இலங்கை டெஸ்ட் அணியிலிருந்து விலகும் லஹிரு குமார

156

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமார மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோர் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிசிறந்த துடுப்பாட்ட பதிவுகளுடன் சமனிலையான முதல் டெஸ்ட் போட்டி

இரண்டு வீரர்களும் தசை உபாதைகளுக்கு ஆளானதை அடுத்தே, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக விலகியிருக்கின்றனர்.

இதில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய லஹிரு குமார குறித்த போட்டியின் மூன்றாம் நாளில் தசை உபாதைக்கு முகம்கொடுத்திருந்ததோடு, டில்ஷான் மதுசங்க பயிற்சிகளின் போது தசை உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

அதேநேரம் உபாதைக்கு ஆளான வீரர்களுக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் சாமிக்க கருணாரட்ன மற்றும் சைனமன் சுழல்பந்துவீச்சாளரான லக்ஷன் சந்தகன் ஆகியோர் இலங்கை டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவிலிருந்து மீண்டார் அக்ஷர் பட்டேல்

இந்த வீரர்களில் சாமிக்க கருணாரட்ன கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை டெஸ்ட் அணியினை ஒரு போட்டியில் பிரதிநிதித்துவம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, அவர் 39 உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார்.

மறுமுனையில் இலங்கை அணியினை 11 டெஸ்ட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருக்கும் லக்ஷான் சந்தகன், டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 37 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…