முஸ்பிகுர், முஸ்தபிசூர் அபாரம்: இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்

153
AFP

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டப்ளினில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் முஸ்பிகுர் ரஹீமின் பொறுப்பான ஆட்டம் மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மானின் அபார பந்துவீச்சினால் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் தற்போது அயர்லாந்தில் நடைபெற்று வருகின்றது.

அம்ப்ரிஸின் சதத்துடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த மேற்கிந்திய தீவுகள்

அயர்லாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் …….

இந்த நிலையில், நேற்று (13) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரராக ரெய்மன் ரீபரும், பங்களாதேஷ் அணியின் அறிமுக வீரராக அபூ ஜெயிட்டும் களமிறங்கியிருந்தனர்.

இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைக் குவித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப் 108 பந்துகளில் 87 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் 76 பந்துகளில் 62 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.

இறுதியாக அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதமடித்து அசத்திய சுனில் அம்ப்ரிஸ் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இந்த தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய டெரன் பிராவோ வெறும் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். இம்முறை உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இடம்பெறுள்ள பிராவோ, இவ்வாறு ஓட்டங்களைக் குவிப்பதில் தடுமாற்றத்தை சந்தித்து வருவது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தமீம், மொர்தசாவின் அபாரத்தால் மே.தீவுகளை வீழ்த்திய பங்களாதேஷ்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ……..

தொடர்ந்து மத்திய வரிசையில் களமிறங்கிய ரொஸ்டன் சேஸ் (19), ஜொனதன் கார்டர் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டழிக்க மேற்கிந்திய தீவுகள் அணி 99 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

எனினும், ஐந்தாவது விக்கெட்டுக்காக, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.

நிதானமாக ஓட்டங்களை குவித்த இருவரும் 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ஷ்ரபி மெர்தசாவின் பந்தில் ஷாய் ஹோப் 87 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் 62 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து வந்த பின்வரிசை வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைக் குவித்தது.

பங்களாதேஷ் தரப்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும், ஷ்ரபி மொர்தசா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வேகத்தால் மிரட்டிய மாலிங்கவின் இறுதி ஓவர் எவ்வாறு இருந்தது?

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து ………….

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு தமீம் இக்பால், சௌமிய சர்கார் ஜோடி நல்ல தொடக்கம் அளித்து அரைச்சத இணைப்பாட்டமொன்றை பெற்றுக்கொண்டனர். இதில் ஷ்லி நேர்ஸின் பந்துவீச்சில் 21 ஓட்டங்களுடன் தமீம் இக்பால் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த சகிப் அல் ஹசன் 29 ஓட்டங்களுடன் வெளியேற, நிதானமாக துடுப்பெடுத்தாடிய சௌமிய சர்கார் அரைச்சதம் கடந்த நிலையில் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த முஸ்பிகுர் ரஹீம் மற்றும் மொஹமட் மிதுன் ஆகியோர் 83 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

எனினும், ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சில், மொஹமட் மிதுன் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஐந்தாவது விக்கெட்டுகாக முஸ்பிகுர் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோர் 50 ஓட்டங்களை தமக்கிடையே பகிர்ந்ததன் மூலம் பங்களாதேஷ் அணி வெற்றியிலக்கை அடைந்தது.

இறுதியில் பங்களாதேஷ் அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இவ்வெற்றியின் மூலம் முத்தரப்புத் ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 10 புள்ளிகளைப் பெற்று பங்களாதேஷ் அணி முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, மேற்கிந்திய தீவுகள் அணி 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

உலகக் கிண்ணத்துக்கு முன்னரே ஆஸி. அணியை கலாய்க்கும் பார்மி ஆர்மி

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு………..

இதில் முஸ்பிகுர் ரஹீம் 63 ஓட்டங்களையும், மஹ்முதுல்லாஹ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, பந்துவீச்சில் ஷ்லி நேர்ஸ் 3 விக்கெட்டுகளையும், கிமார் ரோச் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணியின் முஸ்பிகுர் ரஹீம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதேநேரம், முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி லீக் போட்டியில் அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை (15) விளையாடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 247/9 (50) ஷாய் ஹோப் 87, ஜேசன் ஹோல்டர் 62, சுனில் அம்ப்ரிஸ் 23, முஸ்தபிசூர் ரஹ்மான் 4/43, மஷ்ரபி மொர்தசா 3/60

பங்களாதேஷ் அணி 248/5 (47.2) – முஸ்பிகுர் ரஹீம் 63, சௌமிய சர்கார் 54, மொஹமட் மிதுன் 43, மஹ்முதுல்லாஹ் 30*

முடிவு – பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<