட், கொழும்பு நாலாந்த கல்லூரிகள் பெற்றுக்கொண்ட முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தன.

புனித செபெஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை

நிம்ன பெர்ணான்டோ, மற்றும் பசிது ராஜமுனிந்திர ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் புனித செபஸ்டியன் கல்லூரிக்கு எதிரான போட்டியில் முன்னிலை பெற்ற டி மெசனொட் கல்லூரி அணி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்தது.

புனித செபெஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய செபெஸ்டியன் கல்லூரி, ஜனிஷ்க பெரேரா (73), மற்றும் தரூஷ பெர்ணான்டோ (56) ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய டி மெசனொட் கல்லூரி வீரர்கள் 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்று தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர். அவ்வணிக்காக வலதுகை துடுப்பாட்ட வீரரான நிம்ன பெர்ணான்டோ 89 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

சவிந்து பீரிஸ் 10 விக்கெட்டுகள்; பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 5 போட்டிகள்

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய புனித செபெஸ்டியன் கல்லூரி, 270 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செபெஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 298 (50.5) – ஜனிஷ்க பெரேரா 73, தரூஷ பெர்ணான்டோ 56, ப்ரவீன் குரே 47, ஷனெல் பெர்ணான்டோ 41, சாலிய ஜுட் 2/21, மலித் பெர்ணான்டோ 2/53, மார்க் மத்தயாஸ் 2/63

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 300/9d  (77) – நிம்ன பெர்ணான்டோ 89, பசிது ராஜமுனிந்திர 58, நதுன் டில்ஷான் 42, மிதில கீத் 34, பிரவீன் ஜயவிக்ரம 4/98, தரூஷ பெர்ணான்டோ 2/59

புனித செபெஸ்டியன் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 270 (63.2) – தரூஷ பெர்ணான்டோ 69, நுவனிது பெர்ணான்டோ 62, பிரவீன் குரே 33, சாலிய ஜுட் 4/82, ரொமல் பெர்ணான்டோ 3/73

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

மலியதேவ கல்லூரி மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி தம்முடைய முதல் இன்னிங்சில் 255 ஓட்டங்களை சேர்த்திருந்தது. அவ்வணியின் துலாஜ் ரணதுங்க 81 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நாலந்த கல்லூரி தம்முடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 259 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணிக்காக சமிந்து விஜேசிங்க (72) மற்றும் லக்‌ஷித ரசன்ஜன (56) ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்று வலுசேர்த்தனர்.

தொடர்ந்து தமது இரண்டவாது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 164 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நாலந்த வீரர்கள் 2 விக்கெட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 255 (62) – துலாஜ் ரணதுங்க 81, பிரையன் கருணாநாயக 43, சன்ஜீவன் பிரியதர்ஷன 43, கவின் அத்தபத்து 29, கவீஷ் மதுரபெரும 4/44, மஹிம வீரகோன் 3/31

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 259 (64.1) – சமிந்து விஜேசிங்க 72, லக்சித ரசன்ஜன 56, அவிஷ்க பெரேரா 36, துலாஜ் ரணதுங்க 3/53, மதுரங்க நவீன் 2/25, சுபுன் நிஸ்ஸங்க 2/29

மலியதேவ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 168 (62) – கவின் பண்டார 67, துலாஜ் ரணதுங்க 35, கயான் கருணாநாயக்க 23, ரவீன் டி சில்வா 4/30, மஹிம வீரகோன் 2/19, கவீஷ் மதுரப்பெரும 2/39

நாலந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 56/2 (7.5)

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்ஸை

புபுது பண்டார (76) மற்றும் அஷான் லொகுஹெட்டிகேவின் (72) அரைச்சதங்களின் மூலம் புனித தோமியர் கல்லூரிக்கு எதிராக திரித்துவக் கல்லூரி வலுவான நிலையை எட்டியுள்ளது.

அஸ்கிரிய மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய திரித்துவக் கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராட்சியம் தகுதி

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்…

இந்நிலையில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி 65 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 243 (66) – புபுது பண்டார 76, அஷான் லொகுஹெட்டிகே 72*, அபிஷேக் ஆனந்த குமார 33, மொஹமட் அசாம் 3/57, பவித் ரத்னயாக்க 3/59, ஷெனொன் பெர்ணான்டோ 2/44

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 65/4 (22) – கிஷான் முனசிங்க 30, ட்ரெவொன் பேர்சிவெல் 2/16


றோயல் கல்லூரி, கொழும்பு எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் வெஸ்லி கல்லூரியின் மொவின் சுபசிங்க 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 104 ஓட்டங்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த றோயல் கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 150 (38.5) – கமில் மிஷார 35, பாக்ய திஸாநாயக்க 29, கவிந்து மதரசிங்க 26, தெவிந்து சேனாரத்ன 23, மொவின் சுபசிங்க 5/48, ஷெனால் தங்கல்ல 3/57, மொஹமட் உபைதுல்லாஹ் 2/28

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 104 (40) – ஷெனால் தங்கல்ல 30*, தெமால் பண்டார 4/18, லஹிரு மதுஷங்க 3/24

றோயல் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 40/2 (11) – பசிந்து சூரியபண்டார 23*, மொவின் சுபசிங்க 2/20


புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

புனித பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெனடிக்ட் கல்லூரியனர், எதிரணியை துடுப்பாட பணித்தனர். இதன்படி. முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி கல்லூரி, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 194 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணியின் துனித் வெல்லகே ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் புனித பெனடிக்ட் கல்லூரியின் பிரித்வி ஜெகராஜசிங்கம் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த புனித பெனடிக்ட் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 194 (56.1) – துனித் வெல்லகே 51*, லக்‌ஷான் கமகே 30, ஜெஹான் டேனியல் 27, ரெவன் கெல்லி 21, பிரித்வி ஜெகராஜசிங்கம் 5/27, மஹீஷ் தீக்ஷன 2/58

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 107/6 (41) – டிலான் சதுரங்க 36, ரயான் பெல்சிங்கர் 31, அஷேன் டேனியல் 2/18, மிரங்க விக்ரமகே 2/24, துனித் வெல்லகே 2/24

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.


புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

தர்மராஜ கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித சில்வெஸ்டர் கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக அவிந்து ஹேரத் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் தர்மராஜ கல்லூரியின் விராஜித் எஹெலபொல 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் தர்மராஜ அணியினரும் மிகவும் மோசமாக துடுப்பெடுத்தாடி 130 ஓட்டங்களுக்கு சுருண்டனர்.

பந்துவீச்சில் புனித சில்வெஸ்டர் கல்லூரியின் நிம்சர அத்தனகல்ல 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

சகீபைப் போல மெதிவ்ஸ் இல்லாததும் எமக்கு இழப்புதான் – தனுஷ்க குணதிலக

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு

இந்நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பாதியில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சில்வெஸ்டர் கல்லூரி, விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்களைப் பெற்றது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 141 (41.1) – அவிந்து ஹேரத் 50, விராஜித் எஹெலபொல 5/42, உபேந்திர வர்ணகுலசூரிய 4/22

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 130 (47.4) – கசுன் குணவர்தன 40, இசுரு தயானந்த 33, நிம்சர அத்தனகல்ல 7/40

புனித சில்வெஸ்டர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 2/0 (1)


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித அந்தோனியார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித பேதுரு கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாட களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக ஷனொன் பெர்ணான்டோ 58 ஓட்டங்களைப் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்தாலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் அந்தோனியார் கல்லூரியின் நிம்னக ஜயதிலக 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய அந்தோனியார் கல்லூரி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 137 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் மொஹமட் அமீன் 5 விக்கெட்டுக்களையும், சந்தூஷ் குணதிலக 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைஇ ஆரம்பித்த புனித பேதுரு கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்களைப் பெற்றது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 169 (48.2) – ஷனொன் பெர்ணான்டோ 58, சந்தூஷ் குணதிலக 43, நிபுன பொன்சேகா 34, நிம்னக ஜயதிலக 6/57, கல்ஹார சேனாதீர 2/39

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 137 (37.2) – மொஹமட் அப்ஸர் 27, மொஹமட் அமீன் 5/47, சந்தூஷ் குணதிலக 4/36

புனித பேதுரு கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 8/0 (4)


இசிபதன கல்லூரி, கொழும்பு எதிர் தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு

தர்ஸ்ட்டன் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி, எஷான் அமரசிங்கவின் சதத்தின் (106) உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பாதியில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தர்ஸ்ட்டன் கல்லூரியினர், இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 180 (60.2) – எஷான் அமரசிங்க 106, சிசிர வீரசிங்க 3/38, யொஹான் லியனகே 3/54, பவந்த ஜயசிங்க 2/43

தர்ஸ்ட்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 90/6 (26) – சிசிர வீரசிங்க 35, சமில்க விக்ரமதிலக 2/17, அனுபம ஹேரத் 2/32