Home Tamil அதிசிறந்த துடுப்பாட்ட பதிவுகளுடன் சமனிலையான முதல் டெஸ்ட் போட்டி

அதிசிறந்த துடுப்பாட்ட பதிவுகளுடன் சமனிலையான முதல் டெஸ்ட் போட்டி

Bangladesh tour of Sri Lanka 2021

210
Bangladesh tour of Sri Lanka 2021

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி, வெற்றித்தோல்வியின்றி சமனிலையில் முடிவுக்கு வந்ததுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

>> திமுத்தின் கன்னி இரட்டைச்சதத்துடன் இமாலய ஓட்டங்களை எட்டிய இலங்கை

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி

தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், எப்டொட் ஹுசைன்

மூன்றாவது நாள் மதிய போசன இடைவேளைக்கு சிறிது நேரம் இருக்கும் போது, பங்களாதேஷ் அணி ஆட்டத்தை இடைநிறுத்தியதுடன், அந்த அணி சார்பாக நஜ்முல் ஹுசைன் சென்டோ 163 ஓட்டங்களையும், மொமினுல் ஹக் 127 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, இறுதிநாளான இன்றைய தினத்தின் மதியபோசன இடைவேளைவரை துடுப்பெடுத்தாடியது. அதன்படி, 8 விக்கெட்டுகளை இழந்து 648 ஓட்டங்களை ஓட்டங்களை குவித்தது. 

இலங்கை அணிசார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் திமுத் கரணாரத்ன தன்னுடைய கன்னி இரட்டைச்சதத்தை பதிவுசெய்தார். இதற்கு முதல் கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 196 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

எனினும், ஐந்தாவது நாளான இன்று களமிறங்கிய திமுத் கருணாரத்ன, 244 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியெறினார். மறுமுனையில் திமுத் கருணாரத்னவுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய தனன்ஜய டி சில்வா டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்து, 166 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக லஹிரு திரிமான்ன 58 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், டஸ்கின் அஹ்மட் 3 விக்கெட்டுகளையும், தாஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை நிறுத்தி, இன்றைய தினத்தின் மதியபோசன இடைவேளையுடன் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட பணித்திருந்தது.  107 ஓட்டங்கள் பின்னடைவில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

பங்களாதேஷ் அணிக்காக முதல் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்த நஜ்முல் ஹுசைன் சென்டோ ஓட்டங்களின்றியும், சயிப் ஹசன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரின் விக்கெட்டுகளை சுரங்க லக்மால் கைப்பற்றியிருந்தார். எனினும், இதன்பின்னர் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் தேநீர் இடைவேளை வரை துடுப்பெடுத்தாடினர்.

தேநீர் இடைவேளையின் போது, பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றிருந்தது. தமிம் இக்பால் 74 ஓட்டங்களையும், மொமினுல் ஹக் 23 ஓட்டங்களையும் பெற்று களத்தில் இருந்தனர். எனினும், துரதிஷ்டவசமாக போட்டியில் மழை குறுக்கிட ஆரம்பித்தது.

>> திமுத்தின் கன்னி இரட்டைச்சதத்துடன் இமாலய ஓட்டங்களை எட்டிய இலங்கை

தேநீர் இடைவேளையின் பின்னர், போட்டியில் தொடர்ந்தும் மழை குறுக்கிட்டதன் காரணமாக, சமனிலையில் போட்டியை நிறைவுசெய்வதற்கு இரண்டு அணித்தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். இதன்படி, நடுவர்கள் போட்டி சமனிலையில் முடிவடைந்ததாக அறிவித்தனர். 

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<