அவுஸ்திரேலிய அணிக்கு போனஸ் புள்ளி வெற்றி

517
Tri-Nation Series - West Indies v Australia
 

10 போட்டிகளைக் கொண்ட அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்புக் கிரிக்கட் தொடரின் 2ஆவது போட்டி  நேற்று  ஜூன் மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டியில் போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ்  ஸ்மித் முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் 116/10 (32.3)

ஜொன்சன் சார்ல்ஸ் 22
கார்லோஸ் ப்ரத்வைட் 21
டெரன் ப்ராவோ 19
நேதன் லியொன் 39/3
எடம் சம்பா 16/3

சரே அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றார் சங்கா

அவுஸ்ரேலிய 117/4 (25.4)

டேவிட் வோர்னர் 55*
உஸ்மான் கவாஜா 27
எரொன் பின்ச் 19
சுனில் நரேன் 19/2

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 146 பந்துகள் மீதமிருக்க 6 விக்கட்டுகளால் போனஸ் புள்ளிகளோடு வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக நேதன் லியொன் தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்